கோடை காலத்தில் கண்களை பாதுகாக்கும் வழிமுறை

கோடை என்றதும் நம் அனைவரின் மனதிலும் ஒரு பயம் கலந்த கவலை தொற்றிக்கொள்கிறது காரணம் வெப்பத்தின் தாக்கமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் ஆகும்.

நாம் நமது உடைகள், உணவுப் பழக்கங்கள் என நம் வாழ்க்கை முறையை தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்கிறோம் கோடையினால் நமது உறுப்புகளில் மிகவும் முக்கியமானதாக விளங்கும் கண்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுகிறது அதிக வெப்பத்தால் நம் உடலில் உள்ள நீர் சத்து அதிகம் உறிஞ்சப்படுகிறது. இதனால் கண்களில் வறட்சித்தன்மையும் எரிச்சலும் ஏற்படுகிறது.

மேலும் நாம் அதிக அளவில் குளிரூட்டிகளை (A/c) பயன்படுத்தும்போது அதில் இருந்து வரும் குளிர்ச்சியான காற்று நேரடியாக நம் கண்களில் படும்பொழுது கண்களில் வறட்சி மற்றும் எரிச்சல் ஆகியன உண்டாகும். மேலும் கோடைக்காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வைரஸ் மற்றும் வீக்கம், கண்கள் சிவத்தல், கண்களில் எரிச்சல், நீர் வடிதல், கண்களில் அரிப்பு போன்றவை ஏற்படுகிறது.

* அதிக அளவு நீர் பருகுதல்

* கண்ணிற்கு குளிர்ச்சியான கண்ணாடிகளை அணிதல்  (Cooler)

* அதிக அளவு பழங்கள் காய்கறிகள் கீரை வகைகள் எடுத்துக் கொள்ளுதல்

* Air Conditions காற்று கண்களில் நேரடியாக படாதவாறு பார்த்துக் கொள்ளுதல்

* கண் பயிற்சிகள் மேற்கொள்ளுதல் அடிக்கடி கண்களை நீரால் கழுவுதல்

* வெள்ளரிதுண்டுகளை கண்களில் வைத்தல்

*போதுமான அளவு தூக்கம் மேற்கொள்ளுதல் போன்றவை ஆகும்.

மேலும் கண்களில் ஏற்படும் மற்ற பார்வை குறைபாடுகளுக்கும், கண்நோய் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும், அருகில் உள்ள கண் மருத்துவமனையை நாடுவதே சிறந்த வழியாகும். தாங்களாகவே எந்த ஒரு மருந்தையும் மருத்துவரின் ஆலோசைனையின்றி எடுத்துக் கொள்ளுவது வேறு பல பக்க விளைவுகளையோ அல்லது வேறு பாதிப்புகளையோ ஏற்படுத்தக்கூடும்

%d bloggers like this: