Advertisements

ஏன்? எதற்கு? எதில்? – ஃப்ளூரைடு – (Fluoride)

மக்கு அதிகம் பரிச்சயமில்லாத ஒரு தாது உப்பு ஃப்ளூரைடு. அதன் தேவை குறைவாக இருந்தாலும் நமது உடலில் பற்கள், எலும்புகள் போன்றவற்றின் உறுதியைக் காப்பதில் ஃப்ளூரைடு மிக முக்கியப் பணியைச் செய்கிறது. பல் சிதைவைத் தடுத்து எனாமலைப் பாதுகாக்கிறது. உணவில் உள்ள பாக்டீரியா மற்றும் அமிலத்தின் பாதிப்பில் இருந்தும், இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் வரும் பற்சிதைவிலிருந்தும் பற்களைக் காப்பதும் அதுதான்.  

ஃப்ளூரைடு அதிகம் உள்ள உணவுப்பொருள்கள்:

* காய்ந்த திராட்சை.

* காய்ந்த மொச்சை போன்ற விதைகள்.

* கோகோ பவுடர், தேநீர்.

* அக்ரூட்.

* கடல்மீன்கள், இறால் மற்றும்  நண்டு.

* கிணற்று நீர்.

ஃப்ளூரைடு அதிகமாவதால் ஏற்படும் பக்க விளைவுகள்:

* வயிற்று உபாதைகள், வாந்தி.

* ரத்தத்தில் கால்சியத்தின் அளவு அதிகமாதல்.

ஃப்ளூரைடு குறைவதால் ஏற்படும் பிரச்னைகள்:

* பல் சிதைவு அதிகமாகும்.

* எலும்புகள் மென்மையாகும்.

* எலும்புகளின் அடர்த்தி குறையும்.

ஒருநாளைக்கு எவ்வளவு ப்ளூரைடு தேவை?

பெண்கள் – (19 வயதிற்கு மேல்) 3 மில்லி கிராம்

ஆண்கள்: – 4 மில்லிகிராம்

குழந்தைகள் – (1-18 வயது) 7-3 மில்லிகிராம்.

Advertisements
%d bloggers like this: