Daily Archives: ஜனவரி 4th, 2018

ராங் கால் -நக்கீரன் 2.1.2018

ராங் கால் -நக்கீரன் 2.1.2018

Continue reading →

தினகரனுக்கு ஜெயில்! -நக்கீரன் 2.1.2018

தினகரனுக்கு ஜெயில்! -நக்கீரன் 2.1.2018

Continue reading →

தனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றி மற்றவர்கள் பதிவிடுவதை தவிர்க்க பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்

சான்பிரான்சிஸ்கோ: பேஸ்புக்கில் ஒருவரின் புகைப்படத்தை மற்றொரு நபர் வெளியிட்டால் சம்மந்தப்பட்ட நபருக்கு தெரியப்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒருவரின் பேஸ்புக் ப்ரோபைல் ப்ரோபைல் பிக்சர் எனப்படும் சுயவிவர படங்களையும், மற்றவர்கள் பதியேற்றம் செய்யும் புகைப்படங்களையும் முக அடையாளங்களை கண்டறியும் தொழில்நுட்பம் மூலம் அறிய முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் பேஸ்புக் பயனாளி ஒருவரின் புகைப்படத்தை, அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியே மற்றோரு நபர் பதிவிட்டால், குறிப்பிட்ட அந்த பயனாளிக்கு தெரிவிக்கப்படும். இந்த தொழில்நுட்பத்தால் ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றி மற்றவர்களால் பதிவிடுவதை தவிர்க்க முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

டாக்டருக்கு குடும்பம் தெரியணும்

முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன் வரையில் கூட, ‘குடும்ப டாக்டர்’ என்ற ஒருவர் உண்டு. பழைய சினிமாக்களில், வீட்டில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால், ‘பிரீப்கேசு’டன் டாக்டர் வீட்டிற்கே வந்து, நோயாளியை பரிசோதித்து, தேவையான மருத்துவத்தை செய்த பின், வீட்டில் அனைவரிடமும் நலம் விசாரித்து போவார். குடும்ப

Continue reading →

எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

யூனிஃபை ஜி.மாறன் எழுதும் சிறப்பு கட்டுரை

ஜி.மாறன் செயல் இயக்குநர், யுனிஃபை கேப்பிட்டல் (Unifi Capital).

2018 இதோ வந்தேவிட்டது. ‘இந்த ஆண்டில் நம் அஸெட் அலோகேஷன் எப்படி இருக்க வேண்டும்?’ என்கிற  கேள்வி எல்லா  முதலீட்டாளர்களின் மனதிலும் இருக்கும். நமது செல்வத்தைப் பெருக்க உதவும் அந்த அஸெட் அலோகேஷன் வழிமுறைகளைப் பார்க்கும்முன், சில கேள்விகள்…  

1. பங்குச் சந்தை நன்கு ஏற்றம் கண்டிருக்கும் இந்தச் சமயத்தில் நம்  முதலீட்டை அதிகரிக்கலாமா?

Continue reading →

தலை அரிப்பை குணப்படுத்தும் மருத்துவம்

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய பொருட்கள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தலையில் உண்டாகும் அரிப்பை குணப்படுத்தும் மருத்துவத்தை பார்க்கலாம்.
இப்பிரச்னைக்கு ஆவாரம் பூ, அருகம்புல், பூண்டு, மஞ்சள் ஆகியவை மருந்தாகிறது. தலையின் மேல் உள்ள தோல் பகுதியில் ஏற்படும் அரிப்பு காரணமாக செதில் செதிலாக மாவுபோன்று கொட்டுகிற நிலை, ஈறு மற்றும் பேன்கள் உருவாவது, பொடுகு தொல்லை, இதை தொடர்ந்து உடலில் அரிப்பு, சொரி போன்றவை ஏற்படும். பொடுகினால் அரிப்பு உண்டாகும். சொரியாசிஸ்

Continue reading →

வாரம் 1 நாள் தேங்காய் பாலை பயன்படுத்தி எப்படி உங்கள் சரும அழகை இளமையாக்கலாம்?

உங்கள் சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய் பாலை பயன்படுத்தலாம். தேங்காய் பால் குளிர்ச்சியானது. அதிக புரதச் சத்துக்கள் கொண்டது. வயிற்றுப் புண்களை ஆற்றும். புது செல்களை உருவாக்கும். அதிக ஆன்டி ஆக்ஸெடெட்ன் நிறைந்தவை.
Continue reading →

மொபைல் எண்னுடன் ஆதார் எண் இணைக்க டோல் – ஃபீரி 14546

மொபைல் சிம் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மூன்று புதிய வழிமுறைகளை வருகின்ற ஜனவரி 1 முதல் செயற்படுத்த மத்திய தொலைத்தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.

மொபைல்-ஆதார்

மத்திய அரசின் அறிவிப்பின் படி பயன்பாட்டில் உள்ள அனைத்து மொபைல் எண்களுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆதார் கார்டு எண்ணை இணைக்க அருகாமையில் உள்ள தொலைத்தொடர்பு ரீடெயிலரிடம் சென்று இணைக்கும் வகையிலான வழிமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வருகின்ற ஐனவரி 1 முதல், ஆதார் எண்ணை இணைக்க மூன்று விதமான சுலபமான வழிமுறைகளை செயற்படுத்த உள்ளது. அதன் விபரம் பின் வருமாறு ;-

1 . மொபைல் எண் வாயிலாக ஐவிஆர்எஸ் ((IVRS)) எனப்படும் அழைப்பு வாயிலாக ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
2 . OTP எனப்படுகின்ற ஒரு முறை கடவுச்சொல் கொண்டு மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட உள்ளது.
3. இறுதியாக, ஆதார் எண்ணை இணைக்க பிரத்தியேக ஆப் ஒன்றை செயற்படுத்த திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்என்எல், வோடபோன், ஏர்டெல், ஏர்செல்,ஐடியா போன்ற பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரிடம் ஆதார் எண் இணைக்க மேலே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற உள்ளது.
இதுவரை அருகாமையில் உள்ள ஸ்டோர்களுக்கு சென்று ஆதார் எண்னை இணைக்க வேண்டிய நிலை இருந்த சூழ்நிலையில், முதற்கட்டமாக ஆதார் இணைக்கப்பட வேண்டிய மொபைலில் இருந்து அழைக்கும் முறையை அறிந்து கொள்ள பினபற்ற வேண்டிய வழிமுறை பின் வருமாறு ;-
1 . உங்கள் மொபைலில் இருந்து 14546 என்ற ஐவிஆர்எஸ் (IVRS) எனண்ணுக்கு அழையுங்கள்
2.அழைத்த பின்னர் மொழி தேர்ந்தெடுத்த பிறகு இந்திய பிரஜையா அல்லது வெளிநாட்டவரா என்ற கேள்விக்கு பதிவு செய்ய வேண்டிய எண்னை அழுத்திய பிறகு ஆதார் எண் இணைக்க என்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.
3. உங்கள் ஆதார் எண் பதிவு செய்த பிறகு உங்கள் ஆதார் எண் உறுதி செய்யப்பட உங்களது மொபைல் எண்னுக்கு OTP மெசேஜ் வந்து சேரும் அதனை உறுதிப்படுத்திய பிறகு ஆதார் எண் இணைக்கப்பட்ட எஸ்எம்எஸ் வந்து சேரும்.

உச்சநீதிமன்றம் அறிவித்தபடி ஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் இணைக்க வரும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது