பலன் தரும் பனங்கிழங்கு

னைமரம் மனிதர்களுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக, பனையில் இருந்து பெறப்படும் பதநீர், கருப்பட்டி, பனங்கிழங்கு என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிறைந்தவை.

* சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பனங்கிழங்குக்கு உண்டு.

* குறைந்த சர்க்கரை அளவைக் (low glycemic index) கொண்டிருப்பதால் இன்சுலின் செயல்பாடுகளை அதிகரிக்கும்.
* நார்ச்சத்து அதிகம் இருப்பதால் சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது.

* மேக ஒழுக்கு உள்ளிட்ட பால்வினை நோய்களுக்கு `ஒடியல்’ எனப்படும் பனங்கிழங்குக் கூழ் மிகவும் நல்லது. பனங்கிழங்கைக் காய வைத்துப் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதில் காய்ந்த மிளகாய், புளி, உப்புச் சேர்த்து நீர்விட்டுக் கொதிக்க வைத்துக் கிளறி இறக்கினால் கிடைப்பதே ஒடியல் கூழ்.
* உடல் சூட்டைத் தணிக்கும்.
* பனங்கிழங்கில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் (omega 3 fatty acid) உள்ளது. இது இதய நோய், உடல் பருமன் தடுக்கும்.
* வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலைப் புத்துணர்வுடன் வைக்கும்.
* ஒடியல் கூழ், குழந்தைகளுக்கு ஊட்டம் தரும் உணவாகும். இதில் கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்து, பெரியவர்கள் சாப்பிட்டால் பித்தம் விலகும். புரதச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட், வைட்டமின், தாது உப்புகள் இதில் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

One response

  1. Thank you useful

%d bloggers like this: