ரிலையன்ஸ் ஜியோவால் இந்தியர்களுக்கு 60,000 கோடி ரூபாய் சேமிப்பாம்.. எப்படி?

இந்திய டெலிகாம் துறையில் ரிலையன்ஸ் ஜியோ 2016-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் நுழைந்தது மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் மொபைல் தரவை அளித்தது மட்டும் இல்லாமல் போட்டி நிறுவனங்களையும் தங்களைப் பின்பற்ற வைத்தது.

தற்போது இன்ஸ்டிடீயூட் அப் காம்ப்பிடீட்டிவ்னஸ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் புதிய டெலிகாம் நிறுவனம் 10 பில்லியன் டாலர் அதாவது 64,000 கோடி ரூபாய் வரை ஆண்டுக்கு என இந்திய நுகர்வோர் சேமிப்படைந்ததாகத் தெரிவித்துள்ளது.

தனி நபர் வருவாய்

தற்போது உள்ளது போன்ற பொருளாதார நிலை தொடரும் போது இந்தியாவில் தனிநபர் வருவாயானது ஜிடிபி-ல் 5.65 சதவீதமாக உயர ஜியோ உதவி புரிந்துள்ளது.

மொபைல் தரவு பயன்பாடு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்கிய 6 மாதத்தில் உலகளவில் அதிகமாக 1 பில்லியன் ஜிபி மொபைல் தரவு பயன்படுத்தும் நாடாக இந்தியா வளர்ந்துள்ளது எனவும், இதுவே முன்பு 200 மில்லியன் ஜிபி ஆக இருந்ததும் அறிக்கை மூலம் தெரிந்தது.

நுகர்வோர் சேமிப்பு

மொபைல் தரவை எப்போதும் இல்லாத அளவிற்குக் குறைந்த விலையில் ஜியோ அளித்ததினால் நுகர்வோரின் நிதி சேமிப்பானது 60,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

எப்படி?

பொதுவாக இந்திய மொபைல் தரவு நுகர்வோர் மாதத்திற்கு 1 ஜிபி பயன்படுத்தி வந்ததை 30 ஜிபி ஆக ஜியோ வாடிக்கையாளர்கள் பெற்றனர். அது மட்டும் இல்லாமல் 350 மில்லியன் இணையதளப் பயனர்களால் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய நிதி நன்மையை அளிக்கும்.

ஜியோ

புதிய டெலிகாம் நிறுவனமாக வந்து இணையதளத் தரவு முக்கியமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு இலவச குரல் அழைப்பு சேவைகளை அளித்து 75 சதவீத லாபத்தினை இதன் மூலம் மட்டுமே ஜியோ பெற்றுள்ளது.

அமெரிக்காவை பின் தள்ளிய இந்தியா

ஜியோ சேவைக்கு வந்த பிறகு செயலிகள் பதிவிற்க்கம் செய்வதில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் உள்ள சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்திய வளர்ந்துள்ளது.

ஜிடிபி

இன்ஸ்டிடீயூட் அப் காம்ப்பிடீட்டிவ்னஸ் அறிக்கை ஜியோ இந்தியாவின் ஜிடிபி-க்கும் மிகப் பெரிய பயனை அளித்துத் தனி நபர் ஜிடிபி-ஐ 5.65 சதவீதமாக உயர்த்த உதவியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2.9 லட்சம் கோடி நிகர மதிப்புடன் இந்தியாவின் 1.87 சதவீத ஜிடிபி-ஐ அளிக்கிறது என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

%d bloggers like this: