இந்தியர்களின் செக்ஸ் வாழ்க்கை – டியூரெக்ஸ் ஆய்வு முடிவுகள்!

உலகிலேயே செக்ஸ் வாழ்வில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்கள் இந்தியர்கள் தானாம். சமீபத்தில் டியூரெக்ஸ் குளோபல் செக்ஸ் சர்வே நடத்தியது. இதில் இந்தியா உட்பட 42 உலக நாடுகள் பங்கெடுத்துக் கொண்டன. இந்த ஆய்வில் உலக நாடுகளை சேர்ந்த 33,000 பேர்

பங்கெடுத்துக் கொண்டனர்.  இந்த ஆய்வில், செக்ஸ் வைத்துக் கொள்வதில் இருந்து, செக்ஸ் வாழ்க்கை சார்ந்த பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில், 80% பேர் செக்ஸ் வைத்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருந்த நிலையில், மூன்றில் இரண்டு பங்கு நபர்கள் தங்கள் செக்ஸ் கோளாறுகளை, சந்தேகங்களை வெளிப்படுத்த சந்கோஜப்படுவதாக கூறி இருந்தனர். இதோ! இந்த ஆய்வில் இந்தியர்களின் செக்ஸ் வாழ்க்கை குறித்து வெளியான தகவல்கள்… 

செக்ஸ்னா என்ன? 

செக்ஸ் என்றால் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 59% பேர் பெண்ணுறுப்பி ரீதியான தீண்டி ஊடுருவும் உறவு என்றும். 45% பேர் ஆண், பெண் மத்தியிலான உடல் ரீதியான இணைப்பு என்றும், 40% பேர் முத்தமிட்டுக் கொள்வது என்றும் பதில் அளித்துள்ளனர். (இன்னுமா செக்ஸ்னா கிஸ் பண்ணிக்கிறதுன்னு நம்பிட்டு இருக்காங்க… அதுவும் 40% பேரு…!)

யார்கூட பேசுவீங்க…

… செக்ஸ் குறித்த சந்தேகங்கள் எழும் போது. அது பற்றிய விவாதங்கள், தகவல்கள் யாரிடம் கேட்டு தெரிந்துக் கொள்வீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 82% பேர் பெற்றோரிடம் என்றும். 61% பேர் நண்பர்களிடம் என்று பதில் கூறியுள்ளனர்.

எத்தனை பேருடன்?

நீங்கள் ஒரே நபருடன் உறவு வைத்துக் கொள்கிறீர்களா? அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் / ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்கிறீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 28% பேர் மட்டுமே ஒரே ஒரு துணையுடன் உறவு வைத்துக் கொள்கிறோம் என்று பதில் அளித்துள்ளனர். 63% சதவித பேர் பலருடன் உறவு வைத்துக் கொள்வதாக பதில் அளித்துள்ளனர்.

காசுக் கொடுத்து…

உலக அளவில் ஒப்பிடும் போது பணம் கொடுத்து செக்ஸ் வைத்துக் கொள்வதில் இந்தியர்களே முதல் இடத்தில் இருக்கிறார்கள். இந்தியாவில் பணம் கொடுத்து செக்ஸ் வைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை 42%. மீத உலகத்தில் இருக்கும் மொத்த மக்களில் 38% பேர் பணம் கொடுத்து செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சுய இன்பம்? 

ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டவர்களிடம் நீங்கள் சுய இன்பம் காண்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பெண்கள் 68% பேரும், ஆண்கள் 73% பெரும் ஆம் என்று பதில் அளித்துள்ளனர். இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட 39% பேர் சுய இன்பம் காண்பதை தவறு என்றும், அது ஆபத்தானது என்றும் கருதுவதாக பதில் கூறியுள்ளனர்.

செக்ஸ் லைப்?

உங்களது செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கிறது? அதில் முழு இன்பம் காண்கிறீர்களா? திருப்தியாக உணர்கிறீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு… 72% பேர் தாங்கள் மிகவும் திருப்தி அடைந்திருப்பதாக பதில் அளித்துள்ளனர். உலகளவில் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகமாகும்.

பாதிக்கு, பாதி! 

ஏனெனில், இதர நாடுகளில், உலகளவில் எடுக்கப்பட்ட ஆய்வில் பாதிக்கு பாதி அதாவது 50% பேர் தான் தாங்கள் உடலுறவில் திருப்தி அடைகிறோம் என்று கூறி இருந்தனர். ஆனால், இந்தியர்கள் 72% தாங்கள் முழு இன்பம் அடைவதாக கூறி இருக்கிறார்கள்.

கருத்தடை? 

சரி! உடலுறவில் 72% முழுமையான இன்பம் காணும் நீங்கள் எத்தகைய கருத்தடை முறையை பின்பற்றுகிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 73% பேர் ஆணுறை பயன்படுத்துகிறோம் என்றும், 25% பேர் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறோம் என்றும்., 13% சதவீத பேர் காலண்டர் நாள் குறித்து வைத்து உடலுறவில் ஈடுபடுகிறோம் என்றும் பதில் அளித்துள்ளனர்.

1006! 

இந்தியர்களின் செக்ஸ் வாழ்க்கை குறித்து டியூரெக்ஸ் குளோபல் செக்ஸ் சர்வே நடத்தியதாக கூறப்படும் இந்த ஆய்வில் மொத்தம் 1006 இந்தியர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இதில் பத்து சதவித ஆண்கள் மற்றும் ஐந்து சதவித பெண்கள் தங்கள் செக்ஸுவல் போக்குநிலை குறித்து அடையாளம் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

பாதுகாப்பற்ற..

. இந்த ஆய்வில் வெளிப்பட்ட அதிர்ச்சிக்குரிய தகவல் என்னவெனில், ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட பாதி பேர் தாங்கள் பாதுகாப்பான உடலுறவில் ஈடுப்படுவதில்லை என்று கூறியது தான். குறைந்தபட்சம் ஒருமுறையாவது தாங்கள் பாதுகாப்பற்ற உறவில் ஈடுபட்டிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

அச்சம் இல்லை! 

இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட ஆண், பெண்களில் பெரும்பாலானோர் தங்கள் துணைக்கு பால்வினை நோய் இல்லை என்று நம்புகிறார்கள். பத்தில் எட்டு பேர் ஆக்டிவாக செக்ஸ் உறவில் இருப்பவர்கள் அதாவது வாரத்திற்கு ஒருமுறையாவது உடலுறவில் ஈடுபடும் நபர்கள். மேலும், பத்தில் ஒரு நபர் தங்கள் செக்ஸ் வாழ்க்கையில் பிரச்சனைகள் இருப்பதாக கூறியுள்ளனர்.

நகர்புற மக்கள்! 

புறநகர் பகுதியில் வாழும் மக்களுடன் ஒப்பிடுகையில் நகர்புறத்தில் வாழும் மக்கள் அதிகம் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள் என்று இந்த ஆய்வின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெரும்பாலானோர் தங்கள் வீட்டையே செக்ஸ் வைத்துக் கொள்ள பாதுகாப்பான இடம் என்று கருதுகிறார்கள். இந்த ஆய்வு இளைஞர் மத்தியில் ஆரோக்கியமான செக்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்தப்பட்டது ஆகும்.

%d bloggers like this: