Advertisements

எடைக்குறைப்பு முயற்சிகள் வெற்றி பெற…

1. விடா முயற்சியும் தொடர்ந்து போராடவும் வேண்டும்:   

பலர் எடைக்குறைப்பு முயற்சியில் ஆரம்பத்தில் மிகவும் ஆர்வத்துடனும், மருத்துவர் கூறியதைவிட அதிகமாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் டயட் எனப் பரபரப்பார்கள். ஆனால், ஒரு வாரம் கழித்து எடை மெஷினில் ஏறி நிற்கும்போது 500 கிராம்கூட குறையாததைப் பார்த்து மனமுடைந்து அனைத்துக்கும் விடை கொடுத்து பழைய வாழ்க்கை முறையை ஆரம்பித்து விடுவார்கள். இது தவறு.  

 

டயட்டீஷியன் கூறியபடி சரியான உணவுக்கட்டுப்பாடு, நம்மால் தினமும் செய்ய முடிந்த அளவிற்கு உடற்பயிற்சி என்று அட்டவணை போட்டுக்கொண்டு களத்தில் இறங்க வேண்டும். முதல் இரண்டு வாரம் சிலருக்கு உடலில் நீர் குறைவதால் எடையில் மாற்றமும், கொழுப்பு குறைவதால் உடல் சுற்றளவில் மாற்றமும் தோன்றும். எனவே, பொறுமையாகத் தொடர்ந்து நம் சக்திக்கு ஏற்ப முயற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் ஒரு மாதத்தில் 2 கிலோ முதல்
4 கிலோ வரை தாரளமாகக் குறைக்க முடியும்.
2. எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கும் முன் மருத்துவப் பரிசோதனை அவசியம்: 

நம் உடலைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபடுவதுதான் அந்த முயற்சியில் தோற்றுப்போவதற்கான முதல் காரணமாகும்.   

எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கும் முன் நம் உடலில் ஏதேனும் கோளாறு உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.


தைராய்டு சுரப்பது எப்படி இருக்கிறது?


மாதவிடாய் சரியான முறையில் வருகிறதா?


வேறு ஹார்மோன் பிரச்னை இருக்கிறதா?


PCOS எனும் சினைப்பை நீர்க்கட்டி உள்ளதா?


பரம்பரையாக உடல் பருமன் பிரச்னை தொடர்கிறதா?


தைராய்டு போன்ற ஹார்மோன் பிரச்னைகளை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தியபின் எடைக்குறைப்பு முயற்சியில் இறங்கினால் பலன் கிடைக்கும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: