Advertisements

நோய்களை விரட்டும் சிரிப்பு-

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடும்போது, இன்றைக்கு மன  அழுத்தம் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த அழுத்தம் சோம்பேறித்தனத்தை  உருவாக்கி விடுகிறது. மேலும்,அது தொடர்ந்தால் 70 முதல் 80 சதவீத நோய்கள்  உருவாக அதுவே காரணமாக இருக்கிறது. 

அதுவும்  குறிப்பாக, புற்று நோய் மற்றும் இருதய நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. உடலில் ஆக்ஸிஜனின் அளவை குறைத்து மந்தமாக்கிறது.இவற்றிலிருந்து விடுபட சிரிப்பு  மாமருந்தாக இருக்கிறது. நன்றாக வாய் விட்டு சிரிக்கும் மனிதன்  ஆரோக்கியமானவனாகவும் இருக்கிறான்.அவனை விட்டு எதிர் மறை எண்ணங்கள் பறந்து  போய்விடுகின்றன.

‘லாப்டர் யோகா’ மனிதனின் உள்ளம், உடல் இரண்டையும் வலிமையானதாக  மாற்றுகிறது. இதன் பலன் நன்றாக இருப்பதால் பல உடற்பயிற்சி மையங்களில் இந்த  லாப்டர் யோகாவை சேர்த்து வருகிறார்கள். 

இது அதிகம் சிரிப்பதற்கு வாய்ப்பு இல்லாத தொழில் வல்லுனர்கள் மற்றும் வணிகர்களுக்கு  ஏற்றதாக இருக்கிறது. வழக்கமாக ஒரு மணி நேரம் செய்யும் உடற்பயிற்சியின் பலனை  இந்த லாப்டர் யோகாவை 20 நிமிடங்கள் செய்வது மூலம் பெற முடியும் என்று  ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் வில்லியம் ஃப்ரே  கண்டுபிடித்துள்ளார்.

சிரிக்கும் போது,முழு உடலுக்கும் நன்மை விளைகிறது.நுரையீரலுக்கு பயிற்சி  கிடைக்கிறது.உமிழ்நீரில் கிருமிகளை எதிர்க்கும் ஆண்ட்டிபாடிகளின் எண்ணிக்கை  அதிகரிக்கிறது.வயிற்றில் அல்சர் வருவதை தடுக்கும் என்சைம்மைச் சுரக்க செய்கிறது.  வலிபோக்கும் நிவாரணியான என்டார்ஃபின்சையும் சுரக்கச் செய்கிறது.

சிறு குழந்தைகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 300-400 தடவைகள் சிரிக்கின்றன. 150  தடவைகள் கலகலவென சிரிக்கின்றன.ஆனால்,வயதாக வயதாக இது 6 தடவையாக  சுருங்கி விடுகிறது.கை, கால்கள் இதர உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகவும்,  வலிமையானதாகவும் இருக்க ஜாக்கிங் போகிறோம் அல்லவா அது போல சிரிப்பு மூலம்  உள் உறுப்புகளை வலிமையாக வைத்திருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர்.

தினமும் அரை மணி நேரம் சிரித்தால் மாரடைப்புக்கு காரணமான மன அழுத்த  ஹார்மோன்களின் சுரப்பும்,அவற்றின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் குறைவாக  இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

மனம் மற்றும் வாய்விட்டு சிரிப்பது மூலம் உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற  கொழுப்பு கரைகிறது.

சோ..,வாய்விட்டு சிரியுங்கள். நோயை விரட்டுங்கள்!

Advertisements
%d bloggers like this: