Advertisements

பன்னீர் – பழனி பனிப்போர் உச்சம் கட்சி பதவிகளை பங்கிடுவதில் குழப்பம்

அ.தி.மு.க.,வில், பன்னீர்செல்வம் – பழனிசாமி இடையே, பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, இரு தரப்பினர் இடையே, கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பின், அ.தி.மு.க.,விலிருந்த தினகரன் ஆதரவாளர்கள், 3,000த்துக்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டனர். அப்பதவியில் புதியவர்களை நியமிக்க முடிவு செய்தனர். ஆனால், பழனிசாமி ஆதரவாளர்கள், முக்கிய பதவிகளை, பன்னீர் தரப்பினருக்கு தர மறுக்கின்றனர். இதனால், புதிய நிர்வாகிகளை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க.,விலிருந்து ஒதுக்கப்பட்ட தினகரன், தனி கட்சியை துவக்கி உள்ளார். அவர், அ.தி.மு.க., நிர்வாகிகளை இழுக்கும் பணியை துவக்கி உள்ளார். கட்சியில் உள்ளவர்கள், வேறு பக்கம் தாவுவதை தடுக்க,

புதிய நிர்வாகிகளை நியமிக்க, இரு தரப்பினரும் முடிவு செய்தனர்.
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், துணை ஒருங்கிணைப்பாளர், கே.பி.முனுசாமி ஆகியோர்,நேற்று முன்தினம், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசித்த னர். அப்போது, பழனிசாமி தரப்புக்கும், பன்னீர் தரப்புக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற் பட்டது. இரவு, 10:00 மணி வரை நடந்த ஆலோசனை கூட்டத்தில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நிர்வாகிகள் நியமனத்தில், இரு தரப்பினருக்கும் இடையே, நாளுக்கு நாள் கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது.
இது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தினகரன் புதிதாக துவக்கியுள்ள கட்சியில், நுாற்றுக் கணக்கில் நிர்வாகிகளை நியமித்துள்ளார். அ.தி.மு.க.,விலிருந்து அவரது ஆதரவாளர்கள், 3,000 பேரை நீக்கி, அவர் பக்கம் அனுப்பி வைத்துள்ளோம். கட்சியில் பதவி இல்லாதவர்கள், பதவியை எதிர் பார்க்கின்றனர். ஒவ்வொருபதவிக்கும், இரு தரப்பி லும் பலர் முட்டி மோதுகின்றனர். இதனால், யாரை நியமிப்பது என்பதை, முடிவு செய்ய முடியாத நிலை உள்ளது.
உதாரணமாக, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலராக, எம்.பி., லட்சுமணன் உள்ளார்.

அவர், பன்னீர் அணியில் இருந்தவர். அவரை நீக்கிவிட்டு, அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட செயலராக முயற்சிக்கிறார். இதற்கு, பன்னீர் அணியினர் சம்மதிக்கவில்லை. இதே போல், ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரச்னை ஏற்படுவதால், புதிய நிர்வாகிகள் நியமிக்கப் படாமல் உள்ளனர். நேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்தில், பழனிசாமி தரப்பு கொஞ்சமும் கீழிறங்கி வராததால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எனினும், இரு தரப்பும், மீண்டும் பேச்சு நடத்தி வருகின்றனர். சுமூக நிலை ஏற்பட்டு, அமாவாசை தினமான இன்று, புதிய நிர்வாகி கள் பட்டியல் வௌி வரத் துவங்கலாம் என, கட்சியினர் நம்புகின்றனர். இரு தரப்பினரும் விட்டுக் கொடுத்தால், கட்சிக்கு நல்லது. இல்லையெனில், பலர் கட்சி மாறக்கூடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisements
%d bloggers like this: