Advertisements

மோடியிடம் எடப்பாடி ஃபைல்!

லைமைச்செயலாளரை அழைத்து கவர்னர் விசாரணை செய்கிறார்… உடனடியாக கவர்னரை அழைக்கிறது டெல்லி… பிரதமரையும் மத்திய உள்துறை அமைச்சரையும் சந்தித்துவிட்டுச் சென்னை திரும்பும் கவர்னர், முதல்வரையும் துணை முதல்வரையும் அழைத்து விசாரணை நடத்துகிறார். இவையெல்லாம் வழக்கமாக நிகழும்

சாதாரண நடவடிக்கைகள் அல்ல. ‘‘டெல்லி எதையோ திட்டமிடுகிறது. அதற்கான முன்னேற்பாடுகள்தான் இவை’’ என்று தந்திரபூமியான தலைநகரத்திலிருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதது மத்திய அரசுக்கு மட்டுமல்ல, மாநில அரசுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாத கால அவகாசம் கேட்டும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் சில விளக்கங்கள் கேட்டும், சட்டப் பிரச்னையாக இதை மாற்றிவிட்டு அமைதியாக உள்ளது மத்திய அரசு. அதேபோல மாநில அரசு இருக்க முடியாது அல்லவா? அதனால், அ.தி.மு.க எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் மூன்று வார காலமாக இடைவிடாத போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதம் இருக்க அ.தி.மு.க முடிவெடுத்தது. உண்ணாவிரதம் இருப்போர் பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பெயர்கள் முதலில் இல்லை. ஆனால், நாடு முழுவதும் காவிரி பிரச்னை கொழுந்துவிட்டு எரிவதால், கடைசி நேரத்தில் இவர்கள் இருவரும் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து உட்கார்ந்தனர்.

தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. தேர்தலில் போட்டியிடாத இயக்கங்கள், அமைப்புகள், விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைவரும் கட்சிகளை மறந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். மற்ற போராட்டங்களைப்போல இதை ஆளும்கட்சியால் அடக்க முடியவில்லை. இதை உன்னிப்பாகக் கவனித்து வந்தார் கவர்னர். ‘எல்லோரும் போராட்டம் நடத்தட்டும். அப்போதுதான் மத்திய அரசு இறங்கிவரும்’ என மாநில ஆட்சியாளர்கள் நினைப்பதாகச் சந்தேகப்பட்டார் கவர்னர். இந்தச் சந்தேகங்க ளுக்கான விளக்கங்களைக் கேட்பதற்காகத் தலைமைச் செயலாளரை அழைத்து கவர்னர் பேசினார். “ஆளும்கட்சியே இதுமாதிரியான போராட்டங்கள் நடக்கட்டும் என நினைக்கிறதா?” என்பது மாதிரி சில கேள்விகளை அதிகாரிகளிடம் கவர்னர் கேட்டாராம். சொல்லப்பட்ட பதிலில் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை.
ஏற்கெனவே திட்டமிட்டபடி காஞ்சி சங்கர மடத்துக்குச் கவர்னர் சென்றார். அங்கு இருந்தபோதுதான், டெல்லியிலிருந்து தகவல் வந்தது. உடனே பரபரப்புடன் ஃபைல்களை ரெடி செய்த கவர்னர், டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சரியில்லை என்ற தகவல் மத்திய உளவுத்துறை மூலமாக மத்திய அரசுக்குச் சென்றுள்ளது. காவிரி போராட்டங்களை மாநில அரசு சரியாகக் கையாளவில்லை என்ற புகாரும் அதில் இருந்தது. மத்திய அரசு நிறுவனங்களுக்கு எதிராகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் நடத்திய போராட்டங்கள் குறித்த முழு ரிப்போர்ட்டையும் மத்திய உளவுத் துறை அனுப்பி வைத்துள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை கண்காட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதாகத் திட்டமிட்டிருந்த சூழலில், இத்தகைய கொந்தளிப்புகள் அதிக மாகிக்கொண்டே போவது நல்லதல்ல என மத்திய அரசு நினைத்தது. எனவே, டெல்லிக்கு கவர்னரை அழைத்தனர்.
சட்டம் ஒழுங்கு குறித்த விசார ணைக்காக அழைக்கப்பட்டாலும், காவிரிப் பிரச்னையை முன்வைத்துத் தமிழகத்தில் நடக்கும் அரசியல், காவிரிப் போராட்ட நேரத்தில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, மத்திய அரசுக்கு எதிராகத் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள், மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க ஆட்சியின் ஊழல் முறைகேடுகள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் உள்பட ஒன்பதுவிதமான விஷயங்கள் அடங்கிய ஃபைலுடன் போனார் கவர்னர். சட்டம் ஒழுங்குப் பிரச்னை பற்றித் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோர் கொடுத்த விளக்கங்களும் அதில் உள்ளனவாம்.
டெல்லி சென்ற கவர்னர், முதலில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது, எடப்பாடி அரசு தொடர்பான ஃபைலைக் கொடுத்துவிட்டு கவர்னர் சொன்ன விஷயங்களை, இறுக்கமான முகத்துடன் பிரதமர் கேட்டுக்கொண்டாராம். ‘‘சட்டம் ஒழுங்கு மிக முக்கியம். அதில் கவனமாக இருங்கள். மற்ற அரசியல் பிரச்னைகளை உன்னிப்பாகக் கவனியுங்கள். எதை எப்போது செயல் படுத்துவது என்று பின்னர் அறிவுறுத்தப்படும்’’ என்று சொன்னாராம் பிரதமர். பிறகு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கவர்னர் சந்தித்தார். சட்டம் ஒழுங்கு பற்றிச் சில விளக்கங்களைக் கேட்ட ராஜ்நாத் சிங், ‘‘மத்திய பாதுகாப்புப் படையை எப்போது வேண்டுமானாலும் அனுப்பி வைக்கத் தயாராக இருக்கிறோம்’’ என்றாராம்.
கவர்னர் டெல்லியில் இருந்த நேரத்தில்தான், மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதத்தில் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் உட்கார்ந்திருந்தனர்.
‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்தில் எழுந்துள்ள சட்டம் ஒழுங்கு பிரச்னை விரைவில் முடிந்துவிடும். ஆனால், மாநில அரசு செய்துவரும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று தன் டெல்லி சகாக்களிடம் கவர்னர் சொன்னதாகத் தகவல். தமிழகச் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக மு.க.ஸ்டாலினை அழைத்து கவர்னர் பேசினார் அல்லவா? அப்போது, ‘‘இந்த ஆட்சியில் ஊழல்கள் பெருகிவிட்டன. இதை நீங்கள் தடுக்க வேண்டும்’’ என ஸ்டாலின் சொன்னதாகவும், ‘‘அவை அனைத்தையும் பிரதமர் அறிவார்” என்று கவர்னர் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த வாரம், கவர்னருக்கு இரண்டு மூன்று ஃபைல்கள் வந்தன. அனைத்துக்கும் ஒரே பதிலையே கவர்னர் சொல்லியிருக்கிறார். அந்த பதில், ‘‘மே மாதம் வரை பெண்டிங்கில் வையுங்கள்’’ என்பதுதான்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: