Advertisements

பித்தம் தெளிய மருந்து

தலை சுற்றல் வாந்தி ஆகியவை பித்தத்தின் அறிகுறிகள். பித்தம் தலைக்கு ஏறினால் வெயிலில் செல்லும் போது தலைசுற்றி கீழே விழுந்து மயக்கம் ஏற்படும். பித்தம் அதிகரித்திருப்பதாக மருத்துவமனைக்கு சென்றால் ஸ்கேன், எக்ஸரே என தெளிந்த பித்தம் மீண்டும் வரும் அளவிற்கு பில் தீட்டிவிடுவார்கள். எனவே பித்தம் அதிகரித்தால் பாரம்பர்ய மருந்தை எடுத்துக் கொண்டால் பித்தமும் தெளியும் பர்சும் பாதுகாக்கப்படும்.

பித்தத்தை தெளிய வைக்கும்
எளிய மருந்துகள்
* பச்சை நெல்லிக்காயை தேனுடன் கலந்து சாப்பிட்டுவந்தால் தலைச்சுற்றல் தீர்ந்துவிடும்.
* வெள்ளிப்பாத்திரத்தில் உணவு சாப்பிட்டால் பித்தகோபம், சிலேத்தும கோபத்தை நீக்கி  மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாவதுடன் உடலும் அழகுபெறும்,
* செம்பு பாத்திரத்தில் உணவு உட்கொண்டால் உடல் உஷ்ணம் சீராகி கண்களுக்கு ஒளியூட்டும். பித்தத்தால் ஏற்படும் நோய்கள் தீர்ந்துவிடும்.
* வெண்கல பாத்திரத்தில் உணவு சாப்பிடுவதால் களைப்பை போக்குவதுடன் உதிர பித்தத்தையும் எளிதில் போக்குகிறது.
* இஞ்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டு துண்டாக நறுக்கித் தேனில் இரண்டு மூன்று நாட்கள் ஊறவைத்து அதிகாலையில் 2 அல்லது 3 துண்டுகள் சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட பித்தமும் தீர்ந்துவிடும். 
* துளசிச்சாற்றில் நல்ல சுத்தமான தேனைக் கலைந்து வைத்துக் கொண்டு இரண்டு குன்றிமணி அளவு அரைமணிக்கு ஒரு தரம் கொடுத்து வந்தால் பித்தவாந்தி தீர்ந்துவிடும்.
* அரிசி களைந்த நீரில் அகத்திக் கீரையை வேகவைத்து சாப்பிட்டுவர அசதி மற்றும் பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்றல் போகும்.
* கொத்துமல்லிக் கீரையை அடிக்கடி துவையல் செய்து சாப்பிட்டுவர அசதி மற்றும் பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்றல் நீங்கிவிடும்.
* பார்லி அரிசி மாவை பிசைந்து மோருடன் குடித்து வந்தால் பித்த வாந்தி, தண்ணீர் தாகம், நெஞ்செரிச்சல் நீங்கிவிடும்.
* உப்பையும் வெள்ளரிக்காயையும் சேர்த்து உட்கொண்டால் செரிமானம் ஏற்படும். உடல் பொலிவடையும். பித்தம் தீரும்.  
* புதினா கீரையுடன் சிறிது கறிவேற்பிலையையும் சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தால் ஏற்பட்ட குமட்டல் வாந்தி ஆகியவை நீங்கிவிடும்.

Advertisements
%d bloggers like this: