Advertisements

குளூட்டன் ஃப்ரீ டயட் – ஏன்? எதற்கு? எப்படி?

டல் இயக்கம், ஆரோக்கியம், தசைகளின் வளர்ச்சிக்கு அவசியமானது புரதச்சத்து. ஆனால், நாம் சாப்பிடும் எல்லா உணவுகளிலும்  உடலுக்குத் தேவையான அளவுக்குப் புரதம் கிடைப்பதில்லை. சத்தான, ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டாலும்கூட சிலருக்குப் புரதக் குறைபாடு ஏற்படுகிறது. இது ஏன் என்பது குறித்து விளக்குகிறார்

உணவியல் நிபுணர் ஷைனி சுரேந்திரன்.

“புரதச்சத்துக் குறைபாடு என்பது வெறும் புரதம் மட்டுமே சார்ந்ததில்லை. புரதச்சத்தில் உள்ள கூட்டுப் பொருள்களின் அளவு அதிகமாவது, குறைவதாலும்கூட இது ஏற்படலாம். அதே நேரத்தில் புரதத்தில் உள்ள குளூட்டன் சத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது, `குளூட்டன் இன்டாலரன்ஸ்’ நிலை எனப்படும். புரதச்சத்திலுள்ள ஒரு கூட்டுப் பொருள்தான் குளூட்டன். குளூட்டன் இன்டாலரன்ஸ் நிலையைத் தவிர்க்க உதவுவதுதான் `குளூட்டன் ஃப்ரீ டயட்’ என்ற உணவு முறை.’’

குளூட்டன் இன்டாலரன்ஸ் (Gluten Intolerance)

கோதுமை, பார்லி, கம்பு போன்றவற்றில் இயல்பாகவே குளூட்டன் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் புரதத்தில் இருக்கும் குளூட்டன் உணவுடன் சேரும்போது குளூட்டனின் அளவு அதிகரித்து, சிறுகுடலைப் பாதிக்கும். இதனால் சிலருக்கு ஒவ்வாமை, செரிமானக்கோளாறு ஏற்படலாம். இதன் அடுத்த நிலையாகச் சிலருக்கு மூலம், `இர்ரிடபுள் பவல் சிண்ட்ரோம்’ எனப்படும் நாள்பட்ட குடல் நோய் ஏற்படலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கலாம்.

ஃபுட் அலர்ஜி, ஃபுட் இன்டாலரன்ஸ் இரண்டும் வெவ்வேறா?

பொதுவாக நாம் உண்ணும் உணவு உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். ஃபுட் இன்டாலரன்ஸ், ஃபுட் அலர்ஜி இரண்டின் அறிகுறிகளும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், இரண்டும் வெவ்வேறு.

* உணவு ஒவ்வாமையால் ஏற்படும் உடல் பாதிப்புகளை `ஃபுட் அலர்ஜி’ என்கிறோம். சில நேரங்களில், அலர்ஜி உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதாகவும் இருக்கும்.

* உணவு ஒவ்வாமையால் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றம், உடலின் பல பாகங்களைப் பாதிக்கும். இதைத்தான் `ஃபுட் இன்டாலரன்ஸ்’ என்கிறோம். இது நாள்பட்ட செரிமானக் கோளாறு களை ஏற்படுத்தும். 

குளூட்டன் இன்டாலரன்ஸால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

* மூட்டு, சருமத்தில் இயல்பாகவே நோய் எதிர்ப்புசக்தி குறைதல் (Autoimmune Disorder). 

* எந்த விதமான உடல் பாதிப்பும் இல்லாமல் ஏற்படும் அலர்ஜி, உடல்நலக் கோளாறு போன்றவற்றால் ஏற்படும் நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு.

* உணவு ஒவ்வாமையால் ஏற்படும் அலர்ஜி, இருமல், மூச்சுத்திணறல்.

பரிசோதனை

‘செலியாக் பேனல்  டெஸ்ட்’ (Celiac Panel Blood Test) எனும் ரத்தப் பரிசோதனை மூலம் குளூட்டன் இன்டாலரன்ஸைக் கண்டறிய முடியும்.

சிகிச்சை

உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் பரிந்துரைக்கப்படும். குளூட்டன் ஃப்ரீ டயட் மூலம் இதைச் சரிசெய்ய முடியும். குடல் இரைப்பை நிபுணர்களின் ஆலோசனைப்படி சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

குளூட்டன் ஃப்ரீ டயட் சாட்

காலை உணவு: இட்லி, தோசை, ராகி, கம்பு, சோள தோசை, தேங்காய்ச் சட்னி, புதினா சட்னி, அடை, இஞ்சி சட்னி.

முற்பகல்: மோர், லெமன் ஜூஸ், கிரீன் டீ அல்லது கிரீன் காபி.

மதிய உணவு: அரிசி, முழு தானியங்கள், சாம்பார், மோர்க்குழம்பு, தக்காளிக் குழம்பு, பொரியல் இரண்டு கப், கீரை (வாரம் இருமுறை) தேன் மற்றும்  மோர் அல்லது கொள்ளு ரசம் (குளிர் காலத்தில்).

மாலை ஸ்நாக்ஸ்: நாட்டுச்சர்க்கரை கலந்த காபி, டீ, ஃப்ரெஷ் தேங்காய்த் துண்டுகள், பாதாம், பழங்கள், பருப்பு வகைகள்.

இரவு உணவு:
முழுதானிய உப்புமா, தோசை, இட்லி, இடியாப்பம், ஆப்பம், அடை.

தவிர்க்க:
கோதுமை, தானிய மாவு, பிரெட், குக்கீஸ், பிஸ்கெட், பதப்படுத்தப்பட்ட பானங்கள்.


 

குளூட்டன் இன்டாலரன்ஸ் அறிகுறிகள்

* வீக்கம்

* உப்புசம்

* அடிவயிற்றில் வலி அல்லது அசெளகர்யம்

* வயிற்றுப்போக்கு

* மலச்சிக்கல்

* தசைப்பிடிப்பு

* தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி

* முகப்பரு

* சோர்வு

* மூட்டுவலி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: