Advertisements

ஆரோக்கியத்தின் நிறம் சிவப்பு

ம்மில் பலருக்கு `பீட்ரூட்’ என்ற பெயரே அலர்ஜி. விதவிதமான காய்கறிகளைத் தேடி, ரசித்துச் சாப்பிடுபவர்கள்கூட இதனிடமிருந்து எட்டியே நிற்பார்கள். பீட்ரூட்டின் மகத்துவம் புரிந்தவர்கள் அதை ஒதுக்க மாட்டார்கள்.  மருத்துவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்குச் சொல்லும் முக்கியமான அறிவுரை… `கிழங்குகளுக்கு `நோ’ சொல்லுங்கள்’ ஆனால், `சர்க்கரை நோயாளிகள்கூட வாரத்துக்கு ஒருமுறை பீட்ரூட் சாப்பிடலாம்… அளவாக’ என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.  

வழக்கமான காய்கறிகளில் இருந்து சற்று வித்தியாசமான சுவை, அதே நேரத்தில் அதிகச் சத்துகள் கொண்டது. தெற்கு ஐரோப்பாதான் பீட்ரூட்டின் பூர்வீகம். ஆரம்பத்தில் பீட்ரூட் செடியில் இருந்த இலைகளைத்தான் மனிதர்கள் உணவாகப் பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் பீட்ரூட் கிழங்கும் நம் உணவாக மாறத் தொடங்கியது. பீட்ரூட் அள்ளித் தரும் பலன்கள் சில…
மனித உடலின் முக்கிய உறுப்பு கல்லீரல். பழுதுபட்டாலும் தனக்குத்தானே சரிப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் கொண்டது. கல்லீரல் ஆரோக்கியம் காப்பதில் பீட்ரூட் பெரிதும் உதவுகிறது.
முகப்பருக்கள் போன்ற பிரச்னைகள் வராமல், சருமத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவும்.
இதில் உள்ள பீட்டெயின் (Betaine) மன இறுக்கத்தைக் குறைத்து மனதை அமைதியாக வைத்திருக்க உதவும்.
தினசரி உணவில் சேர்த்துக்கொண்டாலும், எந்த உடல்நல பாதிப்பும் ஏற்படாது. காரணம் பீட்ரூட்டில் இருப்பது குறைவான கொழுப்புதான்.
இதில் நிறைந்திருக்கும் மக்னீசியமும் இரும்புச்சத்தும் உடல் சோர்வு, அனீமியா போன்ற பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும்.

Advertisements
%d bloggers like this: