Advertisements

பாரம் சுமக்கும் குழந்தைகள் பரிதவிப்புக்குத் தீர்வு என்ன?

முதுகில் மூட்டை சுமப்பதுபோல புத்தகப் பையைச் சுமக்கிறார்கள் இன்றைய பள்ளிக் குழந்தைகள். விளைவு, சிறு வயதிலேயே தோள்பட்டை வலி, முதுகு வலி என

அவதியுறுகிறார்கள். இதற்குத் தீர்வு சொல்கிறார், குழந்தைகள் நல மருத்துவர், தனசேகர் கேசவலு.  

பிள்ளைகளின் இரண்டு தோள்பட்டைகளிலும், பையின் இரண்டு ஸ்ட்ராப்களையும் சரியாக மாட்டிக்கொள்ளப் பழக்குங்கள். இதனால், இரண்டு தோள்களிலும் எடை சமமாக இருந்து, தோள்பட்டை வலியைத் தடுக்கும்.
தோளில் மாட்டும் ஸ்ட்ராப்கள் பட்டையாகவும், உள்ளே பேட் வைத்தும் இருந்தால், குழந்தைகளின் தோள்பட்டைகளை அழுத்தாது; வலிக்கவும் செய்யாது.
ஸ்டைலுக்காக, இடுப்புக்குக் கீழே தொங்குகிற அளவுக்குப் பையை மாட்டிக்கொண்டால் நிச்சயம் வலி உண்டாகும். இதைத் தவிர்க்கவும்.
புத்தகப் பையை வாங்கும்போது, பிள்ளைகளையும் அழைத்துச் சென்று, அவர்களின் தோளில் மாட்டி, உயரத்துக்கு ஏற்ப வாங்குங்கள்.
பிள்ளைகளின் உயரத்துக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்கிற பையாக வாங்குவது புத்திசாலித்தனம்.
எல்லாப் புத்தகங்களையும் பைக்குள் திணித்து அனுப்பாமல், ஒரு நாளைக்குத் தேவையான புத்தகங்களை மட்டும் வையுங்கள்.
தினமும் எல்லாப் புத்தங்களையும் கொண்டுபோயே தீர வேண்டுமென்றால், சில புத்தகங்களை வகுப்பிலேயே வைக்க அனுமதி பெறுங்கள்.
சில புத்தகங்களைக் கைகளில் எடுத்துச் செல்லலாம்.
பின்பக்கம் கனமான பைகளை மாட்டும்போது, லேஸ் வைத்த ஷூ அணிந்தால் நல்ல பேலன்ஸ் கிடைக்கும். இது காலுடன் அணைத்ததுபோல இருப்பதால், நடக்கும்போதும் கனமான எடையைத் தூக்கும்போதும் லைட் வெயிட் ஃபீலிங் இருக்கும். இந்த ஃபீலிங் வெல்க்ரோ ஷூவில் கிடைக்காது.
பிள்ளைகள் உடம்பில் தினசரி சூரிய ஒளி படும் வகையில் நடமாட விடுங்கள். இதுவும் வலியைத் தடுக்கும்.

Advertisements
%d bloggers like this: