Advertisements

குழந்தைகளை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி….?

குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது பெற்றோர் மற்றும் பேணுவோரின் கடமையாகும். ஏனென்றால் லட்சக்கணக்கான குழந்தைகள் இது போன்று காயங்கள் ஏற்பட்டு நிரந்தர இயலாமை மற்றும் இறப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. இதற்கு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சிறுகுழந்தைகளை மேலே தூக்கிப் போட்டு விளையாடுவது, குலுக்குவது கூடாது. இது குழந்தையின் மூளையைப் பாதிக்கும். சிறு குழந்தைகளை தனியாகவோ, பெரியகுழந்தைகளின் பொறுப்பிலோ விட்டுச் செல்லக்கூடாது. நோய் தொற்று மற்றும் அலர்ஜி ஏற்படாமல் இருக்க செல்லப் பிராணிகள் அல்லது பிறவீட்டுப் பிராணிகள் அதாவது பூனை போன்றவை குழந்தைகள் இருக்கும் இடத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்ள  வேண்டும்.
குழந்தைகள் தவழ, நடக்க ஆரம்பித்தபின் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டும். கத்தரிக்கோல், பிளேடு போன்ற கூர்மையான பொருட்கள் கையில் கிடைக்காதவறு பாதுகாப்பாக வைக்க வேண்டும். மின்விசிறி, மின்விளக்கு, மின்சலவைப்பெட்டி போன்ற மின்சாதனங்களை குழந்தைகள் தொடாத, எடுக்க இயலாத அளவில் வைக்க வேண்டும். மேஜைவிரிப்பின் மேல் பொருட்களை வைத்திருந்தால் விரிப்பை குழந்தைகள் இழுக்கும்போது பொருட்கள் அதன் தலையில் விழுந்துவிடும் அபாயம் உள்ளது. நீருள்ள தொட்டி, வாளி அருகில் குழந்தைகள் செல்ல இயலாத அளவிற்கு பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Advertisements
%d bloggers like this: