Monthly Archives: பிப்ரவரி, 2018

பிப்ர‘வரி’ கடைசி நேர நெருக்கடி!

ரசு ஊழியர்களின் நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு, இந்த பிப்ரவரி மாத சம்பளத்துடன் முடிக்கப்பட வேண்டும். ஏனென்றால், மார்ச் மாத சம்பளம், அடுத்த நிதியாண்டின் துவக்கமான ஏப்ரலில்தான் வழங்கப்படும். எனவே, கடந்த பதினோரு மாதங்களில் பிடித்தம் செய்த வருமான வரி போக மீதமுள்ள வரியை, கடைசித் தவணையாக பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்து வருமான வரிக் கணக்கை முடிக்க வேண்டும்.

Continue reading →

நெஞ்செரிச்சலா?

ரைப்பையிலிருக்கும் உணவைச் செரிக்கவைக்கும் அமிலம், உணவுக்குழாயில் தொண்டையை நோக்கி மேலேறி வருவதால் ஏற்படுவது நெஞ்செரிச்சல். சரியான நேரத்துக்குச் சாப்பிடாததாலும், எளிதில் செரிமானமாகாத உணவுகளைக் கண்ட நேரத்தில் சாப்பிடுவதாலும் இந்தப் பிரச்னை ஏற்படும்.

Continue reading →

மதுவால் வரும் மார்பக கேன்சர்!

பெண்கள் மது அருந்துவதால், மார்பக கேன்சர் வரும் என்பது, சமீபத்திய ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, சர்வதேச அளவில், 100 ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன.
அதில், 55 ஆராய்ச்சி முடிவுகள், மார்பக கேன்சருக்கும், மதுப் பழக்கத்திற்கும் நேரடியான தொடர்பு இருப்பதாக கூறுகின்றன.
ஐரோப்பாவில், ‘யூகே மில்லினியம் வுமன் ஸ்டடி’ என்ற, மார்பக கேன்சரால் பாதிக்கப்பட்ட, 28 ஆயிரம் பெண்களிடம் ஆராய்ச்சி செய்தனர்.

Continue reading →

ஆரோக்கியத்திற்கு உகந்ததா எண்ணெய்!

நமது மளிகை லிஸ்டில் தவறாமல் இடம் பிடிக்கக்கூடிய பொருள், சமையல் எண்ணெய். எப்போதும் ஒரே பிராண்ட் எண்ணெயை வாங்குவது சிலரின் வழக்கம். சிலர் டாக்டர் அல்லது டயட்டீஷியன் பரிந்துரைத்த எண்ணெயை வாங்குவார்கள். சிலர் எந்த எண்ணெய் தள்ளுபடியில் கிடைக்கிறதோ அதைத் தேர்வு செய்வார்கள். சிலர் சன்ஃப்ளவர் ஆயில், சிலர் ஆமணக்கு எண்ணெய், சிலர் ரைஸ் பிராண்ட் எனும் தவிட்டு எண்ணெய், சிலர் இவை அனைத்தையும் கலந்து வாங்குவார்கள்.

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 25.2.2018

ராங் கால் – நக்கீரன் 25.2.2018

Continue reading →

தொழில்நுட்பங்களும் பாதுகாப்பும்!

ந்தியா… உலகளவில் சாலை விபத்துகளில் அதிக மரணங்களைச் சந்திக்கும் நாடு என்ற அவப்பெயரைப் பெற்றிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் ஒருசில கார் தயாரிப்பாளர்களே தமது தயாரிப்புகள்

Continue reading →

தாய்ப்பால் போதவில்லை என்பதை எப்படி கண்டறிவது?

எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்து தாய்ப்பாலுக்கு இணையான மாற்று உணவுகளை கண்டறிந்தாலும், டாக்டர்கள் சொல்லும் ஒரே வார்த்தை தாய்ப்பாலுக்கு ஈடு இணை கிடையாது என்பதே. கலப்படம் இல்லாத ஒரே உணவு தாய்ப்பால் மட்டுமே. குழந்தை பாலுக்கு அழுகிறதா அல்லது தூக்கத்துக்கு அழுகிறதா என்பது தாய்க்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஒரு சில விஷயங்களை உற்றுநோக்கும் போது குழந்தைக்கு தாய்ப்பால், போதியதா இல்லையா என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது உங்கள் மார்பகத்தில் தொடர்ந்து உறிஞ்சும். அப்படி தொடர்ந்து உறிஞ்சும்போது தான் தாய்ப்பால் சுரப்பும் அதிகரித்து குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கிறது.
அசைவு: தாய்ப்பால் கிடைத்துவிட்டது என்பதை குழந்தையின் தாடை அசைவை வைத்து குழந்தை விழுங்குகிறதா இல்லையா என்பதை பார்த்து கண்டுபிடிக்கலாம். குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கவில்லையெனில் முழுங்கும் தாடை அசைவு இருக்காது. தொடர்ந்து உறிஞ்சி கொண்டேயிருக்கும். அந்த சோர்விலேயே பல நேரங்களில் தூங்கி விடுவதும் உண்டு. இதனால் தாய்ப்பால் குடிக்கும் போது அதன் தாடை அசைவை உன்னிப்பாக கவனியுங்கள்.
ஒரு மணி நேரம்: பொதுவாக தாய்ப்பால் குடித்ததும் குழந்தை உற்சாகமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து எப்போதும் சோர்வாக இருந்தால் போதுமான தாய்ப்பால் கிடைக்கவில்லை என்று அர்த்தம். தாய்ப்பால் குடித்த ஒரு மணி நேரம் வரை குழந்தை பசிதாங்கும். அதற்குள்ளான நேரத்தில் தொடர்ந்து குழந்தை பசிக்காக அழுதாலும் அதற்கு தாய்ப்பால் போதவில்லை என்று அர்த்தம்.
உடல் எடை: குழந்தை பிறந்த போது இருந்த எடைக்கும் பின் ஒரு வாரத்திற்கு பிறகு எடை வித்தியாசங்கள் இருக்கும். அதாவது பிறந்திருப்பதை விட 5 முதல் 7 சதவீதம் எடை குறையலாம். ஆனால் பத்து சதவீதத்திற்கும் அதிகமாக உடல் எடை குறைந்தால் குழந்தைக்கு தேவையான உணவு கிடைக்கவில்லை என்று அர்த்தம்.
முதல் பத்து நாட்கள் மட்டுமே இந்த எடை குறைவு பிரச்னை இருக்கும். அதன் பிறகு நிலையான எடையில் இருக்க ஆரம்பித்து விடும். அதைத் தாண்டியும் குழந்தையின் எடையில் மாற்றங்கள் தெரிந்தால் அதற்கு உணவு போதவில்லை அல்லது உடலில் நோய்த்தொற்று இருக்கிறது என்று அர்த்தம்.
மார்பகம்: குழந்தை தாய்ப்பால் குடிப்பதற்கு முன்னும் பின்னும் உங்களுடைய மார்பகத்தை கவனித்தால் இந்த மாற்றம் உங்களுக்கு தெரியும். குடிப்பதற்கு முன் உங்கள் மார்பகம் மிகவும் பாரமாகவும் விறைப்பாக இருப்பது போன்றும் தோன்றும். இதே குழந்தை குடித்த பிறகு மிகவும் லேசானதாக தோன்றிடும்.
இடைவெளி: குழந்தை பிறந்த முதல் மூன்று வாரங்களுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது போன்ற சூழல் உருவாகும். அதன் பின்னர் இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறை என்று அந்த இடைவேளி குறையும். இந்த இடைவெளியை கணக்கிடுங்கள். இடைவெளி நேரம் குறைவாக இருந்தால் குழந்தைக்கு தொடர் பசியிருக்கிறது, வயிறு நிறையவில்லை என்று அர்த்தம்.

வாந்தி மயக்கமா? தேவை கவனம்!

வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று போக்கு இவை ஒருவருக்கு அடிக்கடி ஏற்படுகிறது என்றால், அது ஒரு நோய்க்கான அறிகுறியாகும். உடனே மருத்துவரை அணுகுவது அவசியமாகும். ஒருவருக்கு உடலும் தலையும் சுற்றுவது போல் உணர்வோ, தன்னைச்சுற்றி எல்லாப் பொருட்களும் சுற்றுவது போன்ற உணர்வோ, கீழே விழுந்து

Continue reading →

கரை சேர்வாரா கமல்?

ட்சியைத் தொடங்கிவிட்டு எல்லோரும் பயணம் செல்வார்கள். கமல்ஹாசனோ மூன்று மாவட்டங்களில் பயணத்தை முடித்துவிட்டுக் கட்சியைத் தொடங்கினார். என்னதான் உலக அரசியல் பேசினாலும், தான் பிறந்த பரமக்குடி அமைந்திருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கி, ‘

Continue reading →

உறுப்புகளை உருவாக்கும் பிரின்டர் இது தொழில்நுட்ப அற்புதம்!

ருடம் 1963. அந்த இளைஞனுக்கு 21 வயது இருக்கும்.  வயதுக்குரிய வேகத்துடன் துடிப்பாய் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தான். காரணம், அதிசயிக்கவைக்கும் அவனது கற்றுக்கொள்ளும் திறன். பள்ளியில் படிக்கும்போதே “ஹே! நம்ம ஸ்கூல் ஐன்ஸ்டின் போறான் பாரு!” என்று மாணவர்கள் கிண்டலடிக்கும் அளவிற்குப் பிரபலம். அதுவரை மகிழ்ச்சியின்

Continue reading →