Advertisements

விக்கல் எனும் சிக்கல் தீர என்ன வழி?

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விக்கல் வந்த உடனே தண்ணீர் குடித்து  நிறுத்துகிறோம். ஒரு சிலருக்கு தொடர்ந்து விக்கல் வருகிறது. சிலருக்கு  விக்கல் ஒரு நோயாகவே இருக்கிறது. எனவே விக்கல் எனும் சிக்கல் தீர என்ன வழி  என்று பார்ப்போமா…
* மிளகு அல்லது மயிலிறகைச் சாம்பலாக்கி ஒன்று அல்லது இரண்டு கிராம் பசு நெய்யில் கொடுக்க விக்கல் தீரும்.

*  அரச  மரப்பட்டையைத் தூளாக்கி ஒன்று அல்லது இரண்டு சிட்டிகை நீரில் ஊறவைத்து  வடிகட்டிக் கொடுக்க விக்கல், தொண்டைக் கட்டு குறள்வளை நோய் தீரும்.
*  தொடர்ந்து  விக்கல் வந்து கொண்டே இருந்தால் கடுகை அரைத்து நெஞ்சுக் குழியில் பற்று  போடலாம். மேலும் கடுகை வெந்நீரில் ஊறவைத்து ஒரு அவுன்ஸ் கொடுத்துவந்தால்  விக்கல் கட்டாயம் நின்றுவிடும்.
*  சிறிது சீரகத்தை அரைத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி, விக்கல், சொரியாமை ஆகியவை குணமாகிவிடும்.
*  உருத்திராட்சக் கொட்டையை பாலில் உரைத்து உபயோகித்து வந்தால் திரிஷோஷம், விக்கல், பித்தம், தாகம் ஆகியவைகள் குணமாகிவிடும்.
*  விக்கலை  நிறுத்த ஒரு டீ ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டு கரையும் முன்பே  விழுங்கவும். மணல் போல தொண்டையில் இறங்கும் சர்க்கரை அங்குள்ள நுண்ணிய  நரம்பு  முனைகளை வருடி விக்கல் தொடரக் காரணமான நரம்பை அமைதிப்படுத்தும்,  விக்கலும் விரைவில் நின்றுவிடும்.
*  பனை ஓலையை சுட்டு கரியாக்கி தேனில் குழைத்துக் கொடுத்தால் விக்கல், வாந்தி நின்றுவிடும்.
*  சுக்கை பொடி செய்து தேனில் குழைத்து நாக்கில் தடவினால் உடனே விக்கல் தீரும்.
*  கீழாநெல்லி செடியின் வேரை வாயில் போட்டு சிறிது நேரம் வைத்திருந்தால் விக்கல் நின்றுவிடும்.
*  திப்பிலி,  சீரகம் இரண்டையும் சமஅளவு எடுத்து தூள்செய்து வைத்துக் கொண்டு ஒரு கரண்டி  தேனில் இரண்டு சிட்டிகை தூள் கலந்து சாப்பிட்டால் விக்கல் நின்றுவிடும்.

Advertisements
%d bloggers like this: