Advertisements

அடுத்த பத்தாண்டில் அதலபாதளத்திற்கு செல்லும் 7 தொழில்கள் இதுதானாம்!

அதிநவீன கண்டுபிடிப்புகள், அவுட் சோர்ஸ், இறக்குமதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்ற காரணங்களால் அடுத்த பத்தாண்டுகளில் காணமல் போகும் 6 தொழில்களின் பட்டியல் ஆய்வின் மூலம் பெறப்பட்டுள்ளது. ஐ.டி துறையில் மட்டுமல்ல, உலகின் அத்தனை துறைகளுக்குள்ளும் ஆழம் போட

ஆரம்பித்துவிட்டது ஆட்டோமேஷன். தொழிற்சாலைக‌ள் முதல் நெடுஞ்சாலைக‌ள் வரை எல்லாவற்றிலும் ஆட்டோமேஷன் நுழைந்துவிட்டது. இதனால், செலவு குறைவு, வேலை விரைவு போன்ற சாதகங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் அது வேலை வாய்ப்புகளைக் காவு வாங்குகிறது என்பதுதான் மனிதர்களின் பயம். சமீபத்திய ஆய்வறிக்கையின் படி பின் வரும் தொழில்கள் பற்றிய தகவல்கள், நாம் மகிழும் படியாக இல்லை.
7. செமிகண்டக்டர் (ஐ.ஸி)
ஐ.ஸி சிப் என்பது மிகச்சிறிய அளவில் இருப்பவை நவீன வளர்ச்சியின் ஒரு பகுதியாக காற்று மாசுபடுதல் போன்ற காரணிகளால் இதன் தயாரிப்பு குறைக்கப்படுவதுடன், இதில் பணிபுரியும் ஆட்களும் வெளியேற்ற பட்டு வருகின்றனர். வளர்ந்து வரும் அதிநவீன தொழிட்நுட்ப வேகத்தில் வரும் 2020-ல் இதன் உற்பத்தியானது 17.9 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2010- வரை மட்டும் இத்துறையின் கீழ் 21,100 பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் சராசரி ஊதியம், ₹2151876.33.
6. நெசவுத்தொழில்
ஜவுளிதுறையில் இறக்குமதி அதிகரிப்பு, ஆட்டோமேஷன் எனும் தானியங்கு உற்பத்தி போன்ற காரணங்களால் செட்டர்ஸ், ஆபரேட்டர்கள் மற்றும் டெண்டர்கள் போன்ற துறைகளில் பணியாற்றுவோர் அடுத்த பத்தாண்டுகளில் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வரும் 2020-ல் இதன் உற்பத்தி 18.2 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2010- வரை மட்டும் இத்துறையின் கீழ் 22,500 குடும்பங்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகிறது. இவர்களுக்கு வழங்கப்படும் சராசரி ஊதியம், ₹1680321.18
 
5. தபால் துறை
இமெயில், இன்டெர்நெட் என டிஜிட்டல் படை எடுப்பும், நலிந்து வரும் தபால் பயன்பாடும், இதற்காக ஒதுக்கப்படும் பட்ஜெட் போன்றவையுமே இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. வரும் 2020 பொருத்தமட்டில் இதன் மொத்த உற்பத்தி 27.8 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2010-வரை இத்துறையின் மூலமாக 24,500 பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் சராசரி ஊதியம், ₹3916635.75
 
4. புகையிலை உற்பத்தி
 
அண்மைகாலமாக வெளிநாடுகளில் புகையிலை விவசாயமானது கொஞ்சம் கொஞ்சமாக தரைதட்டி வருகிறது. சுகாதாரத் துறையில் நல்ல செய்தி வந்தால், அது இந்தத் தொழிலில் ஈடுபட்டோருக்கு துக்க செய்தியாக விடிவது ஒன்றும் விதிவிலக்கல்ல! மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 2015 ஆம் ஆண்டில் மட்டும், இதன் உற்பத்தியாளர்கள் செலவிட்ட தொகை ரூ. 44485.97 இதன் மூலம் அடித்தட்டு மக்கள் முதல் பல்வேறு தரப்பினர் படிப்படியாக விழிப்புணர்வு அடைந்துள்ளனர். அண்மைகால ஆய்வின் படி புகையிலையின் தேவை மளமளவென குறைந்து வருவதாக கணிக்கப்பட்டுள்ளது. இப்படியே போனால் வரும் காலத்தில் இதுக்கு மார்க்கெட் அதோ கெதிதான்.
 
3. தோல் உற்பத்தி
உலக நாடுகளை பொருத்தவரை தோல் சந்தை நிலவரம் எப்பொழுதுமே ஈ ஓட்டும் கதையாகத்தான் பார்கப்படுகிறது. இதுக்கு காரணம் உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் ஏற்றுமதிக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் ஒன்று. இது ஒருபுறம் இருக்க ஆய்வின் படி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சதவிகிதத்தை விட இறக்குமதி செய்யப்படும் தோல் பொருட்களின் விற்பனை அதிகம் என தெரியவந்துள்ளது. இது போன்ற காரணங்களால் தோல் சார்ந்த தொழில்களும் வீழ்ச்சியடைந்து வரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
 
2. செய்தித்தாள்
 
செய்தித்தாள்களின் வீழ்ச்சி, டிஜிட்டல் கால ஓட்டத்திற்கேற்ப தான் முழுமையாக ஈடுகொடுக்க முடியாததே காரணமாக அறியப்படுகிறது. வளர்ந்து வரும் நவநாகரிக உலகில் கிண்டில் முதல் ஐ பேட் வரை பல்வேறு சாதனங்கள் தினம் தினம் தீபாவளியாக வெளியாகி வருகின்றன. என்ன சோளமுத்தா போச்சா… என்பது போல 2000 முதல் 2015-குள் பத்திரிகைகளின் விளம்பர வருவாய் தோராயமாக 60 பில்லியன் டாலரிலிருந்து சுமார் 20 பில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில் இதன் வீழ்ச்சி அசுர வேகத்தில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 
1. ஸ்பிரிங் உற்பத்தி
 
பேப்ரிகேட்டர் எனப்படும் மெட்டல் பயன்பாடு நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. தற்போது இது மந்தநிலை காரணமாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இதோடு எண்ணற்ற ஆலைகளும் மூடப்பட்டு வருகின்றன. இதனால் உள்ளூர் தொழிலாளர்களின் தேவை குறைந்து வருகிறது. விலைக்குறைப்பில் ஜாம்பாவன்களான மெக்ஸிகோ மற்றும் சீனாவின் கடுமையான போட்டி காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் பெரும்பாலும் இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது. எது எப்படியே, வீழ்ச்சிக்கான தொழில்கள் வெறும் எண்கள் அல்ல, நாம் சந்திக்கப் போகும் ஆபத்தை உணர்த்தும் குறியீடுகள் என்பது மட்டும் நிஜம். பல்வேறு காரணங்களில், இறங்குமுகமாகிக் கொண்டிருக்கும் ஏற்றுமதியும், அதைச் சார்ந்து தயங்கிக் கொண்டிருக்கும் முதலீட்டாளர்களின் தயக்கமும் இதற்கு முக்கிய காரணங்கள். விளம்பர யுக்தியை விட்டுவிட்டு, கடைசி இடத்துக்கு வந்த காரணம் என்ன என்பதை உணர்ந்து தீர்வுகள் தேடுவதே இப்போதைய அவசியம்.

Advertisements

One response

  1. Useful information Thank you

%d bloggers like this: