தினகரன் தலைமையில் மெகா கூட்டணி… தீயாய் வேலை செய்யும் மாற்று கட்சித் தலைவர்

தினகரன் தலைமையில் மெகா கூட்டணிக்காக மாற்று கட்சித் தலைவர் ஒருவர் தீயாக வேலை செய்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. இதற்கான வியூகங்களை திமுக வகுத்து செயல்படுத்தி வருகிறது.

பேரம் பேச தூபம்

 

இந்நிலையில் திமுகவை நோக்கி நகர்ந்து வரும் கட்சிகளில் ஒன்றின் தலைவரை திமுகவின் இயற்கையான கூட்டணி கட்சியின் தலைவர் ஒருவர் அண்மையில் ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். இச்சந்திப்பின் போது, அதிகாரத்தில் பங்கு தந்தால் கூட்டணி வைப்போம் என திமுகவிடம் பேரம் பேசுங்கள் என வலியுறுத்தியிருக்கிறார்.

இதர கட்சிகளுக்கும் செக்

இந்த மூளைச்சலவைக்குப் பின்னர் திமுகவுடன் கை கோர்ப்பதில் தீவிரமாக இருந்த அந்த கட்சியின் தலைவர் சற்றே ஜெகா வாங்கியிருக்கிறார். இதேபோல திமுகவின் நேச சக்திகளாக உருவெடுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் அந்த தலைவர் செக் வைத்து வருகிறாராம்.

இதுதான் வியூகம்

அவரைப் பொறுத்தவரையில் தினகரன் தலைமையில் மெகா கூட்டணியை உருவாக்குவோம்; ஆட்சி கைக்கு வந்தால் மகிழ்ச்சி; வராது போனாலும் இழப்பு இல்லை என்பதுதான் வியூகமாம்.

மேலிடம் ஒப்புதல்

திமுக நிச்சயம் அதிகாரத்தில் பங்கு தராது; அப்படியிருக்கும் போது எதற்காக திமுகவுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்த தலைவரின் வாதமாம். இதற்கு அந்த கட்சியின் மேலிடமும் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாம்.

%d bloggers like this: