Daily Archives: பிப்ரவரி 23rd, 2018

அம்மா அதிமுக மார்ச் 1 ல் தொடங்கும் தினகரன் விட்டு விலகும் சசிகலா விசுவாசிகள்!

அம்மா அதிமுக என்ற பெயரில் தனிக்கட்சியை மார்ச் 1-ந் தேதி தினகரன் தொடங்க உள்ளார். அவரது இந்த முடிவில் அதிருப்தி அடைந்துள்ள சசிகலா விசுவாசிகள் பலரும் அதிமுகவுக்கே திரும்புவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். அண்ணா தி.மு.கவில் மீண்டும் கோலோச்சலாம் என்ற கனவில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர் சசிகலா சொந்தங்கள். உண்மையான தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர். ஜெயா டி.வியும் நமது

Continue reading →

கமல் கட்சியின் கொள்கை.. உங்களுக்குப் புரிஞ்சுதா, இல்லையா?

தரமான கல்வியும் சாதி ஒழிப்பும் தான் கமல் கட்சியின் கொள்கை ஜல்லிகட்டு போராட்டத்தை சர்வதேச தமிழர்கன் கவனத்திற்கு எடுத்துச் சென்றவர் கமல்ஹாசன். தமிழர்களை அநாகரிக வார்த்தைகளால் டுவிட்டரில் சுப்பிரமணிய சுவாமி வசைபாடிய போது

Continue reading →

புதிய இடம் தரும் பயம் (Agoraphobia)

ய்வுக்கு வீடுதான் சொர்க்கம். வீட்டில் இருக்கும்போது நாம் பாதுகாப்பாக உணர்கிறோம். ஆனால், ஒருவர் வீட்டிலேயே தனியாக அதிக நேரத்தைச் செலவழித்து வெளியே செல்லப் பயப்படுவதே அகோராபோபியாவாகும். புதிதாக ஓரிடத்துக்குச் சென்றால் அங்கே அவர்களால் நீண்ட நேரம் இருக்க முடியாது. ஏதும் ஆபத்து வந்துவிடுமோ எனப் பயந்துகொண்டே இருப்பார்கள்.

Continue reading →

வலியே… வலியே…

ர்ப்பிணிகள் பிரசவத் தேதி நெருங்க நெருங்க, பரவசம், பயம் இரண்டும் கலந்ததோர் உணர்வில் இருப்பார்கள். வலி வந்ததும், அந்தப் பெருநிகழ்வைச் சந்திக்கப்போகும் திடத்துடன் அவர்கள் அதற்குத் தயாராவார்கள். ஆனால், சிலருக்கு ‘பொய் வலி’ வந்து கண்ணாமூச்சி

Continue reading →

நாவில் சரஸ்வதி நற்றுணையாக…

ம்முடைய முதல் உறவு அம்மா. வாழ்க்கையின் வாசலை முதன் முதலாக நமக்காகத் திறந்தவள். உதடுகள் உறவாடி உருவாக்கிடும் முதல் சொல் அம்மா.   

சொற்களுக்குப் பொருள் தேடுகிறோம். முதல் சொல்லான அம்மாவுக்கு இணையான பொருளை இன்னமும் தேடிக்கொண்டி ருக்கிறோம். இந்த உண்மையை அடிப்படையாக வைத்துதான் நம் சக்தியின் ஆதாரத்தை அறிகிறோம். அதுவே அன்னை பராசக்தி. எல்லாவற்றிலும் சக்தி இருக்கிறது என்றால், அங்கே எல்லாவற்றிலும் அன்னை இருக்கிறாள் என்றுதான் அர்த்தம். ஆண் – பெண் தத்துவத்தின் அடிப்படையிலும் அன்னை சக்தியே இருக்கிறாள். முழுக்க முழுக்க எதுவுமே எந்தவோர் ஆணின் ஆதிக்கத்திலும் இருந்ததில்லை. எல்லாவற்றிலும் அன்னையே நிறைந்திருக்கிறாள். இப்படியான உண்மையை உணர்ந்தோரால் மட்டுமே உலக நாயகியை அணுக முடியும்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது நாமறிந்ததே. அந்த அன்னையில் பிதாவையும், தந்தையிடம் அன்னையையும் எப்போது கண்டுணர்கிறோமோ, அப்போது அன்னையின் சக்தியை சாந்நித்தியத்தை பரிபூரணமாக அறியலாம்.
‘மனம், மொழி, மெய்யாலே தினம் உன்னை வணங்க’ எனும் பாடல் வரிகளைக் கேட்டிருப்பீர்கள். அதைக்கொண்டே நாமும் தொடங்குவோம். மனம் மறைந்திருப்பது எங்கே என்பது தெரியாது. மெய் என்பது உடம்பைக் குறிப்பது. மொழி ஒன்றுதான் இணைக்கும் வழியில் இணைந்திருப்பது. அந்த மொழியே அன்னை கலைவாணி.
பராசக்தி தன்னை மூன்று நிலைகளில் வடிவமைத்துக்கொண்டாள். கலைவாணியாக, திருமகளாக, உமையாம்பிகையாக உருவெடுத்தாள். 

பிரம்மதேவனின் நாயகி கலைவாணி. ஒலியைத் தன்னுள் ஈர்த்துக் கொண்டவள், பிரம்மதேவனின் நாக்கில் அமர்ந்தாள். மொழிகள் தோன்றின; மக்களிடையே புரிதலும் தோன்றியது. மொழி வளர்ந்தது. இலக்கண இலக்கியங்கள் தோன்றின. அறிவை வளர்த்துக்கொள்ள ஒரு தனிப்பாதையை மொழி உருவாக்கிக் கொடுத்தது. அறியாமையை விரட்டிய அறிவு, அறிஞர்களை, கவிஞர்களை, கலைஞர்களை உருவாக்கியது.
பிரம்மனின் படைப்பில் உருவான உயிர்களின் நாக்குகளில் மொழி மட்டுமல்ல, சுவையுணர்வும் சேர்ந்தி ருந்தது. உணவைப் பக்குவப்படுத்தி உண்ணும் பழக்கமும் நேர்ந்தது. நாக்கு நலமாக இருந்தால் இந்த உடலும் நலமாக இருக்கும். உடல் நலமில்லாதவரின் நாக்கை நீட்டச் சொல்லி, மருத்துவர் சோதனைகளைத் தொடங்குவார். நாக்கின் ருசியில் நள, பீம பாகங்கள் சிறந்தன. இதனை `வாயுணர்வின் சுவை’ என்கிறார் வள்ளுவர்.
கலைமகளை `நாமகள்’ என்று வணங்கும் மாணிக்கவாசகர், ‘பொற்பமைந்த நாவேறு செல்வி’ என்றும் போற்றுகிறார்.
`நாக்கை அடக்கிடு’ என்கிறார் வள்ளுவர். நாவை அடக்காவிட்டால், சொல்லால் இழுக்குப்பட்டு, அவமானப்படும் நிலை ஏற்படுமாம். நாவில் அன்னை இருக்கிறாள் என்பதை உணர்ந்தவர்களால் மட்டுமே தவறான பேச்சைத் தவிர்க்க முடியும்.
மனம், மொழி, மெய்யாலே ஆண்டவனை அடைவதற்கு முதன்மையானதும் இலகுவானது மான வழி, நாவை அடக்குவதே. மனதைக் கட்டுப்படுத்திட தவ நெறியில் சிறந்திருக்க வேண்டும். மெய் என்னும் உடல் உணர்வுகளைக் கட்டுப்படுத்திட யோக நெறிகளில் முழுப்பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், நாக்கை அடக்கிக் காக்க எந்தப் பயிற்சியும் தேவையில்லை; கட்டுப்பாடு மட்டுமே தேவை. அதுதான் முடிவதில்லை. அதற்காகத் தான் பாடல்களும், பாயிரங்களும் தோன்றின. சாத்திரத்தை நெறிப் படுத்த தோத்திரங்கள் தோன்றின.
பேசக் கூடாததைப் பேசி வருவானேயாகில், கலைவாணி அவனைத் தண்டிக்கும் விதம் கடுமையானது.  விக்கல் எடுக்குமாம். ‘தண்ணீர் வேண்டும்’ என்று கேட்கக் கூட முடியாதாம். நாக்கு உள்ளுக்குள் மடங்கிட, நெஞ்சடைத்துப் போகுமாம்.
நாச்சென்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும். (குறள் 335)
இப்படியான விஷயத்தைச் சொல்லுமுன் `நல்லதைச் செய். நல்லதைச் சொல்’ என்றும் அறிவுறுத்தத் தவறவில்லை திருவள்ளுவர். ஆகவே, நா காப்போம்; குழந்தைகளுக்கும் அதைச் சொல்லித் தருவோம். அப்போது, நம் நாவில் சரஸ்வதி நற்றுணையாக அமர்ந்து அருள்பாலிப்பாள்.
அழகாக வெண் பட்டாடை உடுத்தி அன்னத்தில் அமர்ந்து, வீணையை மீட்டி நம்மை வாழ்த்தும் சரஸ்வதிதேவியே காளியாகிறாள், கற்பகாம்பிகை ஆகிறாள், கனகலட்சுமியாகவும் அருள்கிறாள்.
உஜ்ஜயினியில் பன்னிரண்டு ஜோதிர்லிங்க மூர்த்திகளில் ஒருவரான மகாகாலேஸ்வரரைத் தரிசிக்கலாம். இதுவொரு சக்தி பீடம். இங்கே அருளும் சரஸ்வதி தேவி காளி வடிவில் இருக்கிறாள். அவளின் திருப்பெயர் நீலகண்ட சரஸ்வதி. இந்த தேவி, அப்பகுதியில் வசித்த ஆடு மாடுகள் மேய்க்கும் இளைஞன் ஒருவனைக் கவிஞனாக்கினாள். அவரே மகாகவி காளிதாஸர். சரஸ்வதியை `ஸ்தாண்வீ தேவி’ என்று அழைப்பர். அதேபோல் மங்கள சண்டிகாதேவி, ஹரசித்தி அம்மன் என்றும் அன்னை வணங்கப்படுகிறாள்.
விசுவாமித்திரர் அரசராக இருந்தபோது, தன் தங்கை பாடலீக்காக ஒரு நகரத்தை உருவாக்கினார். அதுவே பாடலிபுத்ரம்; இன்றைய பாட்னா. இங்கே அக்கா, தங்கை வடிவங்களில் அன்னை சரஸ்வதி அருளாட்சி புரிகிறாள். `தமஸ்யாதேவி’ என்பது அவளுக்குரிய திருநாமம். மூத்த சகோதரி எழுந்தருளும் ஆலயத்துக்குப் படிபடன் தேவி மந்திர் என்றும், தங்கை அருளும் கோயிலைக் கோட்டி படன் தேவி மந்திர் என்றும் அழைக்கின்றனர். இங்கே காளியாக, லட்சுமியாக, கலைமகளாக நம் அன்னை வணங்கப்படுகிறாள்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்னா எனும் நகரில் மலைக்கு மேல் சாரதாதேவியாக எழுந்தருளியுள்ளாள் அன்னை. இங்கே இவள் நடத்தும் அருளாடல்கள் அற்புதமானவை. இரவில் கோயில் நடை மூடப்பட்ட பிறகும், உள்ளே பூஜைகள் நடை பெறும் ஓசை கேட்குமாம்.  உள்ளிருந்து கேட்கும் மணியோசையை வெளியே தங்கியிருக்கும் பக்தர்கள் செவிமடுத்ததுண்டாம்.
ஆலா என்றொரு பக்தன் கோயிலுக்குள் இருந்து விடியும்வரை பூஜை நடத்துவானாம். இதையொட்டி இரவில் குன்றின் மேல் எழும்பும் பேரொளி ஒன்று கோயிலைச் சுற்றி வட்டமிடுமாம். பக்தர்கள் அந்தப் பேரொளியை பரவசத்துடன் தரிசித்து மகிழ்வார்கள். அதேபோல், நள்ளிரவு தாண்டி மூன்று மணிக்கு மேல் எவராலும் விழித்திருக்க முடியாது; தூக்கம் தழுவிவிடுமாம். இந்த உறக்கத்தை ‘வீசதீகரண தரிசனம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
காலையில் கோயிலுக்குள் நுழைந்து பார்த்தால் சந்தனக்காப்பில் சாரதை சிரித்துக்கொண்டிருப்பாளாம். இந்தக் கோயிலில் அன்னையிடம் பிரார்த்தித்துக்கொண்டு அது நிறைவேறினால், நாக்கின் நுனியை காணிக்கையாக்கும் பக்தர்களும் உண்டு.
சொல்லும் பொருளுமாகத் திகழும் சத்திய லோகத்தின் நாயகியே நமக்கு ஸித்தியை அருள்பவள். முக்தியும் அந்த முக்திக்கு வித்தாகி முளைத்தெழும் புத்தியும் அவளே.
திருவானைக்காவில் அருளும் நம் அன்னை அகிலாண்டேஸ்வரி, ஒருநாள் தாம்பூலம் தரித்தபடியே கோயிலை வலம் வந்துகொண்டிருந்தாள்.
அங்கே ஒரு சமையற்காரன் உறங்கிக்கொண்டிருந்தான். கோயிலின் மடைப்பள்ளியில் பணிபுரிபவன். அவனை வித்யாவதி எழுப்பினாள். “வாயைத் திற” என்றாள். திறந்தான். தமது திருவாய்த் தாம்பூலத்தை அவனுக்கு அருளினாள். நாவன்மை வாய்த்தது அந்த மடைப்பள்ளி பணியாளனுக்கு. பிற்காலத்தில் உலகமே வியக்கும் உயர்ந்த கவிஞனானார். ஆம்!  அவர்தான் கவிகாளமேகம்; சிலேடை இலக்கியத்தின் செல்லச் சிநேகிதன்.
பேசாத குழந்தையை முருகனைக் கொண்டு பேச வைத்தாள் அன்னை. அந்தக் குழந்தையே குமரகுருபரர். காசியில் மடம் கட்டுவதற்கு இடம் வேண்டும் என்று குமரகுருபரர் பரிதவித்த நிலையில், அவர் டில்லி பாதுஷாவிடம் பேசுவதற்காக அவருக்கு இந்துஸ்தானி மொழியைக் கற்பித்தாளாம் அன்னை. அதன் பிறகு அவர் ஆற்றிய உரையைக் கேட்டு கம்ப ராமாயணத்தின் சுவையை அனுபவித்த துளசி தாஸர், ‘நாம சரீத மானஸ்’ எனும் பொக்கிஷத்தையும் அனுமன் சாலீசாவையும் அருளினார்!
இப்படி காளிதாஸருக்கும், கவிகாளமேகத்துக்கும், குமரகுருபரருக்கும் அருள்புரிந்த தேவியே ஒட்டக்கூத்தனுக்கும் அருளிய நாயகியாய் கூத்தனூரிலும் அருள்பாலிக்கிறாள்.

`நாவிற் சரஸ்வதி நற்றுணையாக…’
`காரார்குழலாள் கலைமகள் நன்றாய் என் நா இருக்க…’

கந்தர் சஷ்டிக் கவசத்தில் உள்ள இந்த வரிகளை எத்தனை முறை படித்திருப்போம். நாமகள் நம் நாவில் குடியிருந்தால் தான் தெய்வ வணக்கத்தைப் பரிபூரணமாகச் செய்து மகிழ முடியும்.
நாமும் நாமகளைப் பணிவோம். இதோ, பொதுத் தேர்வுகள் நெருங்குகின்றன. படித்தது மனதில் நிலைத்திட, மனதில் பதிந்தவை மறந்துவிடாதிருக்க, உங்கள் பிள்ளைகள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றிபெற அனு தினமும் கலைமகளைத் துதித்து வழிபட அவர்களுக்கு வழி காட்டுங்கள். நாவில் மட்டுமல்ல பிள்ளைகளின் மனதிலும் நிரந்தரமாகக் குடியேறி திருவருள் புரிவாள் கலைவாணி!

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய் பங்க யாணைத்திற்
கூடும் பசும் பொற் கொடியே! கனதனக் குன்றுமைம் பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே!