Advertisements

திவாகரன் சொல்றதை பார்த்தா ஜெ. இறந்த பின்னர் எக்மோ பொருத்தி "ரமணா பாணி" சிகிச்சை தரப்பட்டதா?

ஜெ. மரணம் திவாகரனின் திடுக் தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதியே காலமாகிவிட்டார் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் போட்டுடைத்திருக்கிறார். ஜெயலலிதாவின் மரணத்தில் இதுபோல இன்னும் எத்தனை உண்மைகள் வெளிவர இருக்கிறதோ? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணித்த 75 நாட்கள் என்னதான் நடந்தது என்பது யாருக்குமே தெரிவிக்கப்படாமல் இருந்தது. ஓராண்டு கழித்து இப்போதுதான் மெல்ல மெல்ல பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஜெயலலிதா தாக்கப்பட்டு மூர்ச்சையற்ற நிலையில்தான் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் என்கிறது ஒரு தரப்பு. ஆனால் ஜெயலலிதா அப்பல்லோவில் நலமுடன் தேறிவந்தார் என தினகரன் தரப்பு வீடியோ ஒன்றை வெளியிடுகிறது.

சசிகலா தயக்கம்

தற்போது ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை கமிஷனில் ஆஜராவதில் இருந்து போக்கு காட்டி வருகிறார் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா.

திவாகரன் ஷாக்

இந்நிலையில் மன்னார்குடியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி மாலை 5,15 மணிக்கே ஜெயலலிதா மரணித்துவிட்டார்; அப்பல்லோ மருத்துவமனையோ தமது மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் ஒரு நாள் தாமதமாக ஜெயலலிதாவின் மரணத்தை அறிவித்தது என தெரிவித்திருக்கிறார்.

எல்லாமே பொய்யா?

அப்படியானால் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட உடனேயே உயிர் பிரிந்திருக்கிறது. இறந்துவிட்ட ஜெயலலிதாவின் உடலுக்குதான் ‘எக்மோ’ என்ற கருவியை பொருத்தியிருப்பதாக அப்பல்லோ மருத்துவமனையும் சசிகலா உள்ளிட்டோரும் நாடகமாடினார்களா? ஜெயலலிதா மரணம் தொடர்பாக பேட்டியளித்திருந்த துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் கூட ஜெயலலிதா டிசம்பர் 5-ந் தேதி மாலை 4.30 மணிக்குதான் காலமானார். எனக்கே இரவு 11 மணிக்குதான் அதிகாரப்பூர்வமாக தெரியவந்தது என கூறியதும் பொய்யா?

எத்தனை எத்தனையோ?

ஜெயலலிதாவுக்கு எக்மோ பொருத்தப்பட்டது தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கை எல்லாமே உண்மையை மூடி மறைக்கிறதா? என ஏகப்பட்ட கேள்விகளை திவாகரனின் இந்த பேச்சு முன்வைக்கிறது. இன்னும் எத்தனை உண்மைகளை எத்தனை ஆண்டுகள் கழித்து சசிகலா குடும்பம் சொல்லுமோ? என்பதுதான் அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு,

Advertisements
%d bloggers like this: