Advertisements

கூகுள் டாக்டரை நம்பலாமா?

லைவலியோ, மூட்டுவலியோ அல்லது வேறு ஏதேனும் உடல்நலக் குறைவுக்கான சின்ன சமிக்ஞைகள் தெரிந்தாலோ இப்போதெல்லாம் நாம் என்ன செய்கிறோம்? கூகுளில் அந்த அறிகுறியைப் பற்றித் தேடிப் படிக்கிறோம். அது என்ன சொல்கிறதோ அதை உண்மை என

நம்பிவிடுகிறோம். அதிகரித்து வரும் இந்தப் பிரச்னையை ‘சைபர்கோண்ட்ரியா’ (Cyberchondria)  என அழைக்கிறார்கள் மனநல மருத்துவர்கள். 

மருத்துவமனைகளுக்கு வருபவர்களில் ஐந்தில் ஒருவர்  இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாக இம்பீரியல் காலேஜ் மற்றும் கிங்ஸ் காலேஜ் ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
இந்தக் கல்லூரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உளவியல் பேராசிரியர் பீட்டர் டைரர் இது பற்றிக் கூறும்போது, “சைபர்கோண்ட்ரியா குறித்த ஆராய்ச்சியை 2000-ல் செய்யத் தொடங்கியபோது வெறும் 20 சதவிகிதத்தினரே இதனால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை இரட்டிப்பு ஆகியிருக்கக்கூடும். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடம்பில் தெரியும் பல அறிகுறிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பார்ப்பதே இதில் மோசமான நிலை. அதாவது தலைவலி முதல்  நெஞ்சு வலி வரை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து கூகுளில் தேடுவார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.
மாறிப்போன இன்றைய வாழ்க்கை முறையால் பலருக்கும் நேரடி மருத்துவ ஆலோசனைக்கு நேரம் கிடைப்பதில்லை. டயட் ஆப்ஸ், வீட்டிலேயே உடல்நலத்தைச் சோதனை செய்யும் கருவிகள் எனப் பல விஷயங்கள்  மக்களைக் குழப்புகின்றன.  தாமாகவே முன் வந்து சுய நோய் கண்டறிதல் சோதனையில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. கூகுள் டாக்டரைத் தேடுவோரில் மூன்றில் இருவருக்குக் கவலைப்படும்விதமாக எந்தப் பிரச்னைகளும் இருப்பதில்லை என்பது வேடிக்கையான விஷயம். இருப்பினும் அவர்களின் தேடல் தொடர்கிறது.
‘‘மருத்துவ இணையதளங்களில் கிடைக்கும் தகவல்களைப் பெரும்பாலானோர் மறுபரிசீலனை செய்வதே இல்லை. ஆனாலும், அனாவசியமாகக் கவலை கொள்கின்றனர். நமக்கு ஒன்றுமில்லை என நம்புவதே நோய் தீர்க்கும் மாமருந்து என்பதை அவர்கள் நம்ப வேண்டும்’’ என்கிறார் பீட்டர் டைரர்.
நம்புவோம்.

Advertisements
%d bloggers like this: