Advertisements

நிலம் முதல் ஆகாயம் வரை… அக்குபஞ்சர்

க்குபஞ்சர் என்றதும், ‘அது சீன மருத்துவம் ஆயிற்றே’ என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால், அக்குபஞ்சர் என்பது நம் பாரம்பர்ய சிகிச்சை முறைகளில் ஒன்று. பஞ்சபூதங்களையும் ஒன்றாக்கி வழங்கப்படும் தொடு சிகிச்சை முறை இது. காலப்போக்கில், பல்வேறு நாடுகளுக்குப் பரவி நவீனப்படுத்தப்பட்டு சீன மருத்துவம் என்ற அடையாளத்தோடு இது மீண்டும் நம்மூரில் பிரபலமாகியிருக்கிறது.

 

18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் மக்கள் மத்தியில் அக்குபஞ்சர் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்பட்டது. மாசிப்பத்திரி என்ற மூலிகையின் சாறைக் கொண்டு, மாக்ஸிபியூஷன் (Moxibustion) என்ற ஹீட் தெரபி சிகிச்சை அளித்து அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பதற்கான புள்ளிகளைக் கண்டடைவார்கள். பிறகு, அதற்கென உருவாக்கப்பட்ட ஊசிகளைக் கொண்டு சிகிச்சையளிப்பார்கள். அந்தக் காலத்தில் அறுவை சிகிச்சைகளின்போது அனெஸ்தீசியாவுக்குப் பதில் அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் மயக்க நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அக்குபஞ்சர் சிகிச்சையின்போது உயிர் ஆற்றல் பாதைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் நீக்கப்படுவதுடன், வலிகளை நீக்கும் ஒருவிதத் திரவம் உடலில் சுரக்கிறது. இதனால் எத்தகைய உடல் கோளாறும் சரிசெய்யப்படும்.

மனிதனின் உடலில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கின்றன. ஆனால், 2 ஆயிரம் புள்ளிகள் மட்டுமே இந்தச் சிகிச்சையில் கையாளப்படுகின்றன. நாடி பிடித்துப் பார்த்து எங்கே எனர்ஜி தடைபட்டிருக்கிறதோ அதற்கான புள்ளிகளைத் தூண்டிவிடுவதன்மூலம் நோய் குணமாக்கப்படுகிறது. சில புள்ளிகளைத் தொட்டாலே, அடைபட்டிருக்கும்  தடை நீக்கப்பட்டு எனர்ஜி எல்லா உறுப்புகளுக்கும் செல்லும். உடல் உறுப்புகள் சீராகும். பொதுவாக உடலையும் மனதையும் இணைத்தே இந்தச் சிகிச்சை அளிக்கப்படும்.

ஓர் இடத்தில் வலி ஏற்பட்டால் அதைப்பற்றிய தகவல், நரம்புகளின் வழியாக `தலாமஸ்’ என்னும் மூளைப்பகுதிக்குக் கொண்டு செல்லப்படும்.  அக்குபஞ்சர் சிகிச்சையால் எண்டோர்பின் (Endorphin), என்கெபலின் (Enkephalin) போன்ற  ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்களுக்கு வலியை நீக்கும் ஆற்றல் உண்டு.  அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதால் தசை, நரம்புகள் வலுவடையும். அக்குபஞ்சர் சிகிச்சை, ஹார்மோன்களைச் சீராகச் செயல்படச் செய்து இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துவிடும். ஆஸ்துமா, சைனஸ், சளி மற்றும் சுவாசப்பிரச்னைகள், கர்ப்பப்பை நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், மனஅழுத்தம், வயிறு – குடல் சார்ந்த நோய்கள், ஒற்றைத்தலைவலி, பாத எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மூட்டுத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள், பக்கவாதம் என ஏராளமான நோய்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சையில் தீர்வு இருக்கிறது.

Advertisements
%d bloggers like this: