Advertisements

சர்வதேச உடல்பருமன் தினம் (World Obesity Day)

உலகம் முழுவதும் அக்டோபர் 26-ஆம் தேதி உடல் பருமன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை எல்லோரிடத்திலும் அதிகரிப்பதே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம்.
இன்றைய உலகில் பெரும்பான்மையோர், குறிப்பாக இளைஞர்கள் தங்கள் தோற்றம் குறித்து அதிருப்தி அடைந்து எடையைக் குறைப்பது

மிகவும் முக்கியமானது என்று கருதுகின்றனர். ஆனால் மருத்துவ நிலையில் உடல் பருமன் என்பது பல்வேறு நோய்களையும், சில சமயம் மரணத்தையும்கூட உண்டாக்குகிறது என்பதை மக்கள் அடிக்கடி மறந்து போகின்றனர். உண்பதினால் மட்டுமின்றி தவறான உணவுப் பழக்க வழக்கங்களினாலும் உடல் பருமன் அதிகரிக்கிறது.
உடல் எடையைக் குறைக்க சில ஆலோசனைகள்
* வறுத்த உணவைத் தவிர்த்து அதிகமாகப் பழங்களையும் காய்கறிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* நார்ச்சத்து நிறைந்த முழு தானியம், பருப்பு மற்றும் முளைகட்டிய தானியங்களை உண்ண வேண்டும்.
* காய்கறிகளைப் பொரிக்காமல் நீராவியால் வேக வைத்து பயன்படுத்துவது நல்லது.
* உணவை ஒரேயடியாக அதிகமாக உண்ணாமல் சிறிய அளவில் 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை உண்ண வேண்டும்.
* சீனி, கொழுப்பு வகை உணவுகள் மற்றும் மதுப் பழக்கத்தைக் குறைக்க வேண்டும்.
* தினமும் உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம்.
* மின்படிகள், மின்தூக்கிகளுக்குப் பதில் படியைப் பயன்படுத்தலாம்.
* பணி இடத்தில் ஒரே மாதிரியாகத் தொடர்ந்து அமராமல் அவ்வப்போது சிறுசிறு இடைவேளைகளை எடுப்பது நல்லது.
* மெதுவாக எடையைக் குறைக்க வேண்டும். மருத்துவ காரணங்களின்றி எடை இழப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம்.
சர்வதேச பக்கவாத தினம் (World Stroke Day)
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 29-ஆம் தேதி சர்வதேச பக்கவாத தினம் கடைபிடிக்கப்படுகிறது. பக்கவாதத்தைத் தடுத்து, சிகிச்சையளிப்பது குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்துவதே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம்.
மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும் போது மூளை தாக்குதலுக்கு உள்ளாவதே பக்கவாதம். இதனால் பாதிக்கப்பட்ட மூளைப் பகுதிக்கு உயிர்க்காற்றும், சத்துக்களும் கிடைக்காததால் அப்பகுதியிலுள்ள செல்கள் மரணமடைகின்றன.
உலகெங்கும் இறப்புக்கும் ஊனத்திற்கும் முக்கிய காரணமாக உள்ள பக்கவாதம் உலகளவிலான முக்கிய சுகாதாரப் பிரச்னையாக இருக்கிறது. பக்கவாதத்தால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேரும், இந்தியாவில் ஆண்டுக்கு 15 லட்சம் பேரும் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது புள்ளி விவரம்.
பக்கவாதத்துக்கான ஆபத்துக் காரணிகள்உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், குடும்ப வரலாறு, குடி மற்றும் புகைப்பழக்கம், சத்தற்ற உணவு, உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவை பக்கவாதத்தை ஏற்படுத்துகிற ஆபத்துக் காரணிகளாக உள்ளது.
பக்கவாதத்திற்கான அறிகுறிகள்கை, கால், முகத்தில் திடீர் பலவீனம் அல்லது உணர்ச்சியின்மை, பேசுவதில் சிரமம், பார்வையில் கோளாறு, நடப்பதில் சிரமம், தலைச்சுற்றல், உடல் சமநிலை இழப்பு, கடும் தலைவலி போன்றவை பக்கவாதத்துக்கான அறிகுறிகள். பக்கவாதத்துக்கான முதலுதவி
* பாதிக்கப்பட்டவரை ஓய்வாக அமர வைக்க வேண்டும்.
* தலையும், தோளும் சற்றே உயர்ந்து இருக்கும் வண்ணம் படுக்க வைக்க வேண்டும்.
* பதில்வினை இல்லையென்றால் நோயாளியை இடது புறமாக படுக்க வைக்க வேண்டும்.
* நாடியைச் சற்றே உயர்த்தி வைக்க வேண்டும்.
* அவசர மருத்துவ உதவியை அழைக்க வேண்டும்.
* மயக்க நிலையில் இருந்தால் மருத்துவ உதவி வரும் வரை செயற்கை சுவாசம் அளிக்கலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: