ஃபுட் பாய்சன் தவிர்ப்போம்!

சரியாகச் சமைக்காமல், முறையாகப் பாதுகாக்காமல் இருந்தால், எந்த உணவும் விஷமாகலாம். அப்படி விஷமாகும் அபாயத்தைக் குறைக்க 5 வழிகள்…

* காய்கறிகள் பார்ப்பதற்கு ஃப்ரெஷ்ஷாகவே இருக்கட்டும். அவை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு மண்ணில் விளைகின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, சமைப்பதற்கு முன்னதாக, அவற்றை நன்றாக, சுத்தமாகக் கழுவ வேண்டியது அவசியம்.

* ஒவ்வொருமுறை சமைப்பதற்குத் தயாராவதற்கு முன்னதாகக் கைகள், காய் நறுக்கும் பலகை, அரிவாள்மணை அல்லது கத்தி, சமைக்கும் பாத்திரங்கள், சமைக்கும் மேடை, பாத்திரம் கழுவும் தொட்டி… எனச் சமையலுக்கான ஒவ்வொரு பொருளையும் சோப்புப் போட்டு, சூடான நீரில் நன்றாகக் கழுவ வேண்டும்.

* உணவுகள் அசுத்தமாகாமலோ, அவற்றில் கிருமித்தொற்று ஏற்படாமலோ இருக்க வேண்டுமா? பச்சை முட்டைகள், கோழிக்கறி, மற்ற இறைச்சிகள், மீன் ஆகியவற்றை வைத்திருந்த பாத்திரத்திலோ, இடத்திலோ எந்த உணவையும் வைக்கக் கூடாது. நன்றாகக் கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும்.

* உணவைச் சரியான வெப்பநிலையில் சமைக்க வேண்டும். விரைவில் கெட்டுப்போகக்கூடிய, உடனே சாப்பிட வேண்டிய அவசியமில்லாத உணவுகளை முறையாக ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

* விரைவில் கெட்டுப்போகும் உணவுகளை, அறை வெப்பநிலையில் இரண்டு மணி நேரத்துக்கும்மேல் அல்லது, 32 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருக்கும் வெப்பநிலையில் ஒரு மணி நேரமோ வைக்கக் கூடாது. தூக்கி எறிந்துவிட வேண்டும்.

%d bloggers like this: