Advertisements

எடை குறைக்கும் மாத்திரைகள் உண்மையில் பலனளிக்குமா?

உடல் எடையைக் குறைப்பதற்கான பல மாத்திரைகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன, அவற்றை மருந்து கடைகளிலேயே வாங்கிக்கொள்ள முடியும். அவற்றில் சில மாத்திரைகளைப் பற்றியும் அவை பாதுகாப்பானவையா, பலனளிப்பவையா என்பது பற்றியும் சற்று பார்க்கலாம்.

கலோரிகளைக் குறைத்தல், ஆரோக்கியமான உணவுமுறைக்கு மாறுதல், போதிய அளவு உடல் உழைப்பு ஆகியவையே உடல் எடையைக் குறைக்க மிகச் சிறந்த வழிகளாகும். கூடுதல் சத்துணவுத் தயாரிப்புகள் பல கிடைக்கின்றன, அவை பல்வேறு வழிகளில் உடல் எடையைக் குறைக்கும் என்று உறுதியளிக்கப்படுகின்றன. ஆனால் அறிவியல் ஆய்வுகள் அவற்றை உறுதிப்படுத்தும் நிகழ்வுகள் அரிதாகவே உள்ளன.

எடை குறைக்கும் மாத்திரை எடுத்துக்கொள்ளத் தொடங்கும் முன்பு, உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.
எடை குறைக்கும் மாத்திரைகளில் இருக்கும் வீரியமான உட்பொருள்கள் (Active ingredients in weight-loss pills):

கிட்டத்தட்ட விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து எடை குறைப்பு மாத்திரைகளிலும் செடிகள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் இருக்கும். ஒவ்வொரு மாத்திரையிலும் அவற்றின் சேர்க்கை மற்றும் அளவு வேறுபடலாம். இந்த மாத்திரைகள் பலவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட வீரியமான உட்பொருள்கள் இருக்கலாம், உட்பொருள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகச் செயல்படலாம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். மேலும், மற்ற உட்பொருள்களுடன் சேர்க்கையாக செயல்படும்போது அவற்றின் செயல்பாடு வேறுபடலாம்.

இவற்றில் பெரும்பாலான மாத்திரைகள், குறைந்த எண்ணிகையிலான நபர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டவை, சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் மாத்திரைகளைக் கொடுத்து, அதன் அடிப்படையிலேயே அவை பாதுகாப்பானவை, பலனளிப்பவை என்று உறுதியளிக்கப்படுகிறது. ஒரு உட்பொருள் பாதுகாப்பானது என்றும் பலனளிக்கக்கூடியது என்றும் உறுதியளிக்க வேண்டுமானால், அதனை பெரும் எண்ணிக்கையிலான நபர்களை உள்ளடக்கிய குழுவுக்குக் கொடுத்து சோதிக்க வேண்டும், இந்த ஆய்வுகளுக்கு நீண்ட காலமாகும்.

உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) உணவுத்திட்டம் சார்ந்த  கூடுதல் சத்துப்பொருள்களின் பாதுகாப்பு மற்றும் பலனுக்கு அதன் உற்பத்தியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. இந்தத் தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் உறுதிகளை FDA அங்கீகரிப்பதோ மதிப்பீடு செய்வதோ இல்லை. இருப்பினும், இவற்றின் உட்பொருள்கள் பாதுகாப்பற்றவையாக இருந்தால் அல்லது அவை வழங்கும் உறுதிமொழிகளுக்கு தகுந்த ஆதாரங்கள் இல்லையென்றால், அது குறித்து FDA நடவடிக்கை எடுக்க முடியும்.

கார்சினியா காம்போகியா (Garcinia cambogia)

மேங்கோஸ்டீன் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்படும் கார்சினியா காம்போகியா பழத்திலிருந்து பெறப்படும் சாற்றில், ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம் (HCA) வீரியமான உட்பொருளாக உள்ளது. HCA மாத்திரைகள் சந்தையில் பரவலாகக் கிடைக்கின்றன. HCA பசியைக் குறைத்து, அதன் மூலம் எடையைக் குறைக்கிறது என்று கூறப்படுகிறது. எனினும், மருத்துவரீதியாக HCA உடல் எடையைக் கணிசமாகக் குறைப்பதாக நிரூபிக்கப்படவில்லை. இது பலனளிக்கும் என்பதை நிரூபிக்க கூடுதல் ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியுள்ளது. மற்ற முறைகளுடன் ஒப்பிடும்போது HCA பாதுகாப்பானது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

பச்சை காபிக் கொட்டைச் சாறு (Green coffee bean extract)

வறுக்காத காபிக் கொட்டைகளை பச்சை காபிக் கொட்டைகள் என்கிறோம். பச்சை காபிக் கொட்டைகள் படிந்திருக்கும் கொழுப்பைக் குறைக்கும் என்று உறுதிகூறி விற்கப்படுகின்றன. பச்சை காபிக் கொட்டைச் சாறு, சிறிதளவு எடை குறைய உதவக்கூடும். அதன் பாதுகாப்பு பற்றிய உண்மையை ஆவணப்படுத்தும் பெரிய ஆய்வுகள் எதுவும் செய்யப்படவில்லை. காஃபின் அதிக அளவு எடுத்துக்கொண்டால் மற்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

காஃபின் (Caffeine)

இது உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தும் ஒரு பானம். காஃபின் மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி, விழிப்புணர்வை அதிகரித்து, மன நிலையை மேம்படுத்துகிறது என்பது பிரபலமான நம்பிக்கை. குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் எடையைக் குறைக்க அல்லது அதிகரிக்க காஃபின் உதவக்கூடும். வழக்கமாக காஃபின் எடுத்துக்கொண்டால், உடல் அதனைத் தாங்கும் திறன் பெற்றுவிடும், அதன் பிறகு உடல் எடையில் அதன் தாக்கம் எதுவும் இருக்காது. குறைந்த அளவுகளில் காஃபின் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. எனினும், காஃபின் அதிக அளவு எடுத்துக்கொண்டால் வாந்தி, குமட்டல், வலிப்பு மற்றும் விரைவான இதய துடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

கசப்பு ஆரஞ்சு (Bitter orange)

கசப்பு ஆரஞ்சில் இருக்கும் சினெர்ஃப்ரின் எனும் தூண்டு பொருள் கலோரிகளை எரித்து, பசியைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. எடை குறைப்பு செயல்திறனை ஆதரிக்க நமபகமான ஆய்வுகள் தேவை. எனினும், அது உங்கள் பசியை ஓரளவு குறைக்கும். கசப்பு ஆரஞ்சைப் பயன்படுத்துவது தொடர்பாக பாதுகாப்பு சார்ந்த சில பிரச்சனைகள் உள்ளன. கசப்பு ஆரஞ்சை எடுத்துக்கொள்வதால், பதற்றம், நெஞ்சுவலி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் விரைவான இதய துடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

கிரீன் டீ சாறும் கிரீன் டீயும் (Green tea extract and green tea)

உலகளவில், பெருமளவு மகள் கிரீன் டீ அருந்துகின்றனர். கிரீன் டீ சாறும் கிரீன் டீயும், அதிக கலோரிகளை எரிப்பதன் மூலமும், கொழுப்பு செல்களைச் சிதைப்பதன் மூலமும், உறிஞ்சிக்கொள்ளப்படும் கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலமும் உடல் எடையைக் குறைக்கின்றன என்று நம்பப்படுகிறது.

கிரீன் டீ அருந்துவது பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டுள்ளது, உங்கள் எடையைக் குறைக்க அது சிறிதளவு உதவக்கூடும். எனினும், சிலருக்கு கிரீன் டீ பாதுகாப்பானதாக இருப்பதில்லை, கிரீன் டீ அருந்தினால் அவர்களுக்கு வயிற்றில் அசௌகரியம் ஏற்படலாம், குமட்டல், மலச்சிக்கல், இரத்த அழுத்தம் அதிகரித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். கிரீன் டீ சாறு அருந்திய சிலருக்கு, கல்லீரல் சேதம் அடைந்துள்ள நிகழ்வுகளும் உண்டு.

வெள்ளைக் காராமணி (White kidney bean)

ஒயிட் கிட்னி பீன்ஸ் (காராமணி) என்றும் அறியப்படும் ஃபேசலஸ் வல்காரிஸ் என்பது உலகின் பெரும்பகுதிகளில் வளரும் ஒரு பயறு வகையாகும். வெள்ளைக் காராமணியின் சாறு பசியை ஒடுக்கி, கார்போஹைட்ரேட் உறிஞ்சிக்கொள்ளப்படுவதைத் தடுக்கிறது என்று கூறப்படுகிறது.

இது மிகவும் பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது. எனினும், சிலருக்கு இது மலச்சிக்கல், வாயுத்தொல்லை, தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எடை குறைக்கும் மாத்திரைகள் கெடுதல் விளைவிக்குமா? (Can weight-loss pills be harmful?)

பெரும்பாலான உணவு உட்பொருள்களைப் போலவே, இந்த வீரியமிக்க உட்பொருள்களில் பல, பிற சத்துப் பொருள்கள் மற்றும் மருந்துகளுடன் குறுக்கிடலாம். நீங்கள் தொடர்ச்சியாக மருந்துகளையும் உணவுத்திட்டம் சார்ந்த கூடுதல் சத்துப்பொருள்களையும் எடுத்துக்கொண்டால், இதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.

Advertisements
%d bloggers like this: