Advertisements

ஆன்லைன் ஷாப்பிங்… 10 அலெர்ட் சிக்னல்கள்!

ன்லைனில் ஷாப்பிங் செய்வதே  இன்றைய டிரெண்ட். உலகச் சந்தையில் நமக்கான பொருள்களை எங்கிருந்து வேண்டுமானாலும் வீட்டிலிருந்தபடியே தருவிக்கலாம். பிடித்தப் பொருளை அடுத்த நொடியே ஆர்டர் செய்யலாம். விலை குறைச்சல் என்பதால், மனதுக்குப் பிடித்தவர்களுக்கு பொருளையே அனுப்பி வைக்கலாம்.

ஆன்லைன் ஷாப்பர்கள் சொல்லும் ப்ளஸ் பாயிண்டுகளைத் தாண்டி, சில அபாயங்களும் இதில் உண்டு. நாம் ஒரு பொருளைக் கேட்க, நமக்கு அனுப்பப்படும் பொருள் வேறாக இருக்கலாம். ஆர்டர் செய்து பெறும் பொருள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கலாம். ஆர்டர் செய்த பொருள் வராமல்கூட போகலாம்.  
ஆக, ஆன்லைன் ஷாப்பிங்கை மிக உஷாராகத்தான் செய்யவேண்டும். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார் ரீடெயில் மற்றும் ஷாப்பர்ஸ் நடத்தை குறித்த வல்லுநர் வி.ராஜேஸ். “தி அல்டிமேட் கைடு டு ஸ்மார்ட் ஷாப்பிங்” உள்பட பல புத்தகங்களை எழுதியவர் இவர். இனி அவர் சொல்வதைக் கேட்போமா?

1 .ஆன்லைனில் ‘புதிதாக மார்க்கெட்டில் என்ன வந்திருக்கிறது’ என்று தேடும்போது உங்கள் மனம் எதையாவது ஆர்டர் போடச் சொல்லிப் பிராண்டினால் உடனே செய்யாதீர்கள். அது இப்போது உங்களுக்குக் கட்டாயம் தேவையா என்பதைப் பலமுறை கேட்டுவிட்டு, ‘ஆம்’ என்றால் மட்டுமே ஆர்டர் போடுங்கள்.
2 .உங்களது கிரெடிட் கார்டு டீடெயிலை ஆன்லைனில் சேவ் செய்து வைக்க வேண்டாம். ஏதாவது ஒரு பொருளை வாங்க நீங்கள் ஆசைப் படும்போது கிரெடிட் கார்டு டீடெயில் ஆன்லைனில் இருந்தால் உடனே ஆர்டர் போட்டுவிடுவீர்கள். அதையே தேடி எடுத்து அப்லோடு செய்வதற்கான நேரத்தில் தேவையற்ற பொருளை வாங்கலாமா என யோசிக்க அவகாசம் கிடைக்கும்.
3 கார்ப்பரேஷன் ஷாப்பிங் மால் போல, ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பல நிறுவனங்கள் தனது பொருளைக் கூவிக்கூவி விற்பனை செய்கின்றன. நீங்கள் வாங்கும் பொருளை விற்பனை செய்வது யார் என்பதிலும் கவனமாயிருங்கள். அவர்களைப் பற்றிய ஃபீட்பேக்கை கவனிப்பது முக்கியம்.
4 ஆன்லைனில் நிறைய வென்டார்கள் ஆஃபர் அறிவிப்பார்கள். விலை குறைவாக இருந்தாலும், அது உங்கள் கையில் கிடைக்கும் வரை ஆகும் செலவுகளை ஒப்பீடு செய்யுங்கள்.
5 ஆன்லைன் பொருள்களைக் கண்களால் பார்த்து மட்டுமே வாங்குகிறோம். பொருளைப் பார்த்து விலை குறைவு என்றவுடன், ‘அந்தப் பொருளை மற்றவர் வாங்கிவிட்டால்…?’ என்கிற வேகத்தில் ஆர்டர் போட வேண்டாம். அது ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பொருளா என்று பாருங்கள். பொருளைப் பற்றி உள்ள விளக்கத்தை முழுமையாகப் படிக்காமல் ஆர்டர் போடவே வேண்டாம்.
6 ஆன்லைனில் ஆர்டர் செய்யும்முன், டெலிவரி காலத்தோடு பிசினஸ் நாள்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். விடுமுறை நாள்களில் பொருளைத் தருவார்களா என்று கேட்டறிந்துகொள்வது நல்லது. 
7 ஆன்லைனில் ஆர்டர் போட்டவுடன் வரும் மெயில் மற்றும் செல்போன் குறுந்தகவல்களைப் பத்திரப்படுத்த வேண்டும். டெலிவரியில் குளறுபடி ஏற்பட்டால், இந்தத் தகவல்களைக் கொண்டே அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்தக் குறுந்தகவல் இல்லாவிட்டால், எந்த நிவாரணத்தையும் பெற முடியாது.
8 போன், எலெக்டரானிக் பொருள்கள் என எதை நீங்கள் ஆர்டர் செய்திருந்தாலும் பார்சல் கொண்டுவந்த டெலிவரி பாயை கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு, நீங்கள் ஆர்டர் செய்த பொருள் அதுதானா என்பதை சோதித்துப் பார்த்துவிட்டு, அனுப்பவும்.   

நீங்கள் வாங்கிய பொருள் எலெக்டரானிக் பொருள்களாக இருப்பின், வாங்கியவுடன் அது செயல்படுகிறதா என்பதை சோதிக்கவும். அதில் பிரச்னை இருந்தால் உடனடியாக மாற்றிக் கொள்ள முடியும்.
10 நேரில் பொருள் வாங்கும்போது ஐம்புலன்களாலும் உணர்ந்தபின்பே வாங்குகிறோம். ஆன்லைனில் வாங்கும்போது அதற்கான வாய்ப்பில்லை. ஒரு பொருளை ஆர்டர் செய்யும்முன் அதைப் பற்றிய விவரங்களை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்வது அவசியம். நேரில் வாங்கும்போது அடுத்தவரின் ஆலோசனை கேட்போம். ஆன்லைனில் பொருள் வாங்கும்போது அந்த நிறுவனத்தின் ரேட்டிங் என்ன, ஏற்கெனவே பொருள் வாங்கியவர்களின் அனுபவங்களையும் தவறாமல் படிக்க வேண்டும்.
ஆன்லைனில் நீங்கள் ஸ்மார்ட் ஷாப்பிங் செய்ய இந்த விஷயங்களை அவசியம் மனதில்கொள்ளுங்கள்.

Advertisements
%d bloggers like this: