அச்சம் தவிர் – Enochlophobia

சிலர் கூட்டத்தைக் கண்டு பயந்து  தனியே நிற்பதுண்டு. அவர்களுக்குக் கூட்டம் என்றாலே அலர்ஜி; பயம். அந்தப் பயத்துக்குத்தான் Enochlophobia என்று பெயர். அதாவது அதிக நபர்கள் ஒன்றாகக் கூடியிருக்கும் கூட்டத்தில் பங்கேற்பதில் ஏற்படும் பயம்

.கூட்டம் என்பது இவர்களுக்கு அந்நியர்களால் சூழப்பட்ட இடமாகத் தோன்றும். கூட்டத்தில் தாம் தொலைந்து போய் விடுவோம் என்ற பயமும், கூட்டத்தில் நசுங்கி விடுமோ என்கிற பயமும் அதிகம் இருக்கும். ஆண்களைவிடப் பெண்களே இந்த நோயால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். அதிகப்படியான இரைச்சல் பிடிக்காதவர்கள் மற்றும் கூச்ச உணர்வு உள்ளவர்கள் கூட்டத்தை விட்டு விலகி இருக்க முயற்சி செய்வதுண்டு. கிருமிகள் தொற்றும் அபாயம் உள்ளதாகக் கருதுபவர்களும் கூட்டத்தைவிட்டு விலகி இருக்க நினைப்பார்கள். சிலர் தாழ்வு மனப்பான்மையின் காரணமாகக் கூட்டத்தைத் தவிர்க்கின்றனர். பாதிப்புக்கு இதுதான் காரணம் என எதுவும் வரையறுக்கப்படவில்லை.

அறிகுறிகள்: ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான உடல் மற்றும் உணர்ச்சி அறிகுறிகள் தோன்றலாம். இவர்கள் மக்கள் கூட்டத்தில் விடப்படும்போது பீதி அடைகின்றனர். சாதாரணமாகச் செயல்பட இயலாமை, மூச்சு முட்டுவது, குமட்டல், அதிகரிக்கப்பட்ட இதயத் துடிப்பு, உயர் ரத்த அழுத்தம், நடுக்கம் அல்லது அதிகப்படியான வியர்வை.
சிகிச்சை: சுய உதவி சிறந்த சிகிச்சையாகக் கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவருக்குப் பின்வரும் வழிகளை முயற்சி செய்யலாம்.
* ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி.
* நெருங்கிய நண்பர் மற்றும் குடும்ப நபர்களின் ஆலோசனை.
* சிறுசிறு கூட்டங்களில் ஆரம்பித்துப் பெரிய கூட்டங்களில் பங்கேற்பது போன்ற செயல்களில் ஈடுபடச் செய்யலாம்.

%d bloggers like this: