Advertisements

அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ள நடிகர் ரஜினி… அசத்தல்!

அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டுள்ள நடிகர் ரஜினி அசத்தலாக காய் நகர்த்தி வருகிறார். நீண்ட காலமாக அரசியலில் இருக்கும் தலைவர்களின் எதிர்ப்புக்கு அஞ்சாமல் தனக்கு நெருக்கமான தலைவர்களை தொடர்ந்து, சந்தித்து ஆலோசனை பெற்று வருகிறார். இதை பார்க்கும்போது படிப்படியாக அடியெடுத்து வைத்து ‘பாய’ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் தன் கட்சிக்கான பெயர், சின்னம் தயாரிப்பு பணிகளிலும் அவர் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக ரசிகர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.

தன் 68 வயதில் நடிகர் ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அரசியலில் பிரவேசிப்பதாக டிச. 31ல் அறிவித்தார்.
‘உள்ளாட்சி தேர்தலுக்கு குறைந்த காலமே இருப்பதால் அதில் போட்டியில்லை.

அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன்’ என அறிவித்துள்ளார்.

ரஜினி அரசியல்,Rajini politics, நடிகர் ரஜினி, actor Rajini,  சட்டசபை தேர்தல், assembly election, ரஜினி மன்றம்,rajini mandram, ஆன்மிக அரசியல்,aanmeega arasiyal, ராமகிருஷ்ண மடம்,Ramakrishna Math, சுவாமி கவுதமானந்தா,Swami Gautamananda, ஸ்டாலின்,Stalin,  கருணாநிதி,Karunanidhi,  ஆர்.எம்.வீரப்பன்,RM Veerappan,  அரசியல் பிரவேசம்,political entry,  spiritual politics,

அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினி சில நாட்களில் அமைதியாகி விடுவார் என மற்ற கட்சிகள் எதிர்பார்த்தன. ஆனால் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட மறுநாள் ‘ரஜினி மன்றம்’ என்ற பெயரில் இணையதளம் மற்றும் ‘மொபைல் ஆப்’

Advertisement

இணைப்பை துவக்கி உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை ஆரம்பித்தார்.
‘எனது அரசியல் ஆன்மிக அரசியல்’ என துணிச்சலாக அறிவித்துள்ள அவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி கவுதமானந்தாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவர் அறிவித்த ‘ஆன்மிக அரசியலுக்கு’ திராவிட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூட, நேற்று முன்தினம் கடும் எதிர்ப்பை காட்டியிருந்தார்.
தி.மு.க., தலைவர், கருணாநிதியை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்து, தன் அரசியல் பிரவேசத்தை தெரிவித்து, வாழ்த்து பெற்றார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ஸ்டாலின், தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.
நேற்று எம்.ஜி.ஆர்., கழகத் தலைவர், ஆர்.எம்.வீரப்பனை சந்திக்க, தி.நகரில் உள்ள அவர் வீட்டுக்கு சென்றார். அவரிடம், கட்சி துவங்கப் போகும் விபரத்தை தெரிவித்து, வாழ்த்து பெற்றார். இருவரும் நீண்ட நேரம் தற்போதைய அரசியல் குறித்து ஆலோசித்தனர். அரசியலில் நீண்ட கால அனுபவம் வாய்ந்த வீரப்பன் பல ஆலோசனைகளை ரஜினிக்கு வழங்கி உள்ளார்.
அடுத்தடுத்து தலைவர்களை சந்தித்து வரும் ரஜினி படிப்படியாக அரசியலில் அடி எடுத்து வைத்து விரைவில் பல வெற்றிகளை குவிக்க திட்டமிட்டுள்ளார் என ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த சந்திப்புகளுக்கு இடையே அவர் துவங்க உள்ள கட்சிக்கு பெயர் மற்றும் சின்னம் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதிலும் ரஜினி ஆர்வமாக ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் அவரின் அரசியல் பிரவேசம் குறித்து மக்கள் என்ன நினைக்கின்றனர்; அவர்கள் எதிர்பார்ப்பு என்ன என்பது போன்ற தகவல்களை சேகரிக்கும் வேலையும் நடந்து வருகிறது. மக்களின் எண்ண ஓட்டத்திற்கேற்ப அடுத்தடுத்த நடவடிக்கைகளை திட்டமிடுவது என்றும் தினமும் ஏதேனும் ஒரு நடவடிக்கை மேற்கொள்வது என்றும் ரஜினி மிகவும் கவனமாக காய் நகர்த்தி வருகிறார்.

Advertisements
%d bloggers like this: