Advertisements

நீங்களும் வாங்கலாம் வீடு! என்ன செய்ய வேண்டும்?

ஒண்டிக் குடித்தனம், அரசாங்கம் நிர்ணயித்ததை விட யூனிட்டுக்கு அதிக மின் கட்டணம், வாசல் முறை, ஆணியடிச்சா அவ்வளவுதான், பத்து மணிக்கு மேல் கேட்டைப் பூட்டுவேன், விருந்தினரெல்லாம் வரப்படாது, மோட்டர் தினமும் அரை மணி நேரந்தான் போடுவேன், இஷ்டம் இருந்தால் இரு, இல்லே நடையைக் கட்டு’, இதெல்லாம் வாடகை வீட்டில் இருப்பவர்கள் அன்றாடம் அனுபவிக்கும் விஷயங்கள். ஓடி ஓடி உழைத்து நாம் ஈட்டும் மாத சம்பளத்தின் குறிப்பிட்ட தொகுதி வீட்டு வாடகைக்கே போய்விடுகிறது. நமக்கென ஒரு சொந்த வீடு இல்லையென ஏங்குவோர் பலர். ஏக்கம் மட்டும் போதுமா? வீடு வாங்குவதற்கான வழிகளை அறிந்துகொண்டு, அவற்றை செயல்படுத்த வேண்டாமா?

சொந்த வீடு வாங்க என்ன செய்யலாம்?

1. உங்களின் தேவையை முடிவு செய்யுங்கள்: தேவைகள் பலவிதம். சிலருக்கு ஒரு படுக்கையறை உள்ள வீடு போதும், சிலருக்குத் தனி வீடு, சிலருக்கு வீட்டுடன் மணையும் தேவைப்படும், ஆனால் பெரும்பாலானவர்களின் தேவை சொந்தமாக வீடு வாங்கினாலே போதுமானது என்பதுதான். இதை முடிவு செய்து, இதற்கான செலவு எவ்வளவு எனத் தெரிந்துகொள்வது முக்கியம். உங்களின் கனவு வீட்டை வாங்கத் தேவைப்படும் பணம் இவ்வளவு என்பது உறுதியாகிவிட்டது, இனி இதுதான் உங்கள் இலக்கு!

2. பட்ஜெட் போடுங்க: நாட்டுக்கு மட்டுமல்ல வீட்டுக்கும் அதி முக்கியம் பட்ஜெட். ஒரு அரைமணி நேரம் ஒதுக்கி மாத பட்ஜெட்டைப் போடுங்கள். அதை அத்தியாவசியம், அனாவசியம் என இருவேறு பாகங்களாகப் பிரித்தால், அப்போது தெரியும் தேவையற்ற விஷயங்களுக்காக எவ்வளவு செலவு செய்கிறோம் என்று! நீங்கள் விரும்பியவற்றை வாங்குவதை விட்டுவிட்டு, உங்களின் தேவையை அறிந்து செலவழியுங்கள்.

3. சேமிப்பு: நம்மில் எத்தனை பேர் சேமிக்கிறோம்? பேருக்கு வங்கிக்கணக்கு வைத்திருப்போம், ஆனால் நீண்ட கால சேமிப்பு என்பது பூஜ்ஜியம்! பட்ஜெட் போடும்போது குறைந்தபட்சம் 10% சேமிக்கவேண்டும் என முடிவுசெய்துகொள்ளுங்கள். வீட்டு வாடகையைப் போலவே ‘சேமிப்பு என்பதை தவிர்க்கமுடியாத செலவாக நினையுங்கள்’. பிற்காலத்தில் உங்களுக்குக் கைக்கொடுக்கப் போவது இதுதான்.

4. உதவுகிறது முதலீடு: சம்பாத்தியத்தில் சேமிக்கிறேன் எனக் குறிப்பிட்ட தொகையை கையிலேயே வைத்துக்கொண்டிருப்பது முட்டாள்தனம். பணத்தைக் கொண்டு பணத்தை அதிகரிக்க முதலீடு செய்வதே சிறப்பு! லிக்விட் ஃபண்ட்ஸ், ஃபிக்செட்  டெபாசிட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ், இவை மூன்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு ஏற்ற முதலீட்டு சாதனங்களாகும். சேமிக்கும் தொகையை இவற்றில் முதலீடு செய்வதால் நாம் நினைத்த இலக்கை நிச்சயம் எட்டலாம்!

5. டெவெலப்பர்கள் தரும் சலுகைகள்: இவ்வாறு ,உதலீடுகள் மூலம் சேமித்த பணத்தைக்கொண்டு நம்பகமான கட்டுமான நிறுவனங்களிடம் மட்டுமே வீடு வாங்கவேண்டும். மேலும், நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்வது அதிமுக்கியம், இதனால் சில லட்சங்கள் வரை சேமிக்க வாய்ப்புள்ளது! உதாரணமாக, வீடு கட்டிக் கொண்டிருக்கும்போது, அசல் இல்லாமல் வீட்டுக் கடனுக்கான வட்டியை மட்டும் நாம் கட்டுவது வழக்கம். இதனை ‘ப்ரீ (முன்) இஎம்ஐ’ என்பார்கள். சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான அர்பன் ட்ரீ இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ், தங்களது “0% ப்ரீ இ.எம்.ஐ சலுகை” மூலம், நாம் புக் செய்த வீடு நம் கைக்கு வரும்வரை இந்த மாதாந்திர​த்​ தவணையை நேரடியாக வங்கிக்கு செலுத்திவிடுகிறது.

பயன்: நம் தவணையை கட்டுமான நிறுவனம் ஏற்றுக்கொள்வதால், புராஜெக்டை இழுத்தடிக்காமல் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கவேண்டும் என்ற பொறுப்புக்கு உள்ளாகிறார்கள். வீட்டில் நாம் குடியேறும் வரை, நாம் வாங்கிய வீட்டுக்கடன் வட்டியில்லாக் கடனாக இருப்பது பெரும் அனுகூலம்.

Advertisements
%d bloggers like this: