Advertisements

உணவியலும் உளவியலும்!

ங்கள் பர்சனாலிட்டி, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பாதிக்கும் என்றால் நம்புவீர்களா? `என்னப்பா இது… ஒருத்தரோட குணத்துக்கும் சாப்பாட்டுக்கும் எப்படித் தொடர்பு இருக்க முடியும்?’ என்கிற கேள்விதான் எழும். `இது உண்மை…’ என்று அடித்துச் சொல்கிறது ‘தி காமன்வெல்த் சயின்டிஃபிக் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் ஆர்கனைசேஷன்’ (CSIRO). அதோடு, ஐந்து பர்சனாலிட்டிகளைப் பட்டியலிட்டு, `இவர்கள் இப்படியெல்லாம்தான் சாப்பிடுவார்கள்’ என்றும் ஒரு லிஸ்ட் கொடுக்கிறது.

ஐந்தில் நீங்கள் எந்த வகை?

எல்லாவற்றுக்கும் ஏங்குபவர் (Craver):

இவர் உணவு விஷயத்திலும் விதவிதமான ருசிக்கு ஏங்குபவராகத்தான் இருப்பார். இவரால் நாக்கைக் கட்டுப்படுத்த முடியாது.

யோசனையிலிருப்பவர் (Thinker):

எப்போதும் ஏதோ ஒரு சிந்தனையிலேயே இருப்பவர். இவர், ஆரோக்கியமாகச் சாப்பிட நினைத்தாலும், கவலையும் மனஅழுத்தமும் அதைக் கெடுத்துவிடும்.

ஜாலி பேர்வழி (Socialiser):

எப்போதும் நண்பர்கள், குடும்பம் என்று சுற்றம்சூழ இருக்க விரும்புகிறவர். இவர் கொஞ்சம் அதிகமாகவே உணவு, பானங்கள் என ஒரு பிடி பிடிப்பார்.

உணவுப் பிரியர் (Foodie):

இவருக்கு உணவே பிரதானம். எதைச் சமைக்கலாம், சாப்பிடலாம் என யோசித்து யோசித்து அதற்குத் தயாராவது, சமைப்பது, சாப்பிடுவது மட்டுமே பிரதான எண்ணம், செயலாக இருக்கும்.

ஊர்சுற்றி (Freewheeler):

இவர் சாப்பாட்டைப் பற்றிக் கவலைப்படவே மாட்டார். உணவு குறித்த திட்டம் எதுவும் இருக்காது. எது கிடைத்தாலும் சாப்பிடுவார்.

Advertisements
%d bloggers like this: