தன்னை தானே செதுக்கும் சிற்பி!

நம் உடம்பை போல, அற்புதமான, ‘மெக்கானிசம்’ உலகில் வேறு எதுவும் இல்லை. சாப்பிடும் உணவு செரிமானமானதும், செல்கள், திசுக்கள், உள் உறுப்புக்கள், எலும்புகள் தங்களுக்கு வேண்டிய சத்துகளை எடுத்துக் கொள்கின்றன. ஒவ்வொரு செல்லும், குறிப்பிட்ட நாட்கள் உயிர்ப்புடன் இருந்து, பழைய செல்கள் அழிந்து, புதிய செல்கள் வந்து விடுகின்றன.

இன்று, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு மாறினால், அடுத்த, 21 நாட்களில் தோல், தன்னை புதுப்பித்துக் கொள்ளும்; 120 நாட்களில், புதிய ரத்த அணுக்கள் உருவாகும். தன்னைத் தானே சரி செய்துக் கொள்ளும் திறன் கொண்ட சிற்பி, நம் உடல்!
செங்கல் வைத்து வீடு கட்டுவதை போல, நிமிடத்திற்கு நிமிடம், தன்னை புதுப்பித்துக் கொள்ளும் திறன் கொண்டவை செல்கள். முழு தானியம், பழங்கள், காய்கறிகள், நட்ஸ், விதைகள் என, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இருந்தால், அழகாக, சுறுசுறுப்பாக, முழு, ‘எனர்ஜி’யுடன் இருப்போம்.
சுத்திகரிக்கப்பட்ட மாவு, ஜங்க் புட், சோடா என, வேண்டாததை சாப்பிட்டால், சோம்பேறியாக, மந்தமாக, உடம்பில் ஏதோ ஒரு பிரச்னையுடன் எப்போதும் இருப்போம்; அதன்பின், உடல் அமைப்பை மாற்ற முடியாததாகி விடும்.

%d bloggers like this: