Advertisements

ஸ்டாலின் முதல்வராக வரட்டும்!” – ரஜினி, கமலை சீண்டிய வைகோ

ஜினி பற்றிய அட்டைப்படக் கட்டுரையை ஆர்வத்துடன் வாங்கிப் படித்த கழுகார், அட்டையையும் பார்த்துச் சிரித்தார். அவரிடம், ‘‘எம்.ஜி.ஆர் சிலைத் திறப்பு விழாவில், ரஜினியின் அரசியல் என்ட்ரி பேச்சு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளதே?’’ என்றோம்.

‘‘ஆமாம்! மனதில் இதுவரை தேக்கி வைத்திருந்த அனைத்தையும் சொல்ல ஆரம்பித்துவிட்டார். இதுவரை சொல்லத் தயங்கியவற்றையும் பேசினார். வழக்கமாக, மிக ஜாக்கிரதையான வார்த்தைகளைப் போட்டு, ‘யாராவது தப்பாக எடுத்துக் கொள்வார்களோ’ என்று பயப்படுவார் அல்லவா? அதுமாதிரி இல்லாமல் தைரி யமாகப் பேசினார். தமிழ்நாட்டின் இரண்டு பெரிய சக்திகளையும், முக்கியத் தலைவர் களையும் உன்னிப்பாகக் கவனிக்க வைத்து விட்டார் என்றே சொல்கிறார்கள்.”
‘‘இரண்டு சக்திகள் என்றால்..?”
“ஒரு காலத்தில் சொல்வார்கள் அல்லவா, ‘தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் கட்சி, கருணாநிதி கட்சின்னு ரெண்டு கட்சிகள்தான் உண்டு’ என்று. எம்.ஜி.ஆரையும் வானளாவப் புகழ்ந்தார். கருணாநிதியையும் புகழ்ந்து தள்ளினார். அதை வைத்துத்தான் சொல் கிறேன்,இரண்டு கட்சிக்காரர்களையும் இழுக்கும் வகையில் பேசினார் என்று!”
‘‘ரஜினியின் பேச்சு முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா?”

‘‘அப்படித்தான் தெரிகிறது. பல மாதங்களுக்கு முன்பே தயாரானதுதான் எம்.ஜி.ஆரின் சிலை. ரஜினி அதைத் திறக்க வேண்டும் என்பது ஏ.சி.சண்முகத்தின் திட்டம். ‘நான்கைந்து மாதங்களாக நடையாக நடந்தார். ரஜினிதான் தேதி தராமல் இருந்தார். ஒரு கட்டத்தில் ஏ.சி.சண்முகம் வெறுத்துப்போனார். திடீரென்று ரஜினி மனம்மாறினார்’ என்கிறார்கள். நிகழ்ச்சி யில் மாணவர்களுக்கு மட்டும் சில வார்த்தை களைப் பேசலாம் என்று ரஜினி நினைத்துள்ளார். அதன்பிறகு, எம்.ஜி.ஆருக்கும் தனக்குமான தொடர்புகளைப் பட்டியலிட நினைத்துள்ளார். இரண்டு நாள்களுக்கு முன்னதாகத்தான் அரசியல் பேசிவிடுவது என முடிவெடுத்து, பேச்சைத் திட்டமிட்டிருக்கிறார். மேடைக்கு வந்தபோது கொடுக்கப்பட்ட வரவேற்பு, அவரை முழுமை யான  அரசியல்வாதி ஆக்கிவிட்டது.‘முதலில் மாணவர்களுக்காக சில வார்த்தைகள் பேசிவிட்டு, கடைசியாக அரசியல் பேசலாம்’ என்று திட்ட மிட்டிருந்தார் ரஜினி. அவருக்கு முன்னதாகப் பேசியவர்கள் அரசியல் அதிகமாகப் பேசியதும், ரஜினியின் ஆரம்பமே அரசியல்மயமாகிப் போனது.”
‘‘ம்!”
‘‘அதில், சிவாஜியையும் உள்ளே கொண்டு வந்தாரே?”
“சிவாஜியை உதாரண மாகச் சொல்ல வந்ததே, கமலை மறைமுகமாகக் குறிப்பிடத்தான் என்று சொல்கிறார்கள். சிவாஜி சிலை திறப்பு விழாவின் போது, சிவாஜியின் அரசியல் தோல்வியைச் சொன்னார் ரஜினி. ‘தகுதி, திறமை, புகழுக்கு மேலே ஒன்று வேண்டும்’ என்று சொன்னார். ‘அது என்ன என்பது கமலுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. தெரிந்தாலும் எனக்குச் சொல்லமாட்டார்’ என்றார். பொதுவாகவே, கமலை சிவாஜியுடன்தான் ஒப்பிடுவார்கள். இதை வைத்துப் பார்க்கும்போது, சிவாஜி பற்றிச் சொன்ன அனைத்தும் கமலை நினைத்துச் சொன்னதாகவே பரப்பப்படுகிறது.”
“சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்த ஏ.சி.சண்முகம் இன்னமும் பி.ஜே.பி கூட்டணியில்தானே இருக்கிறார்?”
“ஆமாம்! ‘இது, நானாக எடுத்த முயற்சி. இதற்கும் பி.ஜே.பி-க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று சொல்கிறாராம் ஏ.சி.எஸ்., ‘எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஒரு நல்ல அரசியல் தலைவர் கிடைக்கவில்லையே என்று ஏங்கினேன். தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்று ஏங்கினேன். தனிக்கட்சி நடத்திய என்னால், எதையும் சாதிக்க முடியவில்லை. தோல்வியடைந்தேன். அரசியலில் பல்வேறு வகையில் பழிவாங்கப்பட்டேன். இப்போது, ரஜினியை எம்.ஜி.ஆரின் உருவில் பார்க்கிறேன். அவரை எந்தத் தீயசக்தியும் அண்ட விடாமல் பாதுகாப்பேன். இனி, என் அரசியல் பயணம் ரஜினியுடன் இணைந்துதான் இருக்கும்’ என்று ஏ.சி.எஸ் சொல்ல ஆரம்பித்துள்ளாராம். அவரிடமிருந்து பழைய விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறாராம் ரஜினி. தடபுடலான விழா ஏற்பாட்டைப் பார்த்து ரஜினி அசந்துபோய், மறுநாள் தனது வீட்டுக்கு ஏ.சி.சண்முகத்தை அழைத்து ஸ்பெஷல் தேங்க்ஸ் சொன்னாராம்.”

‘‘ஓஹோ!”
‘‘ ‘நீதிமன்ற உத்தரவு இருக்கும்போது, எப்படி பேனர்கள், கட்அவுட்களை பிஸியான ரோடுகளில் வைக்க விட்டீர்கள்? ரசிகர்களுக்கு முன்கூட்டியே சொல்ல வேண்டாமா?’ என்று கோபப்பட்டாராம் ரஜினி. இந்தப் பிரச்னையை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி எதிர்த்துப் போராட ரெடியானார். உடனே, ரஜினி வருத்தம் தெரிவித்ததுடன், இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என்று அறிவித்துவிட்டார். இதேபோல், ரஜினிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் பவுன்ஸர்கள், பாதுகாப்புத் தருவதற்குப் பதிலாக ரஜினி எரிச்ச லாகும் அளவுக்கு நடந்துகொள்கிறார்களாம். பவுன்ஸர்கள்,அவர்களுக்கு வேண்டப் பட்டவர்களைப் பாதுகாப்பு வளையத்துக்குள் வரவழைத்து ரஜினியுடன் செல்ஃபி எடுக்க வைக்கிறார்களாம். போலீஸும் சரிவர பாதுகாப்புத் தருவதில்லை. ‘இதற்கு ஒரே வழி, பிரத்யேகமாக பூனைப்படையை உருவாக்குவது தான்’ என்று ரஜினிக்கு நெருக்கமானவர்கள் யோசனை சொன்னார்களாம்.”
‘‘பூனைப்படை என்றால் மத்திய அரசு கொடுக்குமே?”
“நீர் எங்கே வருகிறீர் என்று புரிகிறது. ஆட்சிக் கலைப்பு விரைவில் நடக்கும் என்பதால், இப்போதிருந்தே, தனக்கெனப் பாதுகாவலர்களை ரஜினி ரெடி பண்ணுகிறார் என்று தகவல் வருகிறது. ரஜினி தன் மன்றப் பிரமுகர்களை மாவட்டவாரியாகச் சுற்றுப்பயணம் போகச் சொல்லிவிட்டார். இப்படி இதுவரை, சுமார் 13 மாவட்டங்களின் நிர்வாகிகளை நியமித்து விட்டார். எங்கும் பெரிய அளவில் பிரச்னை இல்லை. இதற்குக் காரணமான மக்கள் மன்ற செயலாளர் ராஜு மகாலிங்கத்தை எப்படியாவது ரஜினியிடமிருந்து பிரிக்க மன்றத்தில் உள்ள அதிருப்தி கோஷ்டி கிளம்பியிருக்கிறதாம்.”
“அது சரி… ம.தி.மு.க பொதுக்குழு கூடியதே?”
“தி.மு.க-வுடன்தான் கூட்டணி என முடிவான நிலையில் நடந்த பொதுக்குழு இது. ம.தி.மு.க-வின் எதிர்காலம் பற்றியும், தி.மு.க-வுடனான கூட்டணி பற்றியும் பேசப்பட்டுள்ளது. ‘தி.மு.க-வுடன் கூட்டணி போவது சரியா, அவர்கள் பழைய மரியாதையைத் தருவார்களா, ஸ்டாலின்தான் முதலமைச்சர் என்று பேச முடியுமா?’ என்ற சிலருடைய சந்தேகங்களுக்கு வைகோவே முன்வந்து பதில் சொல்லிவிட்டாராம்!”

“இப்படி யாராவது சந்தேகம் கிளப்பினார்களா?”
“யாரும் பேசவில்லை. யார் மனதிலாவது அந்தச் சந்தேகம் இருந்தால், அதற்குப் பதில் சொல்வது மாதிரி பேசியிருக்கிறார் வைகோ. ‘யார் யாரோ புதிதுபுதிதாகக் கட்சி தொடங்கு கிறார்கள். நடிகர்களெல்லாம் முதல்வராக வேண்டும் என்று துடிக்கிறார்கள். ஆனால், திராவிட இயக்கத்திலே வளர்ந்து, மிசா கொடுமையை அனுபவித்து, தி.மு.க-வில் 50 ஆண்டுகளுக்கு மேல் களப்பணியாற்றி வரும் ஸ்டாலின் முதல்வராக ஏன் வரக் கூடாது? ரஜினி, கமலை விட ஸ்டாலின் எந்தவிதத்தில் குறைந்தவர்?’ என்று வைகோ விளக்கம் அளித்துள்ளார்.”
“அப்படியா?”
“ஆமாம்! இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொன்னாராம். ‘நாளைக்கே தி.மு.க-வுடன் தேர்தல் கூட்டணி முரண்பாடுகள் வரும், சீட் பிரச்னை வரும். இப்போது தளபதியைப் புகழ்ந்துவிட்டு அப்போது கூட்டணியை விட்டு விலகிவிடும் நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றெல்லாம் யாரும் நினைக்க வேண்டாம். எத்தனை சீட்டுகள் கொடுக்கிறார்கள் என்ற நோக்கத்துக்காக எடுக்கப்பட்ட அரசியல் முடிவு அல்ல இது. திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்கு பல்வேறு முனைகளிலிருந்து பலரும் துடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தி.மு.க பக்கம் நாம் இருக்க வேண்டும். திராவிட இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட அரசியல் முடிவு இது’ என்று வைகோ பேசியுள்ளார்” என்ற கழுகாரிடம், “திடீரென ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் டிரான்ஸ்ஃபர் நடந்துள்ளதே?” என்றோம்.
‘‘ஆமாம். ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாடு முடிவடைந்த நேரத்தில், திடீரென 19 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். காலியாக இருந்த முதல்வர் அலுவலக செகரட்டரி(1) பதவிக்கு சாய்குமார் வந்துள்ளார். தமிழ்நாடு மின் வாரியத் தலைவராக இருந்த சாய்குமார், கோடைக்காலத்தில் மின்வெட்டு பிரச்னையைச் சமாளிக்க நல்ல திட்டங்களை அரங்கேற்றிக் கொண்டிருந் தாராம்.  தன்னுடைய அலுவலகத்துக்கு அவர் வேண்டும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் முதல்வர் எடப்பாடி கேட்டுள்ளார். சற்று தயக்கத்துடன் தங்கமணி ஓகே சொல்லியுள்ளார்” என்றபடி பறந்தார் கழுகார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: