இரத்தச்சோகையில் இருந்து பெண்களுக்கு தீர்வு தரும் நீர்முள்ளி

நோய் தீர்க்கும் மூலிகைகளில் மிக முக்கியமான நீர்முள்ளி செடி குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு மருந்தாக அமைகிறது.

நீர்முள்ளிச்செடியின் விதைகள் பெரும்பாலான உடல்நல பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வு தருபவையாகத் திகழ்கின்றன. வறண்ட உடலுக்கு நீர்ச்சத்தை

அளித்த உடலில் தேங்கிய நச்சுநீரை வெளியேற்றி உடல்நலத்தைக் காக்கும் தன்மை உடையது. நீர்முள்ளிச்செடி விதைகளில் வைட்டமின் E, இரும்பு சந்து, புரதம் உள்ளிட்டவை உள்ளன.  

பெண்களுக்கு பெரும்பாதிப்பாக விளங்கும் இரத்தச்சோகை, இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவும், இரத்தத்தில் ஹீமோகுளோபின் சிவப்பு அணுக்கள் குறைந்து காணப்படுவதாலும் ஏற்படுகிறது. மாதவிலக்கில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு காரணமாகவும், பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படலாம். 

இரத்த சோகையால் அவதிப்பட்டு வரும் பெண்கள் நீர்முள்ளி விதைகளை நீரில் இட்டு அதை நன்கு காய்ச்சி ஆறவைத்து நாற்பத்தெட்டு நாட்கள் தினமும் இருவேளை ஒரு டம்ளர் அளவு பருகி வரவேண்டும். இதன்மூலம் விரைவில் நலம் பெறலாம். புதுப்பொலிவு பெறலாம்.

%d bloggers like this: