Advertisements

வலிப்பு நோயை தீர்க்கும் மருத்துவம்: மூலிகை மருத்துவர் சக்தி சுப்ரமணியம்

வலிப்பு நோய் வந்தாலே நமக்கு மனதில் பீதி ஏற்பட்டு விடுகிறது. ஆனால் அந்த வலிப்பு நோய்க்கு  வெங்காயம், அகத்திக்கீரை, மிளகு, பனை வெல்லம் ஆகியவை மருந்தாக இருக்கிறது. இதெல்லாம் எங்கோ காடுகளிலோ மலைகளிலோ இல்லை நமது

அடுப்பங்கரையில் இருக்கும் சின்ன சின்ன பொருட்களை வைத்து வலிப்பு நோயை எளிதில் போக்கலாம். வலிப்பு நோய் தீர என்ன வழி
* வெள்ளை வெங்காயத்தை தட்டிச்சாறு பிழிந்து வலிப்பு வந்தவரின் காதில் 2 அல்லது 3 சொட்டு விட்டால் காக்காய் வலிப்பு அடங்கிவிடும்.
* அகத்திக்கீரை, மிளகு, பசுவின் கோமியம் ஆகிய மூன்றையும் சேர்த்து அரைத்து அடைபோல் தட்டி காயவைத்து தூளாக்கி பொடிசெய்து நசியவிட (மூக்கில் உறிஞ்சு) வலிப்பு நோய் படிப்படியாக குறையும்.
* மாங்கொட்டைக்குள் இருக்கும் பருப்பை வேகவைத்து சாப்பிட்டால் குடல் நோய்கள், மூலநோய், காக்காய் வலிப்பு, கோடைகாலத்தில் ஏற்படும் உஷ்ணபிணிகள் போன்றவை தீரும்.
* முருங்கை பட்டையை நீர்விட்டு அவித்துச் சாறெடுத்து ரசமாக்கி உணவுடன் சாப்பிட்டுவர குளிர் காய்ச்சல் பாரிச வாயு, காக்காய் வலிப்பு தீரும்.
* இரண்டு கிராம் பொரித்த பெருவெங்காயத்தை பனை வெல்லத்தில் பொதித்து உண்டுவர வாதநோய், மண்டை நீரேற்றம், சன்னி, உதிரச் சிக்கல், கீல்வாதம் வெறிநாய்க்கடி, வலிப்பு தொண்டைக்கம்மல், செரியாமை, பேதி, வயிற்றுப்பெருமல், வயிற்றுவலி, குட நுண் புழுக்கம் ஆகியவை தீர்ந்துவிடும்.
* தும்பை இலையை கசக்கி பிழிந்து துளி மூக்கில் விடவும் இரண்டு மூன்று தரம் விட்டுவர காக்காய் வலிப்பு நோய் குணமாகிவிடும்.திராட்சை பழச்சாற்றை தினம் மூன்று வேளையும் இரண்டு தேக்கரண்டி அளவு கொடுத்து வர குழந்தைகளின் வலிப்பு நோய் தீர்ந்து விடும்.

Advertisements
%d bloggers like this: