Daily Archives: பிப்ரவரி 19th, 2018

மூளையின் திறனை அதிகரிப்பது எப்படி ?!

நீங்கள் என்பது உங்கள் மூளை என்றே சொல்லலாம். நீங்கள் யார் என்பதும், உங்கள் செயல்பாடும் மூளையைச் சார்ந்ததே. உடலின் உறுப்புகளை இயக்குவது, அவற்றைக் கட்டுப்படுத்துவது, சிந்தனை, திட்டமிடல், திட்டமிட்டதை செயல்படுத்துவது, உணர்வுகள், உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவது, நினைவுத்திறன், உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை சுரக்கச்செய்வது போன்ற எண்ணற்ற

Continue reading →

180 நாள்களில் தேர்தல் அறிக்கை! – கமல் பயணம் ரெடி

மல்ஹாசனின் ‘நாளை நமதே’ தமிழகப் பயணத்துக்கான வாகனம் ரெடியாகிவிட்டது. உள்ளடங்கிய கிராமங்களுக்கும் செல்லும்வகையில் எல்லா வசதிகளுடனும் தயாராகியுள்ள அந்த வாகனத்தை, பிப்ரவரி 15-ம் தேதி தன் அலுவலகத்தில் வைத்துப் பார்த்து திருப்தி தெரிவித்திருக்கிறார் கமல். வாகனம் தயாராவதற்கு முன்பே, தன் நீண்ட பயணத்துக்கு அவர் ரெடியாகி விட்டார். பிப்ரவரி 21-ம் தேதி ராமேஸ் வரத்தில் கலாம் இல்லத்தில் பயணத்தைத் தொடங்கும் கமல், அன்று இரவு மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கட்சியின் பெயரை அறிவிக்கிறார்; கட்சியின் கொடியை யும் அறிமுகம் செய்கிறார்.

Continue reading →

பிடித்ததைச் சாப்பிட ஒரு டயட்

நாவை அடக்க முடியாமல் டெம்ப்டேஷனில் இருப்பவர்களுக்கான குட்டி ஜன்னல்தான் ‘சீட் டயட்’ (Cheat Diet). இன்றைய லைஃப் ஸ்டைல், உடல் பருமன் பிரச்னையை எக்கச்சக்கமான பேருக்கு அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது. உடல் பருமனின் தொடர்ச்சியாக நம்மைப் பலவிதமான நோய்கள் பாதிக்கின்றன. எனவே, உடல் பருமனைக் குறைக்க, பாதிக்கப் பட்டவர்கள் தங்களுக்குப் பொருத்தமான டயட்

Continue reading →

ஸ்டாண்டர்டு டிடக்‌ஷன்… – அரசு ஊழியர்களின் வரிச்சுமை குறையுமா?

ந்த மாதத் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2018-2019-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், யாரும் எதிர்பாராத சலுகையாக வந்துசேர்ந்திருக்கிறது ஸ்டாண்டர்டு டிடக்‌ஷன் என்னும் ‘நிலைக்கழிவு’ வரிச்சலுகை.
2005-2006-ம் நிதியாண்டு வரை நடைமுறையில் இருந்த இந்த வரிச் சலுகை, இப்போது மீண்டும் வந்திருக்கிறது. அது மட்டுமல்ல, இதற்கு முன், வருமான வரம்பைப் பொறுத்து இந்த வருமான வரிச் சலுகை தரப்பட்டது. தற்போது எந்த நிபந்தனையுமின்றி, அனைத்து வகை வருமானப் பிரிவினருக்கும் ஒரே அளவாக ரூ.40,000 என்கிற அளவில் இந்தச் சலுகை தரப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதே.

Continue reading →

கவலையில்லாத ஓய்வுக்காலம்… இளைஞர்கள் கவனிக்க வேண்டிய NPS

ய்வுக் காலம் – இன்றைக்கு பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் வார்த்தை இது. குழந்தைகளின் படிப்புக்கும், திருமணத்துக்கும்,  வீட்டுக்கடனை அடைப்பதற்குமே நம் சம்பாத்தியம் அனைத்தும் சரியாகப் போய்விடும் நிலையில், ஓய்வுக்காலம் என்பது, ‘வந்தபிறகு பார்த்துக்கொள்வோம்’ என்கிற அளவுக்கே முக்கியத்துவம் பெறுகிறது. முன்புபோல இல்லாமல், இப்போது நம்மில் பலரின் வாழும் காலம் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்திருக்கிறது. ஆனால், முன்பைவிட பலவிதமான நோய்கள் ஓய்வுக்காலத்தில் நம்மைப் பாதிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதற்கான சிகிச்சைகளும், மருந்துகளுக்கான செலவுகளும் அதிகம். இந்தச் செலவுகளுக்கு ஓரளவுக்குத்தான் பிறரைச் சார்ந்திருக்க முடியும். இந்தச் செலவுகளுக்கு ஓய்வுக் காலத்தில், இல்லை என்றில்லாமல் செலவழிக்க வேண்டுமெனில், பென்ஷன் என்பது ஒவ்வொருவருக்கும் நிச்சயம் வேண்டும். 

Continue reading →

ஸ்டாலின் ரகசியமும் வைகோ பிரகடனமும்!

அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் இருக்கிறேன். போட்டோகிராபரை அனுப்பி வைக்கவும்’’ என்று செய்தி அனுப்பினார் கழுகார். அடுத்த அரை மணி நேரத்தில் நம்முன் ஆஜரானார் கழுகார்.
‘‘அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் என்ன விசேஷம்?” என்றோம்.
“ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி, அவரது உருவச்சிலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை பகுதியில்

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 18.02.2018

ராங் கால் – நக்கீரன் 18.02.2018

Continue reading →