Advertisements

இதத் தெரிஞ்சா சோளக்கருதின் நாரை தூக்கி குப்பையில் எறிய மாட்டீங்க!!

நாம் ஆசையாக விரும்பி வாங்கும் சோளக் கருதில் சுற்றி இருக்கும் நாரை வீணாக கீழே போட்டு விடுவோம் அல்லவா. ஆனால் அந்த சோளக் கருது நாரில் ஏராளமான நன்மைகள் பொதிந்துள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா. கண்டிப்பாக அந்த நன்மைகள் தெரிந்த பிறகு இனி அந்த நாரை குப்பையில் வீச மாட்டீர்கள்.

இந்த நாரில் உள்ள சிக்மாஸ்ட்ரோல் மற்றும் சிஸ்டோரோல் என்ற பொருள் இதய நோய் களிலிருந்து நம்மை காக்கிறது. மேலும் உடல் கொழுப்பை குறைக்கிறது. இதிலுள்ள இயற்கை அமிலம் நமது வாயில் ஏற்படும் பிரச்சினைகள் , சரும ஆரோக்கியம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

மேலும் சிறுநீர்பை தொற்று, சிறுநீரக கற்கள், இரத்த அழுத்தம், டயாபெட்டீஸ், இதய நோய்கள், உடல் சோர்வு, சிறுநீரக அழற்சி போன்ற எண்ணிலடங்காத பிரச்சினைகளை சரி செய்யும் மருந்தாக இது உள்ளது.

இந்த நாரை பச்சையாகவே அல்லது உலர வைத்தோ பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மற்ற நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்

இரத்த சர்க்கரை அளவை குறைத்தல் :

சோளக் கருது நார் இரத்த அழுத்தம் உடையவர்கள், டயாபெட்டீஸ் நோயாளிகள் போன்ற வர்களுக்கு சிறந்தது. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

விட்டமின் சி அளித்தல்

இது உடலுக்கு தேவையான விட்டமின் சி சத்தை கொடுக்கிறது. இதனால் உள்ளுறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து அவைகள் நன்றாக செயல்பட உதவுகிறது. மேலும் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

கெளட் பிரச்சினையை குறைத்தல்

கெளட் என்பது ஒரு மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஆகும். அதிக அளவு யூரிக் அமிலம் மூட்டுகளில் தங்கும் போது அதிகமான வலி ஏற்படும். இதற்கு சோளக் கருது நாரில் தேநீர் தயாரித்து ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று குடித்து வந்தால் கெளட் வலி படிப்படியாக குறைந்து விடும்.

சிறுநீரக பிரச்சினைக்கு உதவுதல்

இந்த நாரில் தயாரிக்கும் தேநீர் சிறுநீரக பிரச்சினைகளான சீறுநீர்ப்பை தொற்று, சிறுநீரக கற்கள், சிறுநீரக அழற்சி போன்ற பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.

சீரண சக்தியை அதிகரித்தல்

கல்லீரலில் பித்த நீரை அதிகம் சுரக்க வைத்து நாம் சாப்பிட்ட உணவை எளிதாக சீரணிக்க வைக்க இந்த நார்கள் உதவுகிறது. எனவே சீரண சக்தியை துரிதப்படுத்தி விடுகிறது.

இரத்தக் கசிவை கட்டுப்படுத்துதல்.

இந்த நாரை கொண்டு தயாரிக்கப்படும் தேநீரில் உள்ள விட்டமின் கே சத்து இரத்தம் கசிவை தடுக்கிறது. அதிலும் கருவுற்ற பெண்களுக்கு இது மிகவும் சிறந்தது. எதாவது வெட்டு காயங்கள், அடிபட்டால் ஏற்படும் இரத்தக் கசிவை தடுக்கிறது.

தலைவலியை குறைத்தல்

நீண்ட காலமாக உங்களுக்கு தலைவலி தொல்லை இருந்தால் அதற்கு இந்த சோளக் கருது நார் தேநீர் மிகவும் சிறந்தது. காரணம் இதில் அடங்கியுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் அனலகெஸிக் பொருள் தலைவலியை போக்குகிறது. மேலும் மன அழுத்தத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரித்து தோள்பட்டை, கழுத்து, தாடை பகுதியில் உள்ள விரைப்புத்தன்மையை போக்குகிறது.

ஊட்டச்சத்துக்கள் அளித்தல்

இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களான மெந்தால், தைமோல், செலினியம், நியாசின், பீட்டா கரோட்டீன், ரிபோப்ளவின் போன்றவைகள் அடங்கியுள்ளன. இவைகள் அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்.

உடல் எடையை குறைக்க உதவுதல்

இந்த நாரை தேநீர் போட்டு அருந்தும் போது நமக்கு அதிகமாக பசி எடுக்காது. மேலும் இவை நமது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து உடல் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கொப்புளங்கள் மற்றும் சரும அலற்சியை சரி செய்தல்

சோளக் கருது நாரில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி செப்டிக் பொருட்கள் அழற்சி போன்றவற்றை சரியாக்குகிறது. தோலில் ஏற்படும் கொப்புளங்கள், சரும வடுக்கள், அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவற்றையும் குறைக்கிறது.

சோளக் கருது நாரை நேரடியாக சாப்பிடக் கூடாது. தேநீர் தயாரித்து அருந்தலாம்.

சோளக் கருது தேநீர் தயாரிப்பது எப்படி

செய்முறை

முதலில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் சோளக் கருது நாரை சேர்க்க வேண்டும்

நன்றாக சில நிமிடங்கள் கொதிக்க விட்டு அதன் சத்துக்கள் இறங்கும் வரை விடவும்

நன்றாக தண்ணீர் ப்ரவுன் கலருக்கு மாறியதும் தண்ணீரை மட்டும் வடிகட்டி கொள்ளவும்

அதனுடன் தேவைப்பட்டால் டேஸ்ட்டுக்கு லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளவும்.

Advertisements

One response

  1. Great useful information Thank you

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: