Advertisements

பதநீர் என்கிற இயற்கை டானிக்

தநீர்… பனையில் இருந்து கிடைக்கும் ஒருவித பானம். பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரிப்பார்கள். இனிப்புச் சுவையுடன் கூடிய இந்தத் திரவமே பதநீர்.
* ஊட்டச்சத்துகள் நிறைந்த ஓர் அருமையான இயற்கை பானம். உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த டானிக்.

* சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளையும் குணப்படுத்தும். வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும்.

* பதநீரை, பழைய கஞ்சியுடன் சேர்த்துப் புளிக்க வைத்து ஆறாத புண்கள், கொப்புளங்கள் மீது தடவிவந்தால் குணம் கிடைக்கும்.
* சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால், இதில் உடம்புக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது. எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு.

* பதநீரை 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால், மேக நோய்கள் தணியும்.பெண்களைப் படுத்தும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கு இது நல்ல மருந்து.
* உடலுக்குக் குளிர்ச்சி தரும். மலச்சிக்கலைத் தீர்க்கும். கழிவு அகற்றியாகவும் வியர்வை நீக்கியாகவும் செயல்படும். உடல் வீக்கம், வயிறு தொடர்பான பிரச்னைகளையும் கட்டுப்படுத்தும்.

* பதநீர் சர்க்கரைச்சத்து நிறைந்தது என்றாலும், அது சுரக்க ஆரம்பித்த ஆறு முதல் எட்டு மணி நேரத்துக்குள் அதில் ஆல்கஹால் உருவாகிவிடும்.

Advertisements

One response

  1. சக்கரை நோய் உள்ளவா் குடிக்கலாமா..

%d bloggers like this: