பால் குடிப்பதால் 20 வயதிற்கு மேல் உயரத்தை அதிகரிக்க முடியுமா? பின்னணி உண்மை என்ன?

பால் குடிப்பதால் உயரமாக வளரலாம் என்ற ஒரு கூற்று நம்மிடைய இருந்து வருகிறது.. ஒவ்வொரும் குழந்தை பருவத்தில் கேள்விப்பட்ட ஒன்று தான் இது.. பால் குடித்தால் தான் நீ நல்ல வளருவாய் என்று நம் அம்மாக்கள் சொல்லி நம்மை பால் குடிக்க சொல்வார்கள்..!

ஆனால் உண்மையிலேயே 20 வயதிற்கு மேற்பட்ட ஒருவரால் பால் குடிப்பதால் உயரமாக வளர முடியுமா? பால் ஒருவரது உயரத்தை எந்த அளவுக்கு அதிகரிக்க உதவுகிறது? அப்படி பால் ஒருவரது உயரத்தினை அதிகரிக்குமே ஆனால் அதனை எப்படி பருக வேண்டும். பெற்றோர்களின் உணவு மந்திரத்தின் பின்னனியில் உள்ளது என்ன என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம் .

உயரத்தை அதிகரிக்கலாமா?

நீங்கள் 20 வயதுடையவராக இருந்தால் உங்களது வளர்ச்சியானது நிறைவுற்று விட்டது என்று அர்த்தமாகும். நீங்கள் பால் குடிப்பதினால் உங்களது உயரத்தை அதிகரிக்க முடியாது. ஏனெனில் நீங்கள் முழுவதுமாக இந்த வயதிற்குள் வளர்ந்து விடுவீர்கள்..

எலும்புகள்

எலும்புகளின் வளர்ச்சி என்பது தான் ஒருவரின் உயரம் எனப்படுகிறது. 20 வயதிற்குள் ஒருவரின் எலும்புகள் போதுமான வரையில் வளர்ச்சியடைந்து அவரது உயரத்தினை தீர்மாணித்துவிடுகிறது. ஆனால் 20 வயதிற்குள் ஒருவரால் தனது உயரத்தை அதிகரிக்க முடியும்.

ஆய்வுகள்

பால் குடிப்பது குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. குழந்தைகளின் உயரம் என்பது பெற்றோர்களின் உடல் ஆரோக்கியம், அவர்களது உயரம் மற்றும் அவர்களது பால் உட்கொள்ளும் அளவுகளை பொறுத்து உள்ளது.

கால்சியம் உணவுகள்

மற்றொரு ஆய்வில் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்க்கொள்வதன் காரணமாக தங்களது உயரத்தை 2.5 செ.மீ வரையில் அதிகரிக்க முடியுமாம்.. ஆனால் இதற்கு ஆகும் கால அளவானது மூன்று ஆண்களாகும்.

எலும்புகளின் வளர்ச்சி தான் உயரம் ஆகும். கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாத ஒன்று என்பது நம் அனைவருக்கும் மிக துல்லியமாக தெரிந்த ஒன்று தான்..

எலும்புகளின் அடர்த்தி

தினமும் பால் குடிப்பதினால் எலும்புகளின் அடர்த்தியானது அதிகரிக்கிறது. மேலும் கால்சியம் அதிகமுள்ள உணவுகள் எலும்புகளை வலுவாக்கவும் உதவியாக உள்ளது.

20% முதல் 40% உயரம் அதிகரிக்க..

குழந்தைகளுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்துக்களை கொடுப்பதன் மூலமாக அவர்களது உயரத்தை அதிகரிக்க முடியும். பரம்பரையாக இருக்கும் உயரத்தை காட்டிலும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து உணவுகளை கொடுப்பதன் மூலமாக 20% முதல் 30% வரையிலாக உயரத்தை அதிகரிக்க முடியும்.

உயரம் அதிகரிக்க என்ன தேவை?

உயரத்தை அதிகரிக்க நமது உடலுக்கு முக்கியமாக புரோட்டின், கொழுப்பு, கார்போஹைட்ரேட், விட்டமின்கள், மினரல்கள் மற்றும் உடலுக்கு தேவையான அளவு கலோரிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பால்

குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க பால் ஒரு இன்றியமையாத பொருளாக உள்ளது.. மரபு ரீதியாக உள்ள உயரத்தை விட சற்று கூடுதலான உயரத்தை பெற வேண்டும் என்றால் நீங்கள் தின்சரி அத்தியாவசிய உணவுகளை உங்களது குழந்தைகளுக்கு தர வேண்டியது அவசியமாகும். விட்டமின் ஏ ஆனது குழந்தைகளின் எலும்புகளை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவியாக உள்ளது. விட்டமின் டி எலும்புகளை பலப்படுத்த உதவியாக உள்ளது. அதே சமயம் எலும்புகளை வலுவாக்க போதுமான அளவு புரோட்டின் தேவைப்படுகிறது. உயரத்தை அதிகரிக்க தேவையான அனைத்துமே பாலில் உள்ளது. எனவே பால் குடிப்பது என்பது உயரத்தை அதிகரிக்க உதவுகிறது.

ஹார்மோன் பிரச்சனைகள்

குழந்தைகள் சரியான உயரத்தை அடையாமல் இருக்க ஹார்மோன் சமநிலையின்மை ஒரு காரணமாக உள்ளது. ஹார்மோன் அளவு குறைவாக இருப்பதும் குழந்தைகள் சரியான வளர்ச்சியடையாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

நாள்பட்ட நோய்கள்

கவனிப்பு இல்லாமல் இருக்கும் சில நாள்பட்ட நோய்களான, கேன்சர், கீழ் வாதம் போன்ற நோய்களும் கூட குழந்தைகள் சரியான வளர்ச்சியடையாமல் போக முக்கிய காரணமாக உள்ளது.

இடுப்பு வலி

இடுப்பு வலி என்பது இன்று பலரை வாட்டி எடுக்கும் ஒரு பிரச்சனை ஆகும். இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி குடித்தால் நல்ல பலனைக் காணலாம்.

உடல் பருமன்

இரத்தத்தில் கொழுப்பு உள்ளவர்கள் இந்த பூண்டு கலந்த பாலை பருகுவது என்பது மிகவும் நல்லது ஆகும். பூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்த பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு பூண்டு பால் மிகவும் சிறந்த ஒன்றாகும். இந்த பால் ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி, ரத்தோட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது.

நோய்களுக்கு..

மலேரியா, காசநோய், யானைக்கால் நோய் மற்றும் ப்ளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது. இதனால் இந்த நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பூண்டு கலந்த பாலை பருகலாம்.

தாய்ப்பால் சுரக்க

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும், குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம்.

நுரையீரல் அழற்சி

நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், இந்த பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால், விரைவில் நுரையீரல் அழற்சியை குணமாக்கலாம்.

ஜீரணம்

இன்று பலர் சாப்பிடும் உணவும் செரிமானம் ஆகாமல் தவிக்கின்றனர். இது போன்ற நிலையில் உள்ளவர்கள் பூண்டு பாலை பருகலாம். பூண்டு பாலானது நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணமாக்க உதவும், செரிமான திரவத்தை தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது.

புழுக்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் வயிற்றில் புழுக்கள் இருக்கும் பிரச்சனை உள்ளது. இவர்கள் பூண்டு கலந்த பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம்.

%d bloggers like this: