Advertisements

பாதாம் சாப்பிட்டால், ‘பக்கா’ ஆகலாம்!

தினமும், நான்கு பாதாம் பருப்பு சாப்பிடுவதால், 8 – 12 சதவீதம், உடலில் உள்ள, கெட்ட கொழுப்பு கரைகிறது’ என, மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், எடை குறைப்பில் பாதாமின் பங்கு முக்கியமானது.

பாதாமில், பல வித தாதுக்கள், புரதம், அமினோ அமிலம், வைட்டமின் பி, மெக்னீஷியம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு என, உடலுக்கு அவசியமான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
ஆசிய இந்தியர்கள், எகிப்தியர்களின் உணவில், பிரபலமாக இருக்கும் பாதாமில், தோலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான, வைட்டமின் கே உள்ளது. இதில் உள்ள சக்தி வாய்ந்த, ‘ஆன்டி ஆக்சிடென்ட்’ தோல் மூப்பு அடைவதை வெகுவாகக் குறைக்கிறது.
பாதாமில் உள்ள அமினோ அமிலம், மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது; வைட்டமின் பி, மெட்டபாலிசம் எனப்படும், உடல் உள் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது; பசி உணர்வு குறைவதால், அதிக கலோரி சாப்பிடும் அபாயம் இல்லை.
காலை எழுந்தவுடன், முதல் உணவாக நான்கு பாதாம் சாப்பிடுவதால், நாள் முழுவதும் மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறது. அப்படியே சாப்பிட்டாலும் சரி; இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் சாப்பிட்டாலும் சரி!

Advertisements
%d bloggers like this: