இந்த ஒரு எண்ணெய், 8 வகை பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வளிக்கும் தெரியுமா?

பருக்களைக் குணப்படுத்தும்

பாதாம் எண்ணெய் சருமத்தின் pH அளவை சீராக பராமரித்து, சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவி, பருக்கள் மற்றும் பருக்களால் வரும் தழும்புகளை சரிசெய்ய உதவும்.

அதற்கு 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி சருமத்தில் தடவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைக் குறைக்கலாம்.

சரும வறட்சி தடுக்கப்படும்

இன்று ஏராளமானோர் சந்திக்கும் ஓர் பிரச்சனை சரும வறட்சி. இந்த சரும வறட்சியைப் போக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பாதாம் எண்ணெய். இந்த எண்ணெயை டோனர் போன்றும் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்தின் இளமைத்தன்மையை அளித்து, சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

அதற்கு 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி நன்கு குலுக்கி, பின் அதை முகத்தைக் கழுவிய பின் முகத்தில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இப்படி அன்றாடம் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். இந்த கலவையை வேண்டுமானால், ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.

மென்மையான உதடு

உங்கள் உதடு கருமையாகவும், வறண்டு மென்மையிழந்தும் உள்ளதா? இப்பிரச்சனைக்கு பாதாம் எண்ணெய் ஒரு நல்ல தீர்வளிக்கும். அதற்கு அன்றாடம் பாதாம் எண்ணெயை தவறாமல் பயன்படுத்த வேண்டும். அதுவும் இரவு தூங்கும் முன் தினமும் பாதாம் எண்ணெயை உதட்டில் தடவ வேண்டும். உங்களது உதடு பிங்க் நிறத்தில் வேண்டுமானால், பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கி, வெயிலில் உலர்த்தி, பின் அதை பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு சிட்டிகை பீட்ரூட் பொடியை 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் கலந்து, உதட்டின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒரு முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

மேக்கப் ரிமூவர்

முகத்தில் போடப்பட்ட மேக்கப்பை அன்றாடம் இரவில் தூங்கும் முன் நீக்க வேண்டும். அதுவும் கெமிக்கல் கலந்த மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை வழியால் நீக்கினால், சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்.

அதற்கு பஞ்சுருண்டையில் பாதாம் எண்ணெயை நனைத்து, முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். தினமும் மேக்கப்பை நீக்க இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதனால் மேக்கப் பயன்படுத்துவதால் சருமத்தில் ஏற்படும் வறட்சி தடுக்கப்படும்.

குதிகால் வெடிப்பை சரிசெய்யும்

பாதாம் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் காம்பினேஷன் குதிகால் வெடிப்பை சரிசெய்யும். அதற்கு பாதாம் எணணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் ஒன்றாக கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் குதிகாலைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்கள் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.

சரும கருமையைப் போக்கும்

கோடைக்காலத்தில் அடிக்கும் வெயிலால் பலரது சருமம் கருமையாகும். இப்படி கருமையாகும் சருமத்தை பாதாம் எண்ணெய் கொண்டு சரிசெய்ய முடியும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

முடி வறட்சியைப் போக்கும்

உங்கள் முடி வறண்டு அசிங்கமாக காணப்படுகிறதா? இதற்கு பாதாம் எண்ணெய் நல்ல நிவாரணம் அளிக்கும். அதற்கு சிறிது பாதாம் எண்ணெயை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்ய, தலைமுடி மென்மையாக இருக்கும்.

கருவளையத்தைக் குறைக்கும்

நாள் முழுவதும் ஓய்வின்றி கண்கள் வேலை செய்து சோர்வடைந்திருந்தால், அதில் இருந்து பாதாம் எண்ணெய் விடுவிக்கும். அதற்கு பாதாம் எண்ணெயை ஃப்ரிட்ஜில் வைத்து, பின் பஞ்சுருண்டைப் பயன்படுத்தி அந்த எண்ணெயைத் தொட்டு, கண்களைச் சுற்றி தடவுங்கள். இதனால் கண்களைச் சுற்றியுள்ள வீக்கம் குறையும் மற்றும் கருவளையமும் நீங்கும்.

%d bloggers like this: