Advertisements

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் என்பது எண்ணெய்ப் பசையுள்ள ஒரு பொருள். நம் உடல் இயங்கத் தேவையான இது, மூன்று வழிகளில் கிடைக்கும். 

நம் உடலின் உள்ளுறுப்பான கல்லீரல், கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும்.

நாம் உண்ணும் அசைவ உணவிலிருந்து கொலஸ்ட்ரால் நேரடியாகக் கிடைக்கும்.

சைவ உணவுகளில் இருந்தும் எண்ணெய்ப் பதார்த்தங்களில் இருந்தும் கிடைக்கும் டிரான்ஸ் ஃபேட் (Trans Fat), சாச்சுரேட்டட் ஃபேட் (Saturated Fat) இரண்டையும் நம் உடல் கொலஸ்ட்ராலாக மாற்றும். மேலும், அதிகமாகச் சாப்பிடும் இனிப்பும் கொலஸ்ட்ராலாக மாறும்.

ஏன்? எவ்வளவு?

உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் இயங்க கொலஸ்ட்ரால் அவசியம். வைட்டமின் டி நம் உடலில் உற்பத்தியாக கொலஸ்ட்ரால் தேவை. 

உடலுக்குத் தேவைக்கும் அதிகமாக கொலஸ்ட்ரால் கிடைக்கும்போது ரத்தக்குழாயின் சுவரில் படிய ஆரம்பிக்கும். காலப்போக்கில் ரத்தக்குழாயைச் சுருங்கச் செய்து, ரத்தநாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும்.

ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் உள்ளது என்பதை இயற்கையாகக் கண்டறிய முடியாது. இதற்கெனத் தனியாக அறிகுறிகள் கிடையாது.

ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகும்போது உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

20 வயதுக்கு மேல் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை கொலஸ்ட்ரால் டெஸ்ட் செய்யவேண்டும்.

ஒரு மனிதனின் சராசரி கொலஸ்ட்ரால் அளவு 300 மில்லி கிராமுக்குக் கீழே இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு 200 மில்லி கிராமுக்குக் கீழ் இருக்கவேண்டும்.

நம் உடலில் உள்ள கொழுப்பைக் கல்லீரலில் கொண்டுபோய்ச் சேர்ப்பதால், ஹெச்டிஎல் கொலஸ்ட்ரால், (HDL Cholesterol) ‘நல்ல கொழுப்பு’ என்று குறிப்பிடப்படுகிறது.  சராசரியாக இது 40 மில்லி கிராமுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

கல்லீரலில் உள்ள கொழுப்பை நம் உடலின் பல பாகங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதால், எல்டிஎல் கொலஸ்ட்ரால், (LDL Cholesterol) ‘கெட்ட கொழுப்பு’ எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தக் கொழுப்பானது சராசரியாக 100 மில்லி கிராமுக்கு அதிகரிக்காமல் இருக்க வேண்டும்.

ட்ரைகிளிசரைடு, தொப்பையை உருவாக்கும் கொழுப்பு. 100-க்கு மேல் ட்ரைகிளிசரைடு ரத்தத்தில் இருந்தால் அது எல்டிஎல் கொலஸ்ட்ராலுடன் சேர்ந்து ரத்தக்குழாய்களில் அடைப்பை உண்டாக்கும். 

கொலஸ்ட்ரால் டெஸ்ட்

‘லிப்பிட் புரொஃபைல் (Lipid profile) என்னும் பரிசோதனை மூலம் கொலஸ்ட்ரால் அளவு கணக்கிடப்படுகிறது.

சிகிச்சை

வாழ்க்கை முறையில் மாற்றம் * உணவியல் மாற்றம்

* உடற்பயிற்சி * தேவைப்பட்டால் மருந்துகள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: