Monthly Archives: மார்ச், 2018

வளர்ற பிள்ளைங்க நல்லா சாப்பிட வேணாமா…

வளர்ற பிள்ளை… நல்லா சாப்பிட வேணாமா…’ என்பது வளர் இளம்பருவத்தினரைக் கொண்ட குழந்தைகள் வீட்டில் அடிக்கடி கேள்விப்படுகிற வாசகம். அப்படி என்னென்ன ஆரோக்கியமான உணவுவகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?

Continue reading →

90 நிச்சயம்… 100 லட்சியம்!

முதுமை வந்துவிட்டால் உடல்நலக் கோளாறுகள், தளர்ச்சி, நம்பிக்கைக் குறைவு போன்ற காரணங்களால்
வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பார்கள். ஆனால், அப்படி இல்லாமல் வெளியிடங்களுக்குச் சென்று வருவதும், பலருடன் கலந்துரையாடுவதும் ஆயுளை நீட்டிக்கும் என்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

Continue reading →

வீட்டிலேயே அழகு சிகிச்சை

ழகுப் பிரச்னைகள் அனைத்துக்கும் பார்லர் போவதுதான் தீர்வா?  பிரச்னைகள் வராமலிருக்க வீட்டிலேயே கடைப்பிடிக்கிற சிகிச்சை களைப் பின்பற்றுவது உதவாதா? என்கிற கேள்வி பலருக்கும் உண்டு. நோய் வருமுன் தவிர்க்க முன்கூட்டியே வீட்டு சிகிச்சைகளை மேற்கொள்வதைப் போல, அழகு சிகிச்சையிலும் பின்பற்றலாம். உங்கள் சருமம் எப்படிப்பட்டது என்று தெரிந்துகொண்டு அதற்கேற்ப தினசரி அக்கறை எடுத்துக்கொண்டாலே அழகைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

வறண்ட சருமத்துக்கு….

Continue reading →

திருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்!

திருமண வாழ்க்கைதான் ஒருவரது எதிர்காலத்தை நிர்ணயிப்பதுடன், அடுத்ததொரு செழுமையான  தலைமுறைக்கும் வித்திடுகிறது. அறத்தைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்குவகிப்பது திருமணப் பந்தம். ஆனால் சிலருக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் திருமண வரம் கைகூடுவதில்லை. இதற்கு முன்வினை பயன் என்றும், ஜாதக நிலையென்றும் எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன.

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 29.03.2018

ராங் கால் – நக்கீரன் 29.03.2018

Continue reading →

கழட்டிவிட்ட அப்போலோ–நக்கீரன் 29.03.2018

கழட்டிவிட்ட அப்போலோ–நக்கீரன் 29.03.2018

Continue reading →

அசைவத்தால் அதிகரிக்கும் அமிலம்!

தற்போது நாம் பின்பற்றும் மேற்கத்திய உணவு முறை காரணமாக ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பது அதிகமாகிக்கொண்டே போகிறது. உலக அளவில் 100 பேரில் 8 பேருக்கு இந்த நிலைமை உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

யூரிக் அமிலம் என்பது கல்லீரலில் உண்டாகிற ஒரு கழிவுப்பொருள். உடலில் டி.என்.ஏ. எனும் மரபணு தாங்கியின் உற்பத்திக்கு ‘பியூரின்’ எனும் மூலக்கூறுகள் தேவை. நாம் சாப்பிடும் அசைவ உணவில் இது அதிகம் இருக்கிறது. சைவ உணவில் தேவைக்கு இருக்கிறது.

Continue reading →

கண்டிப்பு – கத்தி மேல் நடக்கும் கலை

குழந்தைகளைப் போல் கள்ளம் கபடம் அற்றவர்கள் யாரும் இல்லை. அவர்கள் தங்களது இயல்பான நடவடிக்கைகளைச் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றிக்கொள்ள மாட்டார்கள். பக்கத்து வீட்டுக்காரர் வந்தால் ‘அப்பா! ஓசி காபி குடிக்க வருவார் என்பாயே, அந்த அங்கிள் வந்திருக்கிறார்!’ எனச் சத்தமாகச் சொல்வார்கள்.

Continue reading →

வீட்டுச் சிறையில் அடைபட்டிருக்கிறாரா சசிகலா?!’ – தினகரன் மீது பாயும் சசிகலா ஆதரவாளர்கள்

பரோல் காலம் முடிவதற்கு முன்னரே, நாளை பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் செல்ல இருக்கிறார் சசிகலா. ‘ பரோல் காலத்தில் சசிகலாவிடம் யாரும் பேசிவிடக் கூடாது என்பதில் தினகரன் தெளிவாக இருக்கிறார். மொத்தத்தில் அருளானந்தம் நகரில் உள்ள வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் சசிகலா’ என்கின்றனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சீனியர் நிர்வாகிகள்.

Continue reading →

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் – திருநீற்றுப் பிரசாதம்!

ண்பொருநை தாமிரபரணி தவழ்ந்தோடிப் புனிதம் சேர்க்கும் நெல்லை மாவட்டத்தை, `சாஸ்தாவின் பூமி’ என்று சொல்லுமளவுக்கு எண்ணற்ற சாஸ்தா கோயில்கள் அமைந் திருக்கின்றன. அவற்றில் ஒன்று அருள்மிகு வன்னிய செண்பக சாஸ்தா திருக்கோயில். நெல்லை-தென்காசி சாலையில் உள்ள ஆலங்குளத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். நெல்லை மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் சென்னை, மதுரை போன்ற பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தேடிவந்து வழிபடும் தெய்வம், ஸ்ரீவன்னிய செண்பக சாஸ்தா.

வல்லரக்கன் எனும் அசுரன் ஒருவன், சிவபெருமானைக் குறித்துக் கடும் தவமியற்றினான். தவத்தின் பயனாக சிவ பெருமானின் தரிசனம் கிடைத்தது. அவரிடம், தனக்கு   அளவற்ற ஆற்றல் வேண்டும் என்றும், தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர் பஸ்பமாகிவிட

Continue reading →