Daily Archives: பிப்ரவரி 14th, 2018

கண்டதும் காதல், காதலிக்க ஏற்ற வயது, காதல் ஏன் சிலருக்கு எட்டாக்கனி… மருத்துவம் விளக்கும் உண்மைகள்!

காதல் இன்றி வாழ்வது சாத்தியமா? இந்த பூமியில் பிறந்த எந்த உயிரினத்துக்கும் அது சாத்தியம் இல்லை. காதல் என்ற ஒற்றைப்புள்ளியில்தான் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. தன் குடும்பம், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள்… இப்படி யாரோ ஒருவரின் மீதான நேசம்தான்  நம் இலக்கை நோக்கி நம்மை அனுதினமும் நகர்த்திக்கொண்டிருக்கிறது.

Continue reading →

நீங்களும் வாங்கலாம் வீடு! என்ன செய்ய வேண்டும்?

ஒண்டிக் குடித்தனம், அரசாங்கம் நிர்ணயித்ததை விட யூனிட்டுக்கு அதிக மின் கட்டணம், வாசல் முறை, ஆணியடிச்சா அவ்வளவுதான், பத்து மணிக்கு மேல் கேட்டைப் பூட்டுவேன், விருந்தினரெல்லாம் வரப்படாது, மோட்டர் தினமும் அரை மணி நேரந்தான் போடுவேன், இஷ்டம் இருந்தால் இரு, இல்லே நடையைக் கட்டு’, இதெல்லாம் வாடகை வீட்டில் இருப்பவர்கள் அன்றாடம் அனுபவிக்கும் விஷயங்கள். ஓடி ஓடி உழைத்து நாம் ஈட்டும் மாத சம்பளத்தின் குறிப்பிட்ட தொகுதி வீட்டு வாடகைக்கே போய்விடுகிறது. நமக்கென ஒரு சொந்த வீடு இல்லையென ஏங்குவோர் பலர். ஏக்கம் மட்டும் போதுமா? வீடு வாங்குவதற்கான வழிகளை அறிந்துகொண்டு, அவற்றை செயல்படுத்த வேண்டாமா?

சொந்த வீடு வாங்க என்ன செய்யலாம்?

Continue reading →

கடுகின் மணத்திற்கு காரணம் என்ன..?

கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறுசெடி வகையைச் சேர்ந்தது. வெண்கடுகைவிட கருங்கடுகில் காரம் அதிகம் இருக்கும். குளிர்ந்த நீருடன்சேரும் போது தோல் அகற்றப்பட்டு மைரோசினேஸ் எனும் நொதி வெளிப்படுகிறது. இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கும், மணத்திற்கும் ஒரு காரணம். மேலைநாடுகளில் கடுகை பொடியாக அரைத்தோ, பேஸ்ட் வடிவிலோ தயாரித்து பின்பு உணவில் பயன்படுத்துகிறார்கள். இந்திய சமையலைப் பொறுத்தளவில் சூடான எண்ணெயில் தாளித்து  பயன்படுத்தப்படுகிறது.

Continue reading →

அழகான கூடு-ஹோம் மேக்கர் டிப்ஸ்

நம் எல்லோருக்குமே வீடு வாங்குவது அல்லது கட்டுவது என்பது கனவுதான். வீடு என்பது கட்டடம் மட்டுமல்ல; வீட்டின் ஒவ்வொரு சிறிய பொருளிலும் கலையம்சம் இருந்தால் வீடே அழகாக இருக்கும். பொருட்களை ரசித்து வாங்கும்பொழுது அதன் மகத்துவம் நமக்கு தெரிய வரும். நம் கண்களில் படும் பொருட்களை நாம் ஓரளவு தரம், அழகு பார்த்து வாங்குகிறோம். கண்களுக்குப் புலப்படாத அல்லது முக்கியத்துவம் தரப்படாத பொருட்கள் நம்மைக் கவர்ந்து

Continue reading →

பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கம்

‘ப்ரீ டயாபடிஸ்’ என்பது சர்க்கரைநோயின் முந்தையநிலை என்பதால், மாத்திரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்காது. மற்றபடி, சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு நடைமுறைகள் ஓரளவுக்கு இவர்களுக்கும் பொருந்தும். முக்கியமாக முடிந்தவரை சர்க்கரை, கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். இது உடலின் சர்க்கரை அளவைக் குறைப்பதுடன் உடல் எடையையும் சீராகப் பராமரிக்க உதவும்.

Continue reading →

இது இந்திய மருந்துகளின் கதை

ருத்துவத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை மருந்துகள். இன்று பலவகை மருத்துவங்கள் (சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி) பின்பற்றப்பட்டாலும் ஆங்கில மருத்துவம்தான் அதிக மக்களை ஈர்த்துள்ளது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் ஆங்கில மருந்துகள்தாம் மையமான காரணம். விரைவான நிவாரணம், துரிதமாகச் செயல்படும் குணம் என மக்களுக்குப் பெரும் தீர்வாக இது இருக்கிறது.

Continue reading →