இண்டர்வ்யூக்களில் கேட்கப்படும் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும்!

இன்டெர்வியூல உங்க முன்னாடி உக்காந்துருக்க போறவங்க என்ன கேக்க போறாங்கன்னு தெரிஞ்சா எப்பிடி இருக்கும்?

கண்டிப்பா அவுங்க மனச நம்மால படிக்க முடியாது. ஆனா மறுபடியும் மறுபடியும் கேக்கப்படற 31 கேள்விகள் எங்க கிட்ட இருக்கு. அத உங்க கிட்ட பகிர்ந்துக்க போறோம். நாங்க மேலும் உங்களுக்கு சொல்றது என்னனா, எந்த கேள்விக்கும் இப்படித்தான் பதில் இருக்கணும்னு முடிவு பண்ணிட்டு இன்டெர்வியூ போகாதீங்க. அங்க உங்க பதில்களுக்கு என்ன விதமான எதிர்வினை இருக்குன்னு பாத்திட்டு அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பதில் சொல்ல ஆரம்பியுங்க.

1. டெல் மீ அபௌட் யுவர்செல்ப் :

ரொம்ப ரொம்ப சுலபமான கேள்வி. அதனாலயே இதுக்கு பதில் பல பேர் யோசிக்கறது இல்ல. ஆனா அந்த பதில்லையே உங்க மேல ஒரு எண்ணம் உருவாக வாய்ப்பு இருக்கு. இந்த கேள்விக்கு பதிலா உங்க வேலை வரலாற குடுக்காதீங்க. அதுக்கு பதிலா சில வார்த்தைகள்ல இந்த வேலைக்கு நான் எப்பிடி சரின்னு புரிய வைங்க. ஆரம்பத்துல நீங்க முந்தைய வேலைல செஞ்ச சில சாதனைகள் பத்தி சொல்லிட்டு, இப்போ இந்த வேலைக்கு தேவையான தகுதிகள் எப்பிடி உங்ககிட்ட இருக்குனு முடிக்கலாம்.

2. எப்பிடி இந்த வேலைய பத்தி உங்களுக்கு தெரிஞ்சுது :

உங்களையும் உங்களுக்கு இந்த வேலை மேல இருக்கற அந்த ஆசையையும் நிரூபிக்க இன்னொரு சாதாரணமான ரூபத்துல இருக்கற அருமையான கேள்வி.

@ அந்த நிறுவனத்துல இருக்கற ஒருத்தர் உங்களுக்கு இந்த வேலைய பத்தி சொல்லி இருந்தா அவுங்க பேர சொல்லி எதனால இந்த வாய்ப்பு உங்களுக்கு அவசியம்னு ஒரு நூல் விட்டு வெக்கலாம்.

@ ஏதாவது நிகழ்ச்சி மூலமாவோ, இல்ல பத்திரிகை கட்டுரை மூலமாவோ தெரிஞ்சுக்கிட்டு இருந்தா, எப்பிடிலாம் வாய்ப்புகளை நீங்க தேடி புடிக்கறீங்கன்னு எடுத்து சொல்ல பயன் படுத்திக்குங்க.

@விளம்பரம் மூலமா தெரியவந்துருந்தா, இந்த வேலைல உங்களுக்கு எந்த விஷயம் புடிச்சதுன்னு புரியவைங்க

யாருமே இந்த கேள்விக்கு குடுக்கற பதில், நிறுவனத்தோடு வலைத்தளத்துல இருக்கற விஷயங்கள். நிறுவனம் எதிர்பாக்கறது அதை இல்ல. உங்களுக்கு அந்த விஷயங்க மேல ஆர்வம் இருக்கான்னு தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பா இத பயன்படுத்திப்பாங்க.

@பதில் சொல்லும்போது, உங்களுக்கு நிறுவனத்த பத்தி என்ன தெரியும், முக்கியமா அவுங்க உபயோகிக்கற சில முக்கிய வார்த்தைகள், அத பயன்படுத்துங்க.

@அடுத்து நிறுவனத்த பத்தி நீங்க ஆய்வு செஞ்சுருந்தா அதுல இருந்து கொஞ்சம் சொல்லுங்க. முடிஞ்சவரைக்கும் உங்க பதில் வித்தியாசமா இருக்கறமாதிரி அதே சமயம் கேள்விய விட்டு நழுவாமையும் பாத்துக்குங்க.

 4. உங்களுக்கு எதுக்கு இந்த வேலை தரப்படணும் :

வேலை மேல பெரிய மரியாதையும், பெரிய நம்பிக்கையும் பெரிய ஆசையும் இருக்கற ஒருத்தருக்கு வேலை தரணும்னு நிறுவனங்கள் கேக்கற கேள்வி இது.

@அந்த வேலை உங்க கைல இருந்தா அதுக்கு நீங்க எப்பிடி வலு சேர்ப்பிங்கன்னு யோசிச்சு பதில் சொல்லுங்க.

@இந்த நிறுவனத்துல வேலை செய்ய ஏன் பிரியப்படுறீங்கன்னு சொல்லுங்க.

@எந்த விதத்துலையும் உங்க குடும்ப சூழ்நிலையை சொல்லி சிம்பதி உருவாக்கி வேலை வாங்க முயற்சிக்க வேண்டாம். அது உங்களுக்கு எதிராதான் முடியும்.

முதல்ல பாக்கறப்போ இந்த கேள்வி உங்கள பயமுறுத்தற மாதிரி தெரியும். ஆனா கேட்டுட்டா உங்களுக்கு ரொம்ப நல்ல நேரம். ஏன்னா உங்கள பத்தி நீங்க எடுத்து சொல்ல (பெருமை அடிக்கன்னு படிங்க!) சரியான வாய்ப்பு.

@உங்க பதில் எப்படி இருக்கணும்னா, வேலையை மட்டுமில்லாம, எதிர்பார்ப்ப விடவும் அதிகமான உழைப்பு நீங்க தரமுடியும்னு புரியவைங்க.

@அங்க இருக்கற சூழல்ல நீங்க சரியா பொருந்துவீங்கன்னு புரியவைங்க.

 6. உங்களுக்கு தொழில் ரீதியான பலம் என்ன ?

இந்த கேள்விக்கு பதில் சொல்லும்போது, நேர்காணல் பயிற்சியாளர் பமீலா சொல்ற விஷயங்கள்.

@ உங்க உண்மையான தகுதிகள், பலம் எடுத்து சொல்லுங்க. கேக்கறவங்க என்ன கேக்க விரும்பறாங்களோ அத சொல்ல வேண்டாம்.

@எந்த வேலைக்கு நீங்க விண்ணப்பிச்சுருக்கீங்களோ, அதுக்கு ஏத்த தகுதிகள சொல்லுங்க.

@முடிஞ்சா அந்த தகுதிகள எப்படி நீங்க உங்க முன்னத்த வேலைல உபயோகிச்சீங்கன்னு எடுத்து சொல்லுங்க.

 7. உங்களுடைய பலவீனம் என்ன ?

உங்க பலகீனம் அவுங்களுக்கு தேவை இல்ல. ஆனா அது உங்களுக்கு தெரிஞ்சுருக்கா? நீங்க நேர்மையா அத பத்தி சொல்றிங்களா? எப்படி அந்த பலவீனத்தை நீங்க அணுகரிங்க இது தான் அவுங்களுக்கு தேவை.

@இருக்கற எல்லா பலவீனத்தையும் சொல்றதும் சரி இல்ல. அதே சமயம் நான் மிஸ்டர் பர்பெக்ட்னு சொல்றது ஆகாது. எந்த விஷயத்துல நீங்க கொஞ்சம் சிரமப்படுவீங்களோ அத யோசிச்சு, அத எப்பிடி சரி கட்ட நீங்க முயற்சிக்கறீங்கன்னு பதில் சொல்லுங்க. பதில் நேர்மறையா (பாசிட்டிவ்வா) இருக்கணும்.

@உதாரணத்துக்கு மேடை சிக்கல் உங்களுக்கு இருந்தா : எனக்கு மேடைல பேசறது சிரமம். ஆனா இப்போல்லாம் எங்க மேடை கிடைச்சாலும் முயற்சி செய்யறேன்னு சொல்லலாம்

 8. தொழில் ரீதியா உங்க சாதனை என்ன?

இந்த கேள்விக்கு நீங்க கொடுக்கற பதிலுக்கு கண்டிப்பா உங்களுக்கு வேலைய வாங்கித்தர சக்தி உண்டு. இந்த கேள்விக்கு நீங்க கெத்தா பதில் சொல்லலாம் (சாதனைகள் இருந்தா! இல்லைனா கொஞ்சம் அடக்கி வாசிக்கணும்)

@சாதனைய சொல்ற விதமும் இருக்கு : நீங்க சந்திச்ச சூழல் என்ன? அது எப்பிடி உங்கள சிரமப்படுத்துச்சு? அத சமாளிக்க என்ன நீங்க செஞ்சீங்க? அது மத்தவங்க செஞ்சதுல இருந்து எப்பிடி வித்தியாசமா இருந்துச்சு? கடைசியா உங்க சாதனை அதுல என்ன? நிறுவனத்துக்கு கிடைச்சது என்ன? இத ஒரு மசாலா தமிழ் படம் கதை மாதிரி சொல்லணும்.

 9.வேலை செய்யற எடத்துல நீங்க சந்திச்ச சிக்கல் என்ன? எப்படி சமாளிச்சீங்க?

இந்த கேள்வி மூலமா எப்பிடி ஒரு சிக்கல நீங்க எதிர்கொள்ள போறீங்கன்னு தெரிஞ்சுக்க விரும்புவாங்க. ஏன்னா நேர்காணல்ல ரொம்ப நல்லா பேசிட்டு வேலை செய்யும்போது, விஸ்வரூபம் எடுக்கறவங்க உண்டு. அதனால முன்னாடியே இந்த கேள்விக்கு உங்க பதில வெச்சு எதை நீங்க சிக்கலா நினைக்கறீங்க, உண்மைலையே அது சிக்கலா இல்லையா, சிக்கலா இருந்தா அத எப்பிடி நீங்க சமாளிச்சீங்க? எல்லாமே இந்த கேள்விக்கான உங்க பதில்ல இருந்து தெரிஞ்சுக்கலாம்.

@அதனால மறுபடியும் நீங்க “மசாலா தமிழ் பட ரூட்க்கு போக வேண்டியதான். என்ன சிக்கல், எப்பிடி சமாளிச்சேன், கடைசில கட்டப்பாவா வந்தேனா இல்ல பாஹுபலியா நின்னேனா.. அதுலாம் உங்க கதை திரைக்கதை வசனமா இருக்கலாம்.

 10. அடுத்த 5 வருடங்கள்ல உங்கள நீங்க எங்க வெச்சு பாக்கறீங்க?

இந்த கேள்விக்கு உங்க கிட்ட அவுங்க எதிர்பாக்கற பதில், உண்மையா உங்க எதிர்கால திட்டம் என்னவா இருக்குனு தெரிஞ்சுக்க. அதோட, கொஞ்சம் நடைமுறைக்கு ஏத்த மாதிரி உங்க திட்டங்கள் இருக்கான்னு சோதிப்பாங்க.

@இந்த வேலைல இருந்து எப்படி உங்க எதிர்காலம் அமையும்னு தெரிஞ்சா நீங்க சொல்லலாம். தெரியலைன்னா, உண்மையா சொல்லிடறது நல்லது. அதே இந்த வேலைல இருந்து என்ன கத்துக்கிட்டு, அத எதிர்காலத்துக்கு பயன்படுத்துவேன்கற மாதிரி ஒரு பதில் சொன்னா கூட நல்லது தான்.

 11. உங்க கனவு வேலை என்ன?

உங்க கனவும், நீங்க சேரபோற வேலையும் ஒத்துப் போனா இந்த கேள்விக்கு உண்மையான பதில் சொல்றது நல்லது. இல்லைனா வேலைக்கு ஏத்த மாதிரி அத மாத்தி சொல்றது நலம்.

12. மத்த நிறுவனங்களோட நேர்காணல்ல கலந்துக்கறீங்களா?

இந்த கேள்விக்கான காரணம், இந்த துறைல நீங்க எந்த அளவுக்கு முனைப்பா இருக்கீங்க? போட்டியாளர்கள் எந்த அளவுக்கு உங்கள எடுக்க பிரியப்படறாங்க? இந்த பதில்கள தெரிஞ்சுக்க. அதனால யாரோட நிறுவனத்துக்கும் போகலைனு சொல்றத விட, நம்பத்தகுங்க விதத்துல, சில நிறுவனங்கள் பெயர சொல்லி, அங்க இருக்கற வாய்ப்ப சொல்லி (அது முக்கியம்) அதுக்கும் முயற்சி செய்யறேன். அவுங்களும் நேர்காணலுக்கு கூப்பிட்டுருக்காங்கனு சொல்லலாம். இது சம்பளம் பேச கொஞ்சம் உதவும். அதே சமயம் நீங்க சொல்ற விஷயம் பொய்யா இருந்தா கூட அதுல கொஞ்சம் உண்மையும் கலந்திருக்கற மாதிரி பாத்துக்குங்க.

13. இப்போ பாக்கற வேலைய ஏன் விடறீங்க?

இதுக்கு பதில் சொல்றது கொஞ்சம் சிரமம். ஆனா கண்டிப்பா கேப்பாங்க. இந்த கேள்விக்கு உங்க பதில் நேர்மறையா இருக்கறது நலம். வேலை செஞ்ச நிறுவனத்த பத்தி வேலை செய்யப்போற நிறுவனத்துக்கிட்ட தப்பா சொல்றதுல எந்த உபயோகமும் இல்ல. பாசிட்டிவ்வா சொல்லும்போது, உங்க மேல நல்ல எண்ணம் வர வாய்ப்புகள் அதிகம்.

@முடிஞ்ச வரைக்கும், அந்த நிறுவனத்துல என்னோட வளர்ச்சிக்கு வாய்ப்புகள் இல்ல அதனால இங்க வந்தேன்னு சொல்றது சரியா இருக்கும். நேரத்துக்கு தக்க அத மாத்திக்கணும். ஆனா அவுங்க உங்கள வேலைல இருந்து நீக்கி இருந்தா அதையும் மறைக்காம ஒப்புக்குங்க. தப்பே இல்ல.

 14. ஏன் உங்கள வேலைல இருந்து நீக்குனாங்க?

ஆமா என்ன வேலைல இருந்து நீக்கிட்டாங்கன்னு நீங்க ஒப்புக்கிட்டா, அடுத்து ஏன்னு ஒரு கேள்வி வரும். இந்த கேள்விக்கு உண்மைய அப்பிடியே சொல்றது சரியா இருக்காது. ஆனாலும் கொஞ்சம் நேர்மை உங்க பதில்ல இருக்க வேண்டியது அவசியம்.

சொல்ற பொய்ல கொஞ்சம் உண்மையும் அவசியம் சார்

அதுக்கு அடுத்து, அப்போ இருந்ததுக்கும் இப்போ நீங்க இருக்கறதுக்கும் எந்த அளவு வளர்ச்சி உங்க வேலைல உங்க சுபாவத்துல இருக்குன்னு புரியவைங்க. உங்க வாழ்க்கை எப்பிடி மாறி இருக்குன்னு சொல்லுங்க. அந்த பதில் கூட அவுங்க எதிர்பாக்கற ஒன்னா இருக்கலாம்.

 15. இந்த வேலைல என்ன எதிர்பாக்கறீங்க?

அந்த வேலைல உங்களுக்கு என்ன என்ன விஷயங்கள் கிடைக்கபோகுதுன்னு உங்களுக்கு தெரிஞ்சுருந்தா நல்லது. ஏன்னா என்ன வேலைன்னு தெரியாம இன்டெர்வியூ போன கதை ஆகிட கூடாது.

16. எந்த சூழல் உங்களுக்கு சரியா இருக்கும்?

நான் இது வரைக்கும் இருந்த சூழ்நிலை இப்படி, ஆனா உங்க நிறுவனத்தோடு சூழ்நிலையும் எனக்கு சரிதான் சொல்லலாம். இல்ல ஒரு சில மாற்றங்கள் கேக்கலாம்.

 17. எப்பிடி உங்க நிர்வாகத்தன்மை இருக்கும்?

நல்ல மேலாளர்கள் எப்போமே உறுதியாவும் ஆனா அதே சமயம், கொஞ்சம் வளைஞ்சு போற தன்மையும் கொண்டவங்களா இருப்பாங்க. அது தான் உங்க பதில்லையும் எதிர்பாப்பாங்க. உங்களோட அனுபவத்துல இருந்து சில விஷயங்களை நீங்க சொல்லலாம். என்னோட அணில வெறும் 5 பேர் இருந்தாங்க ஆனா கொஞ்சம் கொஞ்சமா 15 பேர் கொண்ட அணியா மாத்தினேன். வேலையே செய்ய மாட்டான்னு பேர் எடுத்த தொழிலாளியை, வருஷத்தோட சில தொழிலாளி பட்டம் வாங்க வெச்சேன்னு சொல்லலாம்.

18. ஒரு சிறந்த தலைவனா எப்போ நீங்க இருந்திங்க?

இந்த கேள்விக்கு முன்னாடியே பதில் சொல்லிட்டமேனு யோசிக்க கூடாது. ஏன்னா அது நிர்வாக திறமை. இது வழிநடத்திட்டு போற திறமை. நீங்களா ஒரு திட்டத்துக்கு அடித்தளம் போட்டு, அது எங்க எங்க ஒப்புதல் வாங்கி சரியா வழிநடத்தி, கடைசில முடிச்சு நிறுவனத்துக்கு இத்தனை லாபம் பாத்துச்சு மாதிரியான பதில் எதிர்பாப்பாங்க. பேசாம விஐபி தனுஷ் அவர மனசுல வெச்சுக்குங்க. சரியா இருக்கும்.

19. எந்த நேரத்துல நிர்வாகத்தோட முடிவுக்கு முடிவுக்கு எதிரா நீங்க இருந்தீங்க?

கண்டிப்பா மேலதிகாரி சொல்ற எல்லா விஷயத்துக்கும் நாம தலை ஆட்ட மாட்டோம். கண்டிப்பா சில நேரங்கள்ல உரசல் இருக்கத்தான் செய்யும். அப்பிடி அந்த நேரத்துல உங்க கருத்த நீங்க எப்பிடி தெரிவிச்சிங்க? அதுனால அந்த திட்டத்துல மாற்றம் வந்துச்சா? இது அவுங்க எதிர்பாக்கக்கூடிய விஷயம். அதனால அதுக்கு ஏத்த மாதிரி திரைக்கதை அமையுங்க. சில நேரத்துல நீங்க சில இடத்துல தவறா கூட முடிவ எதிர்த்துருக்கலாம். அந்த மாதிரி சூழல சொல்லாம இருக்கறது நலம்.

20. உங்கள உங்களோட மேலதிகாரியும், கூட வேலை செய்தவர்களும் எப்பிடி சித்தரிப்பாங்க?

நீங்க என்ன பதில் சொன்னாலும், கண்டிப்பா அவுங்களும் கூப்பிட்டு பேசத்தான் போறாங்க உங்க நிறுவனத்துக்கு. அதனால உண்மையா இருக்கறது நலம். அதுவரைக்கும் சொல்லாம இருந்த இல்ல விட்டுபோன உங்க குணங்களை அங்க நீங்க சொல்லலாம். அது மூலமா ஒரு நல்ல பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கலாம்.   21. ஏன் சில காலம் வேலை செய்யாம இருந்தீங்க?

சில காலம் வேலை இல்லாம இருந்தீங்கனா ஏன்னு உண்மைய சொல்லலாம். ஆனா அந்த நேரத்துலையும் உங்கள நீங்க எப்பிடி வளர்த்துக்க முயற்சி செஞ்சீங்க? ( வேற ஒரு மொழி கத்துக்கிட்டேன், நல்ல சமைக்க கத்துக்கிட்டேன், புது மென்பொருள் கத்துக்கிட்டேன்) அப்படினு சொல்லலாம். அது கூடுதல் தகுதியா அமையும்.

 22. ஏன் நீங்க துறைகளை மாத்தறீங்கன்னு சொல்ல முடியுமா?

இது சில பேர் பதில் சொல்ல முடியாம திணறுவாங்க. ஆனா என்ன காரணத்தால நீங்க துறை மாத்த விரும்பறீங்கன்னு சொல்லலாம். அந்த சமயத்துல முன்னாடி வேலை செஞ்ச துறை அனுபவம் எப்பிடி உங்களுக்கு இந்த துறைல கைகுடுக்கும்னு எடுத்து சொல்லலாம். ஏன்னா சில நேரங்கள்ல முன் அனுபவம் இல்லாதவங்கள வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் விரும்புவாங்க. புது வழி பிறக்கும்னு.

 23. உங்களுக்கு சங்கடமா இருக்கற சூழ்நிலைகளை எப்பிடி சமாளிப்பிங்க?

எதையும் தாங்கும் இதயம் இருக்கான்னு பாக்கற கேள்வி இது. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரனா மாறிடுவேன். எந்த விஷயமும் என்ன தடுக்காது வேலைய கச்சிதமா முடிப்பேன்னு நம்பிக்கை தர கூடிய பதில் உங்க கிட்ட இருந்து எதிர்பாப்பாங்க. இன்னும் சொல்லப்போனா முன்னாடி இருந்த வேலைல நீங்க சந்திச்ச சிக்கல்கள கூட எடுத்துக்காட்டி இதுக்கு பதில் சொல்லலாம்.

 24.முதல் 30,60,90 நாட்கள் எப்பிடி இருக்கும் இந்த வேலைல?

எங்க இருந்து துவங்கனும்? அதுக்கு உங்களுக்கு என்ன என்ன தேவைப்படும்? வேற என்ன விஷயங்கள் நீங்க கத்துக்கணும்? உடனடியா உங்களால உதவ முடியற விஷயங்கள் என்ன? இந்த மாதிரி நீங்க தயாரா இருந்தா வேலை மேல உங்களுக்கு இருக்கற ஆசைய அது காட்டும்.

@உதாரணத்துக்கு : உங்க நிறுவனத்தோடு விளம்பரங்கள் எங்க எங்க இருக்கு? அதுனால நமக்கு கிடைக்கற பலன் அதுக்கு செலவு செய்யற காசுக்கு தகுந்ததா இருக்கா இப்பிடி யோசிச்சு அதுக்கு ஏத்த மாதிரி பதில் வெச்சிருந்தா சரியாய் இருக்கும்.

 

 25. சம்பளம் எவளோ எதிர்பாக்கறீங்க?

இந்த கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி , நீங்க விண்ணப்பிச்சுருக்கற நிலைக்கு என்ன சம்பளம் கொடுக்கபடுதுன்னு தேடியோ இல்ல கேட்டோ தெரிஞ்சுக்கறது நல்லது. அடுத்ததா உங்க சம்பளத்த பொறுத்து, உங்க அனுபவித்த பொறுத்து இது எப்பிடி மாறுபடும்னு தெரிஞ்சுக்குங்க. அதே சமயம், கொஞ்சம் வளைஞ்சு கொடுக்கவும் தயாரா இருக்கேன்னு நேர்காணல்ல புரிய வைங்க. சொல்ல வேண்டாம். ஏன்னா உங்களோட மதிப்பு உங்களுக்கு தெரியும், அதே சமயம், முன்ன பின்ன இருந்தாலும் அது பத்தி பேச தயாரா இருக்கேன்னு சொல்லாம சொல்லணும்.

 26. வேலைய தவிர்த்து என்ன செய்ய விரும்பறீங்க?

இந்த மாதிரி சில கேள்விகள் உங்கள எடை போட்டு பாக்கவும், நிறுவனத்தோடு சூழலோட நீங்க ஒத்து போவீங்களா தெரிஞ்சுக்கவும் கேட்கப்படும். அந்த மாதிரி நேரங்கள்ல உங்களுக்கு என்ன புடிக்குமோ, பொழுது போக்கா என்ன செய்விங்களோ அத சொல்லலாம். ஆனா எவ்ளோ தூரம் அத சமாளிக்க முடியுமோ அவளோ தூரம் சமாளிக்கிறது நல்லது.

 27. மிருகமா இருந்த என்ன மிருகமா இருப்பீங்க?

இந்த மாதிரி எடக்கு மடக்கா கேக்கறது எதுக்குனா சட்டுனு யோசிச்சு உங்களால சமாளிக்க முடியுதான்னு தெரிஞ்சுக்க.இது சரியான பதில் தவறான பதில்னு எதுவும் இல்ல. ஆனா அவுங்களுக்கு ஏத்த குணங்களோட ஒரு மிருகத்தை சொல்ல முடிஞ்சா அற்புதமா இருக்கும்.
கேட்ட உடனே பதில் சொல்லாம கொஞ்சம் இழுத்து யோசிச்சு பதில் சொன்ன சரியா இருக்கும்.

 28. உங்க லிமோஸீன்ல எத்தனை டென்னிஸ் பந்துகள் அடைக்க முடியும்?

1000?10,000? 100,000?

இந்த மாதிரி மூளையை கசக்கர கேள்விகள் சில நேரத்துல வரும். சரியான பதில் சொன்னாதான் வேலைனு இல்ல. ஆனா நீங்க சொல்ல முயற்சி செய்யறீங்களான்னு அவுங்க தெரிஞ்சுக்க விரும்புவாங்க. அப்போ உடனடியா ஒரு காகிதம் பேனா கேளுங்க. அந்த நேரத்துல நீங்க யோசிக்க முடியும். அப்பறம் உண்மையாவே கொஞ்சம் கணக்கு போட்டு பாருங்க, அதுக்கு அப்பறம் ஏதாவது பதில் சொல்ல பாருங்க. உண்மையா என் கிட்ட லிமோஸீன் இல்லைனு சொன்னா வாடகைக்கு எடுத்துக்கலாம் சொல்லுங்கனு சொல்லுவாங்க ஜாக்கிரதை.

 29. குழந்தைகள் எப்போ உங்க வாழ்க்கைல வரப்போறாங்க?

உங்க குடும்பத்த பத்தி, உங்க வயது, பாலினம், உங்க இனம் மதம், இதுலாம் கேக்கறது தவறு. இருந்தாலும், இந்தியால தெரிஞ்சுக்க விரும்புவாங்க. முக்கியமா வேலைல சேந்த உடனேயே கர்பம் ஆகிட்டு நீங்க விடுமுறைல போகக் கூடாதுன்னு ஒப்பந்தம் போடற நிறுவனங்கள் இருக்காங்க. அதனால இதுக்கு உங்க வயதுக்கு ஏத்த மாதிரி, இல்ல அடுத்த ஒரு வருஷத்துக்கு இல்ல அந்த மாதிரி சமாளிக்கலாம்.

 30. எங்க நிறுவனத்துல என்ன விஷயத்த மாத்திக்க முடியும் இல்ல இன்னும் நல்ல செய்ய முடியும்?

இது கேக்கறது, நிறுவனத்த பத்தி நீங்க தெரிஞ்சுட்டு வந்துருக்கீங்கனு உறுதி படுத்திக்க. ஆனா சில நேரங்கள்ல நாம குடுக்கற பதில் அவுங்கள கோவப்படவைக்கவும் வாய்ப்பு இருக்கு. அதனால பதில்கள் நேர்மறையா இருக்கறது நல்லது. வாடிக்கையாளருக்கு என்ன செய்ய முடியும், அதுக்கு என்ன என்ன தேவை இப்பிடி அந்த கேள்வியை திசை திருப்பறது நல்லது.

 31. எங்க கிட்ட கேட்க கேள்விகள் இருக்கா?

அவுங்க மட்டும் இல்ல நீங்களும் அவுங்கள பத்தி தெரிஞ்சுக்கலாம். நீங்க சேரவேண்டிய நிலைய பத்தி, நிறுவனத்த பத்தி, அதுல உங்க துறைய பத்தி, இப்பிடி கேள்விகள் கேக்கலாம்.
உங்க நிறுவனத்துல வேலை செய்யறதுல உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? வளர்ச்சிக்கு இந்த வாய்ப்புகள் எப்பிடி? இந்த மாதிரியான கேள்விகள் கொஞ்சம் சூதானமா உங்கள காப்பாத்தும்.

%d bloggers like this: