Advertisements

விரதமும், உடல் ஆரோக்கியமும்!

நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மறு துவக்கம் செய்வோமில்லையா… அதேபோல், நம் உடலில் ஜீரண கோளாறு, தலைவலி, நீரிழிவு அல்லது கேன்சர் போன்ற உபாதைகள் எதுவாக இருந்தாலும், நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து, தண்ணீர் மட்டும் அருந்துவதே.

நம் உடலுக்கு, தனக்கு ஏற்படும் நோய்களை, தானாக சரி செய்து கொள்ளும் ஆற்றல் உண்டு. உணவு தவிர்ப்பதன் மூலம், நாம் இந்த ஆற்றலை ஊக்குவித்து, விரைவுபடுத்த முடியும்.
வயிற்றுக்கு செரிமான வேலை இல்லாத போது, உடலுக்கு வேண்டிய ஓய்வு கிடைப்பதுடன், நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு வைக்கப்பட்ட நச்சுகளை, சுத்திகரித்து வெளியேற்றுதல், உடல் கோளாறுகளை சரி செய்தல் மற்றும் உடலுறுப்புகளை புதுப்பித்தல் போன்ற வேலைகளில், உடல் ஈடுபடும்.
தொடர்ச்சியாக, இரண்டு நாட்களுக்கு மேல் விரதமிருக்கும் போது, கல்லீரல் மற்றும் தசைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள, ‘க்ளைகோஜன்’ சர்க்கரையாக மாற்றப்பட்டு, உபயோகப் படுத்தப்படுகிறது.
உடலில், சர்க்கரையின் அளவு குறையும் போது, சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பை, உடல், தன் எரிபொருளாக்கி கொள்கிறது. இதற்கு, ‘கீடோசிஸ்’ என்று பெயர். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம்.
வாரத்திற்கு ஒரிரு நாட்கள், இடைப்பட்ட விரதமிருப்பதை வழக்கமாக்கினால், வளர் சிதை மாற்றத்தில், நல்ல முன்னேற்றம் காண்பதுடன், நீரிழிவு, இன்சுலின் எதிர்ப்புத் தன்மை, அதிக கொலஸ்ட்ரால், அதிக ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை ஆகியவற்றை, வெகுவாக கட்டுக்குள் வைக்க இயலும்.

ஹேமா வெங்கட், ஹோலிஸ்டிக் நியூட்ரிஷனிஷ்ட், கனடா.
heven268@hotmail.com

Advertisements
%d bloggers like this: