Advertisements

அம்மா… செல்போனைக் கொஞ்சம் தள்ளிவைங்க!

குழந்தை வளர்ப்பு என்பதே ஒரு பெரிய சவால்தான். அதிலும் 4-8 வயது குழந்தைகளுடன் ஓட வேண்டும் என்றால் சக்கரம் கட்டிக்கொண்டாலும் ஈடுகொடுக்க முடியாது. வீட்டிலிருந்தால், குழந்தைகள் வீட்டையே புரட்டிப் போட்டுவிடுவார்கள் என எண்ணும் பெற்றோர், குழந்தை தவழ ஆரம்பித்ததுமே க்ரெச், ப்ளே ஸ்கூல் என வீட்டைவிட்டுக் கடத்திவிடுவார்கள். 

தப்பித்தவறி விடுமுறையன்று குழந்தை வீட்டில் இருந்தால், அந்தக் காலத்தில் கார்ட்டூன் சேனல்கள், வீடியோ கேம்கள். இப்போதோ ஆல் இன் ஆல் ஸ்மார்ட்போன்கள். அம்மாக்களும், `குழந்தை கையில் செல்போன் கொடுத்தால் போதும்; அமைதியாக இருக்கும்’ என நினைத்துவிடுகின்றனர். அப்படிப்பட்ட தாய்மார்களுக்குச் சொல்ல, மருத்துவர்களிடம் முக்கியமான அட்வைஸ் ஒன்று இருக்கிறது. அது, `குழந்தைகளிடம் இருந்து செல்போனைக் கொஞ்சம் தள்ளி வைங்க’ என்பதே.
செல்போன் உபயோகத்தின்போது ஏற்படும் கதிர்வீச்சு என்பது மிகவும் ஆபத்தானது என நம் அனைவருக்குமே தெரியும். அதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளும் இழப்புகளும் எவ்வளவு என உங்களுக்குத் தெரியுமா?

குழந்தைகளுக்கே அதிக பாதிப்பு

சமீபத்தில் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஓர் ஆய்வில், செல்போன் கதிர்வீச்சு பெரியவர்களைவிட குழந்தைகளைப் பத்து மடங்கு அதிகமாகத் தாக்கும் எனக் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக கைக் குழந்தைகளுக்கும் 4-8 வயதுள்ள குழந்தைகளுக்கும் செல்போன் கதிர்வீச்சு கணிக்க முடியாத அளவு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. காரணம், பெரியவர்களைவிடக் குழந்தைகளின் தலைப்பகுதி மிகவும் மிருதுவானதாக இருக்கும். மேலும், தலைப்பகுதி எலும்புகளும் சருமமும் வளர்ச்சி நிலையிலேதான் இருக்கும். இதனால் செல்போன் கதிர்வீச்சின் பாதிப்பு குழந்தைகளுக்குத்தான் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள். யேல் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற இதுபோன்ற கதிர்வீச்சு பாதிப்புகள், கருவில் வளரும் குழந்தை பின்னாளில் ஹைப்பர் ஆக்டிவ்வாக நடந்துகொள்வதற்கான தன்மையை அதிகரிப்பதாகத் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பது எப்படி?

* முற்றிலுமாக செல்போனைக் குழந்தைகளிடமிருந்து தள்ளி வைப்பது சாத்தியமல்ல; முடிந்தவரை தள்ளிவைப்பது சாத்தியமே. ஆகவே, அதிகநேரம் குழந்தைகளை மொபைல் போன் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.

* குழந்தைகள் விளையாடும் இடங்களுக்கு அருகிலோ, தூங்கும் பகுதிக்கு அருகிலோ செல்போன் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* வீட்டில் ‘வை-ஃபை’ இணைப்பு இருந்தால் அதற்கு முதலில் தடா போடுங்கள். தவிர்க்க முடியாது என்றால் பாஸ்வேர்டு மூலம் நீங்கள் அதை உங்கள் கட்டுப்பாட்டில் இயக்குங்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: