Advertisements

முடிவில்லாத பிரச்னையா முடி?

மனிதனுக்கு அழகு தருபவைகளில் ஒன்று முடி.சத்தான உணவுகளை உட்கொண்டு  நல்ல உடல் நலத்துடன் இருந்தால்  தலைமுடி செழுமையாகவே கரு கருவென வளரும். உடல் கோளாறுகள், மன உளைச்சல்கள், வைட்டமின்களின் குறைபாடுகள், வயது  ஆகியவை தலை முடியை பெரிதும் பாதிக்கின்றன. நமது உணவில் போதிய புரதச்சத்துக்கள் இல்லையெனில் முடிகள் உடைந்து போகவும்

வறண்டு போகவும் செம்பட்டை நிறமாகவும் மாற வாய்ப்புகள் அதிகம். சாதாரணமாகவே ஒரு மனிதனுக்கு தினமும் 0.5 மி.மீ. நீளம் தலைமயிர் வளர்ச்சி அடைகிறது. ஏறத்தாழ இரண்டாண்டு  காலம் ஆயுளுடன் தலை முடி வலர்ந்து, உதிர்ந்து பின் மீண்டும் முளைக்கிறது. பாலாடை வெண்ணை, பச்சைக் காய்கறிகள், கேரட், மீன்கள், ஆட்டு ஈரல், ஆகியவை உணவுகளில் வைட்டமின் ஏ., டி. அதிகமாக உள்ளன. வயது முதிர்ச்சி, தூக்கமின்மை, ஹார்மோன் கோளாறுகள், அதிகமான காபி, தேனீர், குளிர்பானங்கள்  தலைமுடியை பாதிக்கும் அதுமட்டுமல்லாமல் தலைமுறை தலைமுறையாக தலையில் வழுக்கை இருப்பவர்களுக்கு அதுவே தொடருவது இயல்புதான்.
முடியை பராமரிக்க…
அரைப்படி உப்பை ஒரு தொட்டி தண்ணீரில் கரைத்து வாரம் ஒரு முறை குளித்து வந்தால் தேகம் தூய்மையாகி அழகும் பலமும் உண்டாவதுடன் தலை முடி நன்றாக வளரும். கடலை மாவு, புளித்த தயிரை சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் எவ்வளவு எண்ணெய் பிசுக்கு அழுக்கு இருந்தாலும் நீங்கிவிடும். தலை முடியும் ஆரோக்கியமாக வளரும். முடிக்கொட்டி தலை வழுக்கையான இடத்தில் காளானை அரைத்துத் தேய்த்து வந்தால் மீண்டும் முடி வளரும்.  இரவில் படுக்கப்போகுமுன் தலையில் சிறிது விளக்கெண்ணெய்யை தலையில் தேய்த்துக் கொண்டால் கண்கள் குளிர்ச்சி ஆவதுடன் கூந்தல் உதிர்வது நின்று, அடர்த்தியாக முடிவளரும்.
எலுமிச்சம் பழச்சாற்றை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து தேய்த்து தலைக்கு குளித்துவந்தால் தலைமுடி உதிர்வது நின்றுவிடும். முடி செழுமையுடனும் கருநிறத்தோடும் வளரும். நரையும் மாறும். ஆலமரத்தின் விழுதைக்கொண்டு வந்து அம்மியில் வைத்து நன்றாக அரைத்து மாவாக்கிக் கொள்ள வேண்டும். 200 கிராம் மாவுடன் 30 மி.லி. எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்து கலக்கி தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊரவைத்து பிறகு தலைக்கு குளித்துவிட வேண்டும். இதனால் முடி நீண்டும் கருமையுடனும் செழிப்பாகவும் வளரும். முடியை பராமரிப்பதில் தனி கவனமும் அக்கறையும் செலுத்திவந்தால் மனிதனுக்கு முடியால் தனி மதிப்பும் மரியாதையும் கூடும்.

Advertisements
%d bloggers like this: