Advertisements

சென்னை வருவாரா பிரதமர்?

ழுகார் வந்ததும் அவரைப் பார்த்து நாம் கேட்டது, ‘சென்னை வருவாரா பிரதமர்?’ என்ற கேள்வியைத்தான்!
‘‘பிரதமருக்கே அந்தக் குழப்பம் இருப்பதாகச் சொல்கிறார்கள். டெல்லி வந்த தமிழக கவர்னரிடம் பிரதமர் இதுபற்றிக் கேட்டாராம். ‘சட்டம் ஒழுங்கைச் சீர்செய்து விடுவோம்’ என்று சொல்லிவிட்டு வந்துள்ளார் கவர்னர். சென்னை அருகே நடக்கவிருக்கும் ராணுவக் கண்காட்சி என்பது மத்திய அரசின் சாதாரண விழா அல்ல. உடனடியாகத்

தேதியை மாற்றுவதோ, பிரதமர் வராவிட்டால் பரவாயில்லை என்று சொல்வதோ, சரியானதல்ல என்று மத்திய அரசு நினைக்கிறது.’’
‘‘ஏன்?’’
‘‘மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் ஏப்ரல் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடக்கவிருக்கிறது. ராணுவத்துக்குத் தேவையான பொருள்களை உற்பத்திசெய்யும் நிறுவனங்கள் பலவும் இங்கு வந்து குவியப் போகின்றன. 523 இந்திய நிறுவனங்களும் 154 சர்வதேச கண்காட்சியாளர்களும் வருகிறார்கள். உள்நாட்டில் தயாரிக்கப்படும் 70 பொருள்கள் காட்சிக்கு வைக்கப்படுமாம். இப்படிப்பட்ட கண்காட்சியைத் தேதி மாற்றி வைப்பதோ,  ரத்து செய்வதோ இயலாது.’’

‘‘ஓஹோ!”
‘‘ஏப்ரல் 8-ம் தேதி, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வந்து கண்காட்சி ஏற்பாடுகளைப் பார்வையிடுகிறார். அப்போது தமிழக நிலைமைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிவார். அவர் என்ன ரிப்போர்ட் தருகிறாரோ, அதை வைத்துத்தான் பிரதமர் அலுவலகம் முடிவெடுக்குமாம். ‘பிரதமர் சென்னைக்கு விமானத்தில் வந்து, கண்காட்சி நடக்கும் இடத்துக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். எனவே, பிரச்னை இருக்காது’ என்கிறார்கள் பிரதமர் அலுவலக அதிகாரிகள்.’’
‘‘பிரதமருக்குக் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் தி.மு.க தீவிரமாக இருக்கிறதா?’’
‘‘ஆமாம்! காவிரி மேலாண்மை வாரியத்துக்காக ஏப்ரல் 5-ம் தேதி எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்திய முழு அடைப்பு வெற்றி பெற்றதில் ஸ்டாலின் உற்சாகமாக இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் வெற்றிகரமாக நடத்திய முழு அடைப்பு இது. இந்த உற்சாகத்துடன், பிரதமருக்குக் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்துக்கு மாநிலம் முழுவதுமிருந்து தொண்டர்களைச் சென்னைக்கு வரச் சொல்லி யிருக்கிறார் ஸ்டாலின். இதற்கு, பெருமளவு கூட்டத்தைக் கூட்ட நினைக்கிறார். கறுப்புக் கொடி காட்ட அனுமதி கிடைக்காது என்றாலும், தடையை மீறி நடத்துவதற்குத் தேவையான விஷயங்களை இப்போதே தி.மு.க தொடங்கிவிட்டது. இந்தப் போராட்டம் அகில இந்திய கவனத்தைத் தி.மு.க-வுக்குக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறார் ஸ்டாலின்.’’

‘‘கடைசியில் எடப்பாடியும் பன்னீர் செல்வமுமே உண்ணாவிரதத்தில் உட்கார்ந்து விட்டார்களே?’’
‘‘ஆமாம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி நடத்திய உண்ணாவிரதமா? அல்லது, கருணாநிதிக்கு எதிரான உண்ணாவிரதமா என்று புரியாத அளவுக்கு முதலமைச்சர் பேச்சு இருந்தது. அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான, ‘நமது புரட்சித் தலைவி அம்மா’வின் செய்தித் தலைப்பிலேயே, ‘மத்திய அரசைக் கண்டித்துக் கழகம் நடத்திய உண்ணாவிரத அறப்போராட்டம்’ என்றுதான் அச்சிட்டனர். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, துணை முதல்வர் பன்னீர்செல்வமோ, மத்திய அரசை மறந்தும் கண்டிக்கவில்லை. கருணாநிதியைத்தான் கண்டித்துக்கொண்டிருந்தனர். மத்திய அரசை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க முதலில் தயங்கினார்கள். ஆனால் ‘மத்திய அரசுக்கு எதிராக எம்.ஜி.ஆர் உண்ணாவிரதம் இருந்துள்ளார். ஜெயலலிதாவும் உண்ணாவிரதம் இருந்துள்ளார்’ என்று சிலர் தூண்டிவிடவே, இருவரும் தலையாட்டினார்களாம். உண்ணாவிரதம் உட்கார்ந்தார்களே தவிர பயம் போகவில்லை!”
‘‘ஏன் பயம்?”
‘‘கவர்னரின் டெல்லி விசிட்தான் காரணம். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அடிக்கடி டெல்லி செல்லக்கூடியவர் என்றாலும், தமிழகம் முழுவதும் காவிரிப் போராட்டம் நடக்கும் சூழ்நிலையில் அவர் டெல்லி சென்றது, எடப்பாடி வயிற்றில் புளியைக் கரைத்துவருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்தார். ‘முன்பெல்லாம் மத்திய அரசை எதிர்த்துப் போராட்டம் அறிவித்தாலே, முன்னெச்சரிக்கையாகப் போராட்டக்காரர்களைக் கைது செய்வார்கள். இந்தமுறை ஏன் அப்படிச் செய்யவில்லை எனத் தமிழக முதல்வரிடம் விளக்கம் கேளுங்கள்’ என்றாராம் ராஜ்நாத் சிங். அதற்குமுன் பிரதமரை கவர்னர் சந்தித்தார். அப்போது, தினகரன் பக்கம் போன 18 எம்.எல்.ஏ-க்கள் பதவிநீக்கம் தொடர்பான வழக்கு குறித்தும் பிரதமர் கேட்டதாகத் தெரிகிறது. ‘அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அடுத்தகட்டத் தமிழக அரசியல் நிலவரங்கள் எப்படி இருக்கும்?’ என்று பிரதமர் கேட்டிருக்கிறார்.”
‘‘என்ன சொன்னாராம் கவர்னர்?”
‘‘நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் என்றாராம் கவர்னர். ‘அதுவரை காத்திருப்போம்’ என்றாராம் பிரதமர். இந்தத் தகவல்கள் எடப்பாடிக்குக் கிடைத்து ஏக வருத்தத்தில் இருக்கிறாராம்!” என்றபடி பறந்தார் கழுகார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: