Advertisements

பேய் பயம் (Phasmophobia)

பேய்கள் பற்றிய பயம் உலகம் முழுவதும்  இருக்கிறது. பேய்கள் பற்றிய ஆழமான பயம் கொண்டிருப்பவர் பாஸ்மோபோபியாவால் (Phasmophobia) பாதிக்கப்படுகிறார். கிரேக்க மொழியில் ‘பாஸ்மோ’ என்றால் இயற்கைக்கு அப்பாற்பட்டது என்று அர்த்தம். திகில் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது கனவுகள், இறந்துபோனவர்கள் பற்றிய எண்ணம் போன்றவற்றால் ஒருவரின் மனம்

பாதிப்படையலாம். மூளையில் சுரக்கும் அமைக்டலா (Amygdala) எனும் ரசாயனமும் இவ்வித பயம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். பேய் பயமும் இருட்டைப் பற்றிய பயமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

குழந்தைகள் பொதுவாக பேய் என்றால் பயப்படுவார்கள். ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரியவர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிகுறிகள்: உடல் மற்றும் மனநல அறிகுறிகளை வைத்துப் பாதிப்பைக் கண்டறியலாம். பயத்தின் காரணமாகக் குழந்தைகள் படுக்கையை நனைத்துவிடுவார்கள். திடீரென இரவில் விழித்தல், அதிகமான வியர்வை, மயக்கம், எரிச்சல், கோபம் போன்ற அறிகுறிகள் தென்படும். தூக்கமின்மை, மனஅழுத்தம், பணி அல்லது பள்ளியில் கவனம் செலுத்தமுடியாத நிலை, மனச்சோர்வு, குமட்டல், வயிற்றுப்போக்கு, வாந்தி எடுத்தல், தூக்கமின்மை, தலைச்சுற்றல், சிறுநீரக அதிகரிப்பு போன்றவையும் இருக்கும்.
சிகிச்சை: பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சிகிச்சை பெறுவதையே தவிர்ப்பார்கள். தங்களின் பயத்தை ஒப்புக்கொள்ளவும் மறுப்பார்கள். இவர்களின் பயத்தைப் போக்க பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முயற்சி அவசியம். குழந்தைகளின் பயத்தைப் போக்க பெற்றோர் வீரமான சம்பவங்கள், தைரியமான கதைகள் போன்றவற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பெரியவர்கள் தங்கள் பயத்தைப் புரிந்துகொண்டு, சிகிச்சைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

Advertisements
%d bloggers like this: